Sunday, May 1, 2016

நெற்றிக்கண் -

நெற்றிக்கண் - தெரிந்துகொள்வோம்
நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன் என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை சோதிப்பதற்காக வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும், இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட் புராணக்கதை என்றும் கூறும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம் நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று கூறினால் அதற்கும் ஏதாவது வாதம் வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே விளங்கிக்கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்) பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி மிகவும் வெப்பமான காலத்திலும் கருப்புச்சட்டையை அணிவது எந்த பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன் சிறப்பை மெல்ல மெல்ல இப்போதுதான் சில மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள் ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில கொள்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள் உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய் என்றோ மூட நம்பிக்கை என்றோ கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம் பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும் கடவுளை அடையும் வழியயும்தான் கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின் திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும் புறக்கண்கள். பார்வையில் படும் குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக யாரையாவது பார்த்தால், பழைய அபிப்பிராயங்கள் உங்களுக்குள் புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும் உண்மையை பார்ப்பதில்லை. எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய மரபில் அறிதல் என்பது படிப்பால் பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல. ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை உணர்கிறீர்கள்.
படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது குறித்து யாரும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி. (Pineal Gland).
பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene Descartes (René Descartes was a French philosopher, mathematician and writer who spent most of his life in the Dutch Republic (1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்) தொடர்புடையது.
சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில் எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின் எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.
நமது மதம் இந்த சுரப்பியை தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம் அடையலாம் என கூறுகிறது. இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம் முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புணர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம் குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?
தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி தீயை கூட வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்க்கலாம்( சிவன் காமனை எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான் தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )
இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம் வாழக்கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்களோ தெரியவில்லை.
நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்துவிட்டோம். இனியாவது விழிப்போம்.

No comments:

Post a Comment