Monday, May 12, 2014

சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.




சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.


குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது.

குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா?

மாணவர்கள்:- நிரம்பிடுச்சு...

குரு :-இல்லை...!!!
(என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்)

குரு:- இப்போது . . .?

மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி

குரு:- இல்லை...!!!
(அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது)

குரு :-இப்போது . . .?

மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது

குரு:- இல்லை...!!!
(அடுத்து நீரை ஊற்றினார் மணல் இழுத்துக்கொண்டது)

குரு:-இதிலிருந்து என்ன தெரிகிறது

மாணவன் :-முயற்ச்சி செய்தால் எதுவும் சாத்தியம்

குரு:-உண்மைதான்...!!! ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாத்திரத்தில் முதலில் மணலை கொட்டியிருந்தால் இந்த பெரிய கற்களை வைக்கமுடியாமல் போயிருக்கும்,

நீதி:...நம் மனமும் அப்படித்தான்... சின்ன சின்ன விஷயங்களை மனத்துக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய விஷயங்களுக்கு இடமிருக்காது சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.

No comments:

Post a Comment