Wednesday, June 17, 2026

 

தேர் திருவிழா என்றால் என்ன?

திருக்கோயில் என்பது நிலையாக நிற்கும் தேர்; தேர் என்பது நகரும் திருக்கோயில். இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகத்தின் அடிநாதம். மாற்றுத்திறனாளிகளாலோ, மனப் பிரச்னை உள்ளவர்களாலோ, வயது முதிர்ந்தவர்களாலோ, தீராத நோயுடையவர்களாலோ திருக்கோயிலுக்குள்ளே வந்து திருவுருவத்தைக் கண்டு வழிபட்டுத் திருவருளைப் பெறமுடியுமா? அதற்காக, ஆண்டவனே அவர்களை நோக்கி, தன் திருக்கோயிலுடனேயே எழுந்தருளுள்வதுதான் தேர்த்திருவிழா.தேரும் கோயிலும் ஒரே அமைப்பில்தான் இருக்கும்.

No comments:

Post a Comment