Thursday, May 8, 2014

மகா விஷ்ணுக்கு நீல நிறம் ஏன்?

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தனர். கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். அப்போது மந்தார மலை சரியத் தொடங்கியது.

அதனை தாங்குவதற்காக மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து மலையின் அடிப்பகுதிக்கு சென்று மலையை தாங்கிப் பிடித்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் திருப்பாற்கடல் கடையப்பட்டது.

அப்போது ஆழ்கடலில் இருந்து கொடிய விஷம் தோன்றியது. ஆமை வடிவில், மந்தார மலையை தாங்கிக் கொண்டிருந்த மகா விஷ்ணுவை அந்த கொடிய விஷம் தாக்கியது. அதனால் அவர் நீலநிறத்துக்கு மாறினார் என்பது புராண வரலாறு

No comments:

Post a Comment