Friday, November 15, 2013

மெளனம் பேசுவோம்

மெளனம் பேசுவோம்

ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விசயங்களை ஒரு மெளனம் சொல்லிவிடும். மெளனம் ஒரு மகத்தான சக்தி. மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள் அதை தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எதை எப்போது எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்தான், ஆனால் அதைவிட அவசியம் எப்போது பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. ஒரு விசயத்தை சொல்வது கலை என்றால் ஒரு விசயத்தை சொல்லாமல் சொல்வது அதைவிட நுணுக்கமான கலை, மெளனத்தை பேச வைக்கிற கலை அது. சொல்லாமல் சொல்லும் கலை என்கின்றனர் சான்றோர். இக் கலையில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தார் கவியரசு கண்ணதாசன் , அவர் ஒரிடத்தில் எழுதுகிறார் என் தந்தைக்கு மது, மங்கை, மாமிசம் முதலிய எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனால் நிறைய சீட்டாடுவார், நான் சீட்டு மட்டும் ஆடமாட்டேன் என்றார், இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் சொல்லாமலே நமக்கு புரிகிறதல்லவா?

தத்துவமேதை பெர்னாட்சா ஒரு முறை தனக்கு 25 மொழிகள் தெரியும் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். மற்றவ...ர்கள் எப்படி என்று விசாரிக்க " ஆமாம் என்னால் 25 மொழிகளில் மெளனமாக இருக்க முடியும் " என்றார் குறும்பாக. ளெனம் சர்வார்த்த சாதகம் என்கிறது சமஸ்கிருதம், மெளனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். காஞ்சி பரமாச்சாரி அவர்கள் மெளன விரதம் இருப்பார், அதற்கு காஸ்டமெளனம் என்று கூறுகிறார்கள். சைகைகளால் கூட பேசாமல் இறை சிந்தனையில் தோய்ந்திருக்கும் மிக உயர்ந்த மெளனம் அது. ஆனால் தாம் அத்தைய மெளன விரதம் இருந்த நாளொன்றில் தொலை தூரத்திலிருந்து தம்மை தேடி மாணவர் குழு ஒன்று வந்தபோது அவர் தம் மெளனத்தை கலைத்து விட்டு பேசினார் என்கிறது வரலாறு. காரணம் வந்த மாணவர்கள் பார்வையற்றவர்கள் அவர்கள் தம்மைக் கண்களால் காண இயலாது தனது மெளன சைகைகளும் அவர்களுக்கு தெரியாது தம் குரலையாவது அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது ஆச்சாரியாரின் கருனை உள்ளம்.இதே போல் ஸ்ரீ ரமணர் மெளனத்தாலேயே ஏராளமான பேருக்கு உபதேசம் செய்திருக்கிறார். அவர் முன் அமர்ந்தால் அவரது ஒளிபொங்கும் விழிகள் அடியவர்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிடும் என்கிறார்கள் அவரைத்தரிசித்த அன்பர்கள், மெளனம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதற்கும், சண்டை சச்சரவு நேரங்களிலும் மெளனம் சாதிப்பது மிக சிறப்பை காட்டும் மாமியார் மருமகள் சண்டை, சகோதரர்கள் சண்டை, தாய்மகன் சண்டை தகப்பன் மகன் சண்டை ஏதும் வராது.

சொல்லாமல் சொல்லும் கலையால் ஒரு வினேதமான செயல்களும் நடப்பதுண்டு அன்பர் ஒருவர் நாள்தோறும் காலை ம10 மணி வரை மெளனம் இருப்பார், இது தெரியாத அவரது நண்பர் காலை 10 மணிக்குள் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றிருக்கிறார். அவர் பேசவில்லை 10 மணிக்கு மேல் பேசி அவரிடம் நண்பர் இப்படிக் கோபித்துக் கொண்டாராம். ஏனையா? பத்து மணிவரக்கும் நீங்கள் மெளனவிரதம் இருப்பதை சொல்லி தொலைத்திருந்தால் மீண்டும்மீண்டும் போன் செய்யாமல் இருந்திருப்பேனல்லவா? என்றாராம்

No comments:

Post a Comment