Saturday, March 4, 2017

ப்ருஹ்மயக்ஞம்

ப்ருஹ்மயக்ஞம் செய்வோம்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

இவ்வுல்கில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர், செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.; துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர். தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்.. இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யானம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம். ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் பூணல் முழங்கைக்கு மேல் போகாமல் இருக்குமாறு இடம் போட்டுக்கொண்டு தர்பணம் செய்ய வேண்டும் தந்தை இல்லாத எல்லோரும் முழுமையாக பூணலை இடம் போட்டுக்கொள்ளலாம்..

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய  அற்புதமான விஷயங்கள் :
சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.
சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.
இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..
| ஜடாமுடி |
சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.
| நெற்றிக்கண் |
சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.
| திரிசூலம் |
திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.
| ஆழ்ந்தநிலை |
சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.
| சாம்பல் |
சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.
| நீலகண்டம் |
சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.
| உடுக்கை |
சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.
| கங்கை |
சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.
| கமண்டலம் |
சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.
| நாகம் |
சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

Wednesday, March 1, 2017

சிரிக்கும் புத்தரை இந்த திசையில் வைத்தால் செல்வம் செழிக்கும் தெரியுமா?

அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு வழக்கம். சிரிக்கும் புத்தரின் மகிழ்வளிக்கும் தோற்றம் நம்மை அதிகமாக மகிழ்வித்து, வாழ்க்கையிலுள்ள அழுத்தங்கள் மற்றும் துன்பங்களை போக்கும்.

கிழக்கு திசை:
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.
பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

ஷெங் சி திசை:
ஃபெங் ஷுய் மரபில், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திசை, அவருக்கான தனிப்பட்ட ஷெங் சி திசையாக வழங்கப்படும். சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகுவதிலும், ஒட்டு மொத்த நலனிலும், வாழ்க்கையில் வெற்றி கிட்டுவதிலும் உதவிடும்.
அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறையான விளைவுகளை கொண்டு வரவும் கூட இது ஆதரவாக இருக்கும்.

தென் கிழக்கு திசை:
சிரிக்கும் புத்தரை அறை, கூடம், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார்.
சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜை:
சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும்.
கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.

எந்த திசையில் வைக்க கூடாது?
சிரிக்கும் புத்தரின் மீது மதிப்பை வைத்திருக்கும் ஃபெங் ஷுய்யும் புத்த மதமும், அவரை மிக மரியாதையாக கருதுகிறார்கள். சிரிக்கும் புத்தர் என்பவர் வழிபட்டு, மதிப்பளிக்க வேண்டிய சிலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தினால் துரதிஷ்டம் வந்து சேரும். அதனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நீங்கள் அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இச்சிலையை குளியலறை, சமையலறை அல்லது தரையில் வைக்கக்கூடாது. மேலும் நகரும் பாகங்கள் அல்லது தொடர்ச்சியான சத்தத்தை எழுப்பும் மின்கம்பிகள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகிலும் அவற்றை வைக்க கூடாது. இதனால் இச்சிலை நமக்கு வழங்கும் ஆற்றை திறனை இது குறைக்கும்.

சிரிக்கும் புத்தரின் தோரணை
இச்சிலையின் உயரம் நம் கண்களின் மட்டம் வரையாவது இருக்க வேண்டும். எப்போதுமே ஒரு சிலையை நாம் மேல்நோக்கி பார்ப்பது தான் நாம் அதற்கு அளிக்கும் மரியாதையாகுமே தவிர, கீழ்நோக்கி பார்ப்பது அல்ல. சமயஞ்சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள அனைத்து படங்கள் அல்லது சிலைகளுக்கும் இது பொருந்தும். அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அதற்கு இதுதான் காரணம்

ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.
வாஸ்து சாஸ்திரம் கூறுவதை போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்த தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?
  • நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.
  • வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. என்னெனில் இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
  • நமது வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.
  • நமது வீட்டில் பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும். ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கிறது

Wednesday, February 22, 2017

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை –


மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை

 

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு ....

 

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது , மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

 

 மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

 

அடியார்கள் ,சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார் -கள் என்று புரிய வில்லை ..

 

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

 

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

 

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

 

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது ...

 

கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை ,

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

 

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,

ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி.

 

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

 

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

 

ஆனால் பக்தர்களின் ஆரவாரம் ,கேளிக்கைகள் , சப்தம் கோவிலை பிளக்கிறது -சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது ….

 

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் ,மாற்றுதலும் செய்யவேண்டாம் ...

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?


பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?

 

கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

 

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

 

1.தாலிதாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடுஎதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்திமூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல்கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம்கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம்எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

 

இவை தவிர நகைகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

 

அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

 

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

 

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

 

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

 

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

 

வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

 

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

 

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

 

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

 

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது.

 

இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

 

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

 

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள்; அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள்.

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

Wednesday, February 8, 2017

பிறந்தநாளன்று செய்யவேண்டியது -- செய்யக்கூடாதது

பிறந்தநாளன்று செய்யவேண்டியது செய்யக்கூடாதது ..
ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.
ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.
...
பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?
1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்
5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்
7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
14) வாகனங்கள் வாங்கலாம்
15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
16) உபநயனம் செய்துகொள்ளலாம்
17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.

Thursday, February 2, 2017

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

மந்திரம் - காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது.
அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும்.
நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும்.
மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள்
  • நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
  • சனிக்கிழமை அன்று நவதானிய அடைதோசை செய்து, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் நமக்கு ஏற்படுவது குறையும்.
  • தினமும் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்து விட்டு நமது தினசரி செய்யும் கடமைகளைத் துவக்க வேண்டும். மேலும் மந்திர ஜபம் முடிந்தவுடன் ஒரு டம்ளர் இளநீர் அருந்த வேண்டும். இதனால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நமது உடலுக்குள்ளயே பதிவாகி இருக்கும்.
  • கடலை எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நமது குடும்பத்தில் கலங்கத்தை உண்டாக்கும். எனவே, உணவில் அதிகமாக கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • பாமாயில் என்ற சமையல் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால், துர்தேவதைகள் நமது உடலுக்குள் புகுந்து நம்முடைய கை மற்றும் கால்களை முடக்கிவிடும். எனவே தொடர்ந்து பாமாயில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நமது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது மிகவும் நல்லது.
  • பெண்கள் அணிகலன்கள் அணிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் பெண்களின் நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணைத் திறக்கும், காதணி நல்ல கண்பார்வையையும், ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும், காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்குகிறது.
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?
வீட்டில் விடி விளக்கு எரியச் செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்ட பின் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையெனில் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.
சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்து காணப்பட்டால், .அங்கு மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தமாகும்.
துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்து செயல்களுமே மூதேவியின் அடையாளங்களாகும்.
மேலும் நமது வீட்டில் மூதேவி வராமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?

இந்து மதத்தில் வெவ்வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதற்கான அர்த்தங்கள் கூட நமக்கு தெரியும்.
ஆனால் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்களை கூட திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?
கோத்திரம் என்பது நமது மூதாதையர் வழிதோன்றலின் ஆரம்பத்தில் இருந்து தந்தை மகன் வழியாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.
ஆனால் இந்த கோத்திர வழக்கமானது, தந்தை மகள் என்ற வழியில் பின்பற்றப்படுவது இல்லை.
ஏனெனில் மகளுக்கு திருமணம் ஆனால் அவள் அவருடைய கணவன் கோத்திரத்தின் வழியில் சேர்ந்து விடுவார்கள்.
ஒருவருடைய வம்சாவளி தடைப்பட்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஆண் மகன் வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள்.
எப்படியெனில் ஒரு மனிதனின் உடலில் 23 குரோமோசோம்கள் இருக்கும். அதில் தந்தையிடம் இருந்து, அன்னையிடம் இருந்து என மொத்தமாக ஒருவருக்கு 46 இருக்கும்.
இதில் ஒன்று தான் உடலுறவு கொள்வதற்கான குரோமோசோம் ஆகும். அந்த வகையில் ஆணுக்கு xx, பெண்ணுக்கு xy குரோமோசோம்கள் இருந்தால், அவர்களின் வம்சாவலி தொடரும் என்று நம்புகின்றார்கள்.
இதனால தான் இந்துக்கள் ஒரே கோத்திரத்தில் பெண், எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று காரணம் கூறுகின்றார்கள்.
அதே போல இந்துக்கள் நெருங்கிய ரத்த பந்தத்தில் திருமணம் செய்துக் கொள்வதை தடுப்பார்கள்.
ஏனெனில் அப்படி திருமணம் செய்தால், ஹார்மோன்களின் தாக்கம் ஏற்பட்டு, அது அவர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதற்காக தான் இந்த கோத்திரங்களை பின்பற்றி வருகின்றார்கள்.