Wednesday, May 7, 2014

அம்மையே' என சிவனால் அழைக்கும் பேறு பெற்றவர் காரைக்காலம்மையார்.

அம்மையே' என சிவனால் அழைக்கும் பேறு பெற்றவர் காரைக்காலம்மையார். பிறவாத வரம் பெற்ற இவர், கைலாய மலையில் கால் வைக்க அஞ்சி, தலையாலே நடந்து சென்றவர். இவர் பாடிய பாடல் அனைத்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. அதில் திருவிரட்டை மணிமாலை என்பதும் ஒன்று. அதில் ஒரு பாடலில், ""உரைக்கப்படுவதும் ஒன்றுண்டு கேட்கின் செவ்வான் தொடை மேல் இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்'' என்கிறார். இதற்குப் பொருள் என்ன தெரியுமா?
""அப்பா சிவனே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா! செவ்வானம் போல் சிவந்த, உன் ஜடாமுடியைச் சுற்றி பாம்பு இருக்கிறதே! எந்த சந்தர்ப்பத்திலும் அந்த பாம்பைத் தொட்டு விடாதே. கவனமாய் இரு,'' என்கிறார். பாம்பு சிவனைத் தீண்டிவிடுமோ என்ற பயமே அதற்குக் காரணம். சிவனை தன் மகனாகக் கருதி பக்தி செலுத்தியதால், தாயன்புடன் இந்த
எச்சரிக்கையை விடுக்கிறார். எவ்வளவு உயர்ந்த பக்தி பாருங்கள்!

No comments:

Post a Comment