Thursday, May 8, 2014

வள்ளி– தெய்வானையின் முன்ஜென்மம்


திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி ஆகிய இருவரும் சடாட்சர மந்திர உபதேசம் பெற முருகனிடம் வந்தனர். குருகாணிக்கையாக தங்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முருகனிடம் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

அதற்கு குரு–சிஷ்யை விதிகளுக்கு புறம்பாக உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், மறுபிறவியில் வள்ளி, தெய்வானை என்ற பெயரில் என்னை நீங்கள் வந்தடைவீர்கள் என்று முருகப்பெருமான் கூறினார்.

அதன்பிறகு அன்ன ஆகாரமின்றி ஒருநிலை மனதோடு முருகனிடம் சடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்றதால் அமிர்தவல்லி தேவகுலத்தில் தேவேந்திரன் மகளாக தெய்வானை என்ற பெயரில் வளர்ந்து வர முருகன் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் முதலாவதாக மணந்தார்.

அன்றாட மனித வாழ்க்கைப்படி எல்லா பணிகளையும் செய்து உணவு உட்கொண்டு முருகனிடம் சடாட்சர மந்திர உபதேசம் பெற்றதால் சுந்தரவல்லி மானிட இனத்தில் வேடுவர்குல பெண்ணாக வள்ளி என்ற பெயரோடு வளர்ந்து வர முருகன் காந்தரூப முறைப்படி வள்ளியை மணம் முடித்தார்.

No comments:

Post a Comment