Tuesday, November 12, 2013

''ஸுமுகாய நமஹா என்று விநாயகப்பெருமானை வணங்குகிறோம்

''ஸுமுகாய நமஹா என்று விநாயகப்பெருமானை வணங்குகிறோம்.
எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் தொணத் தொண என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை ஸுமுகர் என்பர். இதற்கு நல்ல வாயை உடையவர் என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யா கணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.''

No comments:

Post a Comment