எங்கு பார்த்தாலும் வெப்பம் தகிக்கிறது. கேட்டால், இப்போது "அக்கினி
நட்சத்திரம்' என்கிறார்கள். பல நாட்கள் நம்மைப் பாடாய் படுத்துகிறான் பகலவன்.
(ஒவ்வொரு ஆண்டும் மே 4ல் துவங்கி 28 வரை அக்கினியின் தகிப்பில் நாம் சிக்கிக்
கொள்கிறோம்)
இது ஏன் என்பதற்கு ஓர் அற்புதமான கதையைச் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர். அது...!
அபிமன்யுவும், உப பஞ்சபாண்டவர்களும் பிறந்த பின் நடந்த நிகழ்ச்சி இது.
ஒருநாள்.....
""கண்ணா! வெயில் அதிகமாக இருக்கிறது. யமுனைக்குப் போய்விட்டு, மாலையில் திரும்பி வரலாம்...'' என்றான் அர்ஜுனன்.
அதன்படி எல்லாரும் போனார்கள்.
அங்கே அர்ஜுனனும் கண்ணனும் காண்டவ வனத்தில் உலவிக்கொண்டிருந்த போது...
ஆச்சாமரம் போல் உயரம், உருக்கி விட்ட தங்கம் போல நிறம், செம்பட்டை மீசை, பாலசூரியன் போல ஒளி, மரவுரி, ஜடாமுடி, தாமரை இதழ் போல் கண்கள்..ஆகியவற்றுடன் ஜொலித்துக்கொண்டு, அந்தணன் ஒருவன் வந்தான்.
வந்தவன், கிருஷ்ண அர்ஜுனர்களிடம், ""நான் அக்கினி பகவான். சுவேதகி என்னும் மன்னன் 12 வருட காலம், ஒரு தூண் அளவு பருமனான அளவு நெய்யைப் பொழிந்து யாகம் செய்தான். அளவிற்கு அதிகமான நெய்யை உண்டதால், என் ஒளியும் சக்தியும் குன்றிப்போய்விட்டது. அந்த ஒளியையும் சக்தியையும் பெறுவற்காக, இந்த காண்டவ வனத்தை எரிக்க முயன்றேன். ஏழு தடவை முயன்றும் முடியவில்லை. இந்திரன் அவ்வப்போது அணைத்து விடுகிறான். இந்த வனத்தை எரித்து, நான் முன்புபோலவே விளங்க அருள் செய்யுங்கள்,'' என வேண்டினான்.
கூடவே அற்புதமான வில், இரண்டு அம்பறாத் தூணிகள், வானரக்கொடி கொண்ட ரதம், சக்கரம், கதை ஆகியவற்றையும் கொடுத்தான். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி...
அத்தேரில் ஏறிக் கண்ணனும், அர்ஜுனனும் காண்டவ வனத்தை எரிக்கத் தொடங்கினார்கள். தடை செய்த இந்திரனையும் வென்று வனத்தை எரித்து முடித்தார்கள்.
அக்கினி பகவான் தன் ஒளியையும் சக்தியையும் மீண்டும் பெற்றான்.
கண்ணனும், அர்ஜுனனும் காண்டவ வனத்தை தகித்த அந்தக்காலமே அக்கினி நட்சத்திர காலம்.
அக்கினி நட்சத்திர தகிப்பில் இருந்து தப்புவதற்காக குளிர்சாதன (ஏ.சி) அறையில் புகுந்தாலும்...
வெப்பத்தில் இருந்து தப்பி விடுகிறோம். ஆனால், நமது உள்ளத்தில் இருக்கும் கவலை, துயரம், துக்கம் என்னும் வெப்பங்களில் இருந்து நம்மால் தப்ப முடியவில்லை. அவற்றைத் தீர்க்கும் வல்லமை குளிர்சாதன அறைக்கு இல்லை.
அக்கினி பகவானின் குறையைத் தீர்த்த அந்தக் கண்ணன், நம் உள்ளங்களிலும் எழுந்தருளி இருந்து.. நம்மைத் தகிக்கும் துயரங்களில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுவோம். கண்ணன் நம் கவலைகளைத் தீர்த்து அருள் புரிவார்.

No comments:
Post a Comment