குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
-ஆசான் திர...ுமூலர்-
- திருமந்திரம் (10.6.105)-
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
-ஆசான் திர...ுமூலர்-
- திருமந்திரம் (10.6.105)-
உலகில் போலிக்குருமாரும், மதபேதவாதிகளும் அன்பே இறையெனும் தத்துவத்தை மறந்து சாதி, மத, வர்க்க, மார்க்கமென அனைத்து பேதங்களையும் தத்தம் வேதங்களை முன்வைத்தே போதிப்பதால் ஆன்மீகமே நகைப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆகவே, நாம் குரு என்றால் யாரென அறிந்திருத்தல் அவசியமாகின்றது.
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.
காரியகுரு:
காரியகுரு எனப்படுபவர் வேதங்களை மேல்வாரியாகக் கற்று மற்றும் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகி தன் இச்சைகளைப் போக்க எல்லாந் தெரிந்தவர் போல் தன்னிச்சையாக கருத்தூட்டத்தை உருவாக்கித் தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் மேற்கண்ட பாடலிலுள்ளவாறு குறிப்பிடுகிறார்.
காரணகுரு:
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலர், மகான் போகர், மகான் கருவூரார், மகான் திருவள்ளுவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை":
அத்தகு காரணகுருவின் திருவடியைப் பற்றி ஆசிபெறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது. காலம் உள்ளபோதே உடலாகிய காலப்படகு தென்பாக, அதாவது இளமை, இருக்கும்போதே காரணகுருவை அறிந்து அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.

No comments:
Post a Comment