Thursday, May 8, 2014

ஒருவழியில் உறுதியாகு!

ஒருவழியில் உறுதியாகு!
குரு ஒருவர் தனது சீடர்களின் தோட்டத்துக்கு சென்றார். அங்கு பத்தடியில் மூண்று பள்ளங்கள் இருந்தது.
"என்ன இது..? என்று கேட்டார்.
"முதலாவது ஒரிடத்தில் கிணறு தோண்டினோம் தண்ணீர் வரவில்லை. அதனால் உடனே அடுத்த வேறு இடத்தில் தோண்டினோம் அங்கும் வரவில்லை. இப்படி இப்போது மூண்றாவது கிணறு தோண்டுகிறோம்!" என்றர் சீடர்....
"பூமியின் அடியில் எல்லா இடங்களிலும் தண்ணீர் உண்டு. பலஇடங்களில் தோண்டுவதை விட ஒரே இடத்தில் ஆழமாக நன்கு தோண்டுங்கள் நீர் பீறிட்டு கொண்டு வரும்..!" என்றார் குரு.
மனிதர்கள் இறைவனையடைய ஏதாவது ஒருவழியில் முயற்க்கிறார்கள். அது சலித்தவுடன் இன்னொரு வழிக்கு தாவுகிறார்கள்.பிறகு அதையும் விட்டுட்டு வேறுவழிக்கு தாவுகிறார்கள். இப்படி மாறி மாறி முயற்சித்தால் எந்த பயனும் இல்லை. ஒரே முயற்சியை உறுதியுடன் மேற்கொண்டாலே வெற்றி நிச்சயம்

No comments:

Post a Comment