Thursday, May 8, 2014








கடவுளாலும் முடியாது.
ஒரு முறை கடவுளிடம் பக்தன் ஒருவன் கேட்டான்,
"கடவுளே.. உன்னால் முடியாதது என்று ஏதாவது உண்டா..?"
அதற்கு கடவுள், "என்னிடம் எல்லையற்ற ஆற்றல் உண்டு. எதை வேண்டுமானாலும் வழங்க முடியும். ஒன்றுமே இல்லாதவனை சக்ரவர்த்தியாக்குவேன். மன்னாதி மன்னனை நாடோடி ஆயாக்குவேன். இறந்தவனுக்கும் உயிர் கொடுப்பேன். ஆனாலும் என்னால் முடியாததும் ஒன்றே ஒன்று உள்ளது. அதுதான் போதும் என்ற மனம்! அதை வழங்க என்னால் கூட முடியாது..!" என்றார் கடவுள்....
கடவுளின் பக்தர்களானாலும் சரி, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாலும் சரி தமது தேவைகளை ஆசைகளை விட்டு வைப்பது இல்லை. சிலருக்கு ஆசை, பலருக்கு பேராசை. ஆனால் ஞானிகளோ உள்ளது போதும் என்று மட்டுமல்ல, இருப்பதே தேவையற்றது என்ற மனோநிலை கொண்டவர்கள். ஏன்எனில் வாழ்கைக்கும் தேடிச்சேர்க்கும் பெருளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை உணர்ந்தவர்கள் ஞானியர் மட்டுமே.

No comments:

Post a Comment