பிரம்மத்திலிருந்து வேதம் வெளிப்பட்டது..வேதத்திலிருந்து கர்மம்(செயல்).கர்மத்திலிருந்து யக்ஞம். .யக்ஞத்திலிருந்து மழை உருவானது..பிறகு உணவு உருவானது,அடுத்து உயிர்கள் உருவாகின.
------------
பிரம்மம் என்பது செயல்அற்ற நிலையில் இருக்கும் இறைவன்.(சத்சித்ஆனந்தம்)
இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே வேதம் வெளிப்பட்டது. வேதம் என்பது புத்தகங்கள் அல்ல. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் பல்வேறு நியதிகள்,இயக்கங்கள்,சட்டதிட்டங்கள் அனைத்தும் வேதம்....
உதாரணமாக....புவியீர்ப்பு விசை ஒரு வேதம். நியுட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்.அவர் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த புவியீர்ப்புவிதி இயங்கி கொண்டு தான் இருந்தது.ஒரு வேளை அவர் கண்டு பிடிக்காமல் இருந்தாலும் அது இருக்கும்.அதே போல் இந்த பிரபஞ்சத்தில் மனிதன் கண்டுபிடித்த,இனி கண்டு பிடிக்க இருக்கின்ற அனைத்து விதிகளும் ஏற்கனவே இருப்பவை தான்.புதிதாக எதையும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த அறிவு களஞ்சியம் தான் வேதம்.வேதத்திற்கு தொடக்கம் இல்லை முடிவும் இல்லை.இது எக்காலத்திலும் இருக்கும்.வேதம் எங்கும் நிறைந்துள்ளது.
வேதத்திலிருந்து செயல்கள் உருவாகின்றன.திடம்,திரவம்,வாயு,வெப்பம்,ஆகாயம்(அணுக்களுக்கிடையே உள்ள இடைவெளி) என்ற பஞசபூதங்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சம் உருவானது
எதையும் எதிர்பாராமல் கொடுத்துக்கொண்டே இருப்பது தான் யக்ஞம் .இயற்கையில் அனைத்து இடங்களிலும் இந்த யக்ஞம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காற்றுவீசுகிறது இது ஒரு யக்ஞம்,மழைபெய்கிறது இது ஒரு யக்ஞம்.சூரியன் வெப்பத்தை தருகிறது இதுவும் ஒரு யக்ஞம்.
மழைபெய்ததும் பூமியில் உணவு உருவாகிறது.பிறகு உயிர்கள் உருவாகின்றன.

No comments:
Post a Comment