Thursday, May 8, 2014

சிவன் அன்னம் பெற்ற நாள்


 காசியில் ஒரு தடவை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதி அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள்.

உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதில் இருந்து வற்றாத உணவை எடுத்து, எடுத்து மக்களுக்கு கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினாள். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கி சாப்பிட்டார்.

அந்த நாள் தான் அட்சய திரிதியை. எனவே அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி இயன்ற அளவுக்கு அன்னதானம் செய்யவேண்டும். அப்படி செய்தால் பரமேசுவரனின் அருளைப் பெறலாம்.

No comments:

Post a Comment