Thursday, March 15, 2012

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'

'ஆலயம் தொழுவது சாலவும்
நன்று'...'கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்'...
சும்மாவா சொன்னார்கள் ? நம்
இந்து கோவில்கள் வெறும்
வழிபாட்டுத் தலங்களா ? அதன்
சிறப்பைக் கூறி ...வெறும்
வழிபாட்டுத்தலங்கள்
இல்லை என்கிறது
ஆலய சிவ ஆகமும், சைவ
சித்தாந்தங்களும்... சரி ஆலய
சிறப்பை அதன்
அமைப்பை வைத்து பார்ப்போம்.

'உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய்
கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்கே' -
என்பது திருமூலர் அருட்பாடல்.
இதன் பொருளைப் பாருங்கள், மிகச்
சிறப்பாக இருக்கும்,

அதாவது
உடலே கோயில் என்றார்.
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது
உடம்பில் பாதங்கள்
கோபுரமாகவும், முழங்கால்
ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிறுத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்)
பலி பீடமாகவும்,
மார்பு மகா மண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும்
கோயிலாய்
எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம், பிரணமய கோசம்,
மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய
ஐந்து உள்ளது போல கோயிலில்
ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

உடலில் தூல சரீரம், சூட்சும சரீரம், குண
சரீரம், அஞ்சுக சரீரம், காரண
சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

ஆகம விதிப்படி ஆலயங்கள்
கருவறை, ஒன்று முதல்
ஐந்து பிரகாரங்களுடன் கூடிய
ராஜகோபுரம், பலி பீடம்,
கொடிமரம், யாகசாலை,
நந்தி முதலியவற்றுடன்
விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம்,
நரம்பு போன்ற
ஏழு வகை தாதுக்களால்
ஆனது போல்
ஆலயமும் செங்கல், காரை, கல்,
போன்ற ஏழு வகையான பொருள்களால்
ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.

கோயில் என்பதை கோ-இல் எனப்
பிரித்து 'கோ' என்றால் இறைவன்.
−ல் என்றால் இருப்பிடம்
என்கிறார்கள். ஆக, கோயில்
என்பது இறைவனின் இருப்பிடம்
என்றும் ஆலயம் என்பதை 'ஆ'
ஆன்மா என்றும் லயம் சேருமிடம்
என்றும் பொருள்படுகிறது.
மனிதனின் வடிவமாகச்
சிவாலயத்தை ஒப்பிடும்போது (1)
கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம்
- கழுத்து, (3) மகா மண்டபம் -
மார்பு, (4) யாகசாலை - நாடி,
(5) கோபுரம் - பாதம் என்றும்
கூறுவர்.
அதே போல் (1) ஆலயம் - உடல், (2)
கோபுரம் - வாய், (3) நந்தி -
நாக்கு, (4) துவஜஸ்தம்பம்
(கொடிமரம்) - உள்நாக்கு, (5)
தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6)
கருவறை - −தயம், (7) சிவலிங்கம்
-உயிர் என்றும் கூறுவர்.
உள்ளமே கோவில்
என்று 'தத்துவார்த்தமாக'
உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள்
அல்லவா ? படிப்பதற்கே மெய்
சிலிர்கிறது.

நான்கு வழிகளில் முக்தி.....


..
மனிதப்பிறவி என்பது மிகவும்
துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த
பிறவியிலும் கிடைக்காத
மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம்
அடையமுடியும்.அதனால் தான் பல
மஹான்கள் இந்த
மனிதப்பிறவியை உயர்வாகக்
கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட
மனிதப்பிறவியில் நாம்
முக்தி பெற மிக எளிமையாக
நான்கு வழிகளை மஹான்கள்
கூறியுள்ளனர்.அவை

1. மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்
ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில்
ஆகாய க்ஷேத்ரமாக
விளங்குவது தமிழகத்திலுள்ள
சிதம்பரம் என்னும் கனக
சபாபதி க்ஷேத்ரம்.
இந்த சிதம்பரத்தில்
ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற
நாட்களில் நடைபெறும் நடராஜ
மூர்த்தியின் ஆனந்த
தாண்டவத்தை பக்தியோடு மனம்
குளிர தரிசனம் செய்து,
எனக்கு ஞான வைராக்யத்தையும்
மறுபிறவி இல்லாத மோக்ஷ
சாம்ராஜ்யத்தையும்
தந்து அருள்புரிய வேண்டும்
என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம்
பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத
முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு வழி.


2. கமலாலயம் என்னும்
ஸ்ரீதியாகராஜரின்
அருட்கடாக்ஷத்தில் ப்ரகாசிக்கும்
தமிழகத்திலுள்ள திருவாரூர்
என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல
உயர்ந்த தாய்
தந்தையர்களுக்கு பிள்ளையாகப்
பிறவியெடுத்தல்.திருவாரூரில்
பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும்
அங்குள்ள ஸ்ரீதியாகராஜர்
முக்தியை தந்து விடுகிறார்
என்பதால் திருவாரூரில் பிறந்த
அனைவருக்கும் முக்தி கிடைக்கும்
என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி.

3.என்பதாக பூமியிலிருந்து சில
அடி தூரம்
மேலெழுந்து பூமிக்கு சம்பந்தமில்லாமல்
எங்கும்
சிவலிங்கமாகக்காட்சிதருவதும்,ஸ்ரீமஹாவிஷ்ணுவின்
பாதங்களில் தோன்றி சிவனின்
தலையிலிருந்து பகீரதனால்
பூமிக்குக் கொண்டுவரப்பட்ட
புண்ணியம்மிக்க
கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும்,
கைலாசவாசியான சிவன்
தனது கணங்களுடன்
ஸ்ரீவிச்வநாதராக
அன்னபூரணி மாதாவுடன்
எழுந்தருளியிருக்கும்
க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச
மாநிலத்திலுள்ள அவிமுக்த
க்ஷேத்திரமாகிய
வாராணசி என்னும்
காசி நகரத்தில் இறத்தல்.
இந்த காசி க்ஷேத்திரத்தில்
உடலைவிடும்
அனைத்து ஜீவன்களுக்கும் தாரக
ப்ரம்மமாகிய
ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக
வலது காதில் ஸ்ரீராம
நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல்
செய்து,முக்தியை வாரி வழங்குகிறார்
என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில்
இறந்தால் முக்தி.

 4.ஒருவர் இறக்கும்
சமயத்தில்
அவனது மகன்,இறப்பவரின் அருகில்
இருந்து,தேவையான
பணிவிடைகளைச்
செய்து இறுதி காலத்தில்
பெற்றோருக்கு வாயில் பால்
விட்டு அவரை தன்
வலது துடையில்
மடிமீது வைத்துக்கொண்டு,அவரது வலது காதில்
கர்ண மந்திரங்களையும்,பகவான்
நாமாவையும் கூறி அவரை நல்ல
நினைவுடன்
இறக்கும்படி செய்வாராகில்
இறப்பவர் நிச்சயம்
முக்தியை அடைவார்
என்கிறது நமது சாஸ்திரம்.
இந்த நான்கு வழிகளில்
எது சிறந்தது?
முக்தி அடைய கூறப்பட்ட
மேற்கூறிய நான்கு விதமான
வழிகளில் மிகச்சுலபமான
வழி,இறக்கும் நேரத்தில் மகன்
அருகில் இருப்பது என்பதுதான்.
ஆகவே வயது முதிர்ந்த
பெரியவர்கள் தன்னுடைய
இறுதி காலம் நெருங்கும்
நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்

ஒருவருடைய மனைவி கர்ப்பமாகஇருக்கும்போது

ஒருவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கீழ்கண்ட விஷயங்களை விலக்கவேண்டும் என தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.

1.க்ஷவரம்(முடி வெட்டிக்கொள்ளுதல்) கூடாது.

2.சவத்தின் பின் செல்லுதல் கூடாது.

3.நகங்களை வெட்டக்கூடாது.

4.புதிதாக வீடு கட்ட துவங்கக்கூடாது.

5.கடலில் குளிக்கக்கூடாது.

6.தூரதேசம் செல்லக்கூடாது

7.மலை ஏறுதல் கூடாது

8.பிராம்மணர்கள் திவசத்தில் போக்தாவாக இருக்கக்கூடாது.மேலும் பிரதிஷ்டை,உத்சவம் போன்றவையும் செய்யக்கூடாது.

ஆலய வழிபாடும் -ஆடைகளும்


நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம்
இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை
பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக
உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு
சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன்
சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

நமது பாரத தேசத்தில் ஆலய மூல விக்ரஹம் கருங்கல்லாலேயே
வடிவமைக்கப்படுகிறது.கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால்
ஈர்த்து,தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.எனவே தான்
மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி
ஸ்தபதியார்களால் வடிவமைக்கப்படுகின்றன.
"ஓம்"என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி,பலவகை அபிஷேகங்களைசெய்யும்போது,மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன.அம்மின்னூட்டக்
கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும்,மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து
வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும்.

நாள்தோறும் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள்
தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு
உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன.இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும்
என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்ல
வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.பெண்களுக்கு அவர்களின்
உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்.இஃது எல்லா கோயில்களுக்கும்
பொருந்தும்.

பொதுவாகவே தென் மாநிலங்களில் வெப்பத்தின் காரணமாக சட்டை அணியாமல் தான் இருந்தார்கள். அதனால் கோவிலுக்குப் போகும்போது சட்டை அணியும் வழக்கம் இல்லாமல் இருந்தது. வடமாநிலங்களில் குளிர் அதிகம் அதனால் சட்டை போடாமல் இருக்க முடியாது. அதுவும் பத்ரிநாத் அமர்நாத் போன்ற இடங்களில் குளிர் மிகவும் அதிகம். வெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி ஆசாரம் மாறுபடும்.

 ஒன்றை தெரிந்து கொள்வோம்.வடநாட்டினர் நாகரீகம் வேறு நம் பண்பாடு வேறு. நம் பாரம்பரியம் என்னவெனில் பெரியவரை கானும் போது மரியாதை நிமித்தமாக தலைபாகை,குடை,மேல்துண்டு,மிதியடி,மேல் சட்டை உபயோகிப்பது உபயோகிப்பது இல்லை. அதை போல உணவு உண்ணும்போதும் தலைபாகை,மேல்துண்டு உபயோகிப்பது இல்லை.அதை போலவே தெய்வங்களையும் மிகுந்த மரியாதை செலுத்திவந்தனர் என்பது திண்ணம்.தற்போது நாம் மேல் சட்டை,மேல்துண்டு உபயோகிக்கிறோம்

கோயிலுக்குள் செல்லும்போது மேற் சட்டையை
கழற்றாவிட்டாலும்,குறைந்தபட்சம் உள் மண்டபத்தில் சென்று சுவாமியைத்
தரிசிக்கும்போதாவது கழற்றி விடுவது நமக்கு நலம் பயப்பதாகும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா



ஆயில்ய நட்சத்திரம் என்பது புதன் கிரகத்தின் மின் சக்தி அதிகம் உடைய நாள்.இப் புதனின் சக்தி சந்திரனின் சக்திக்கு எதிர் தன்மை உடையது.எனவே தான் புதனின் ஆதிக்கமான ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவ்வாறு திருமணம் செய்த ஆணின் உடலில் இம் மின் சக்தி தாம்பத்யத்தின்போது பரவுகிறது.இந்த புதனின் சக்தி பரவிய உடல் இதற்கு எதிரான சந்திரனின் மின் சக்தி யில் பிறந்த அல்லது சந்திரனின் மின் சக்தி அதிகம் உடையவர்களிடம் எல்லா வகையிலும் மனரீதியாக விலகிச்செல்லும் நிலை ஏற்படுகிறது.இந்த வகையில் சந்திரன் என்பது தாய் ஸ்தானத்தை குறிக்கும்.மேலும் அந்த தாயின் புதல்வன் உடலில் மனைவியின் மூலம் புதனின் மின் சக்திகள் கலந்ததால்,அது தாய் ஸ்தானத்திலுள்ள சந்திரனுக்கு எதிராகிறது
 1.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கும் அவனது தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படலாம்,மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும்.
2.சந்திர ஆதிக்கம் உடைய மனிதர்கள்,பொருட்கள்,போன்றவற்றால் அந்த மாப்பிள்ளைக்கு உபயோகம் இருக்காது.மாற்றாக இழப்பு ஏற்படலாம்.இதன்காரணமாகவே ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் இதுவே சரி என கூறமுடியாது.காரணம் புதன்,சந்திரன் இந்த இரு கிரகங்களை வைத்து நாம் இதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.அவர்களது ஜனன ஜாதகத்திலுள் மற்ற கிரக நிலைகளை வைத்தே இதை தீர்மானிக்கமுடியும்.
மேலும் அப்படியே கடுமையாக இருந்தாலும் ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தவர்கள் தாயுடன் வசிக்காமல் தனிக்குடித்தனம் இருந்தால் இது தானாகவே பரிகாரம் ஆகிவிடும் 

Wednesday, March 14, 2012

திருமணத்தில் *பட்டுப்புடவை தேவையா?*

திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்தவேண்டுமா?*
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம்
செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை
அளிக்கின்றனர்.அதை மணமகள் உடுத்திக்கொள்ள உதவும் உரிமை மணமகனின்
சகோதரிக்கு தரப்படுகிறது.ஏனெனில் தன் சகோதரன்(மணமகன்)இல்லற சுகங்களைத்

துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான் என்பதை அவ்வேளையில் உறுதி
செய்துகொள்ளவேண்டிய பொறுப்பை அவளுக்கு சாஸ்திரம் வழங்குகிறது.
இந்த முஹூர்த்தப்புடவை கூறைப்புடவை என்றும் அழைக்கப்படும்.அப்படிப்பட்ட
இந்த முகூர்த்தப்புடவையை திருமணம் முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின்
பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று
*ஆபஸ்தம்ப முனிவர் சொல்லியுள்ளார்* ஆனால் இது தமிழகத்தில்
கடைபிடிக்கப்படுவதில்லை.

*பட்டுப்புடவை தேவையா?*
இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார் தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த
முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த பட்டுப் புடவையை வாங்குவதால் அதை
பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல் போகிறது.சரி இந்த பட்டுப் புடவை
தேவையா?என்று நோக்கும்போது பட்டுத் துணிகள் உயிர்வதையால்
உண்டாகிறது.மேலும் ரசாயன நூல்களாலான துணிகள் இயற்கைக்கு ஏற்றதல்ல.மேலும்
புதிதாய இல்லறத்தில் இணையும் தம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல
ஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே.இயற்கையான பருத்தி
நூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.இப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை
மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,அதை முகூர்த்தப் புடவையாக
பயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது.
*புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்?*
திருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,அவளது சிறப்பை கண்ணுற்றவாறு
அமர்ந்திருப்பர்.அதனால் அவள் மீது
கண்ணேறு(திருஷ்டி)படிந்திருக்கும்.பின்னர் கணவன்,தன் மனைவி அந்த
முகூர்த்தப்புடவையை மீண்டும் உடுத்தி இருக்கும்போது பார்த்தால்,அது
அவனுக்கு குரூரமாக(கண்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக)தெரிய
வாய்ப்புண்டு.அந்த குரூர புடவையை, திருமண நாளுக்குப் பிறகு, கட்டப்படாமல்
இருப்பதே நல்லது.ஏனெனில் அப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண
அலையின் காரணமாக கணவன்,மனைவிக்குள் சண்டை,சச்சரவுகள் வராமல் தடுக்க
அப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.எனவே தான் அது தானமாக
வழங்கப்படுகிறது.மேலும் குரூர புடவை என்பதே திரிந்து கூறைப்புடவை
ஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.எனவே அனைவரும் திருமணத்தில்
முகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே பயன்படுத்தி,அதை
திருமணத்திற்குப்பின் தானமும் செய்து, தம்பதிகளின் வாழ்வில் மேன்மையை
அடையச்செய்வோம்.

குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?

குருபெயர்ச்சி தக்ஷிணாமூர்த்திக்கா?
குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று பொருள்.இச்சொல்லால் நாம் இரண்டு தெய்வங்களை குறிப்பிடுகிறோம்.
1.தக்ஷிணாமூர்ண்தி
2.வியாழ பகவான் எனும் பிரகஸ்பதி


1.தக்ஷிணாமூர்த்தி:
தக்ஷிணம் என்றால் தெற்கு.தெற்கு நோக்கி வீற்றிருப்பதால் இவரை தக்ஷிணாமூர்த்தி என்றழைக்கிறோம்.சிவாலயத்தில் கருவறையின்
வெளிப்புறத்தில்,கோஷ்டத்தில் கோஷ்ட மூர்த்தியாக இவர் அமர்ந்துள்ளார்.(வினாயகர்,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகியோர் மற்ற

கோஷ்ட மூர்த்திகள்.<சில கோயில்களில் அமர்ந்த வினாயகருக்கு பதிலாக நர்த்தன வினாயகரும்.லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மஹாவிஷ்ணுவும் இருப்பர்)


தக்ஷிணாமூர்த்தி யார்?:
தக்ஷிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியே தவிர அவருக்கு ஆகம முறைப்படி தனிச் சன்னதி இல்லை.சிவபெருமானுக்குறிய 64 திருமேனிகளுள் 25 திருமேனிகள் "மாஹேஸ்வர மூர்த்தங்கள்"எனப்படும்.அம் மாஹேஸ்வர மூர்த்தங்களுள் தக்ஷிணாமூர்த்தியும் ஒருவர்.எனவே தக்ஷிணாமூர்த்தி,சிவபெருமானின் ஒரு சொரூபமே ஆவார்.இவர் மேலான ஞானத்தை அருளும் ஞான குரு.

நன்கு கற்று வல்லவர்களான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் என்னும் நான்கு மகரிஷிகளுக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து மௌனமாகச் சின்முத்திரை காட்டி உபதேசம் செய்து ஞானத் தெளிவை தந்தவர்.


தக்ஷிணாமூர்த்தியின் வடிவம்:

இவர் கல்லால மரத்தின் கீழிரிந்து இடக்காலை மடித்து,வலக்காலை தொங்கவிட்டு,அக்காலின் கீழ் முயலகன் எனும் அசுரன் இருக்க,நான்கு கரங்களுடன்-மேற்கரங்கள் இரண்டில் ஜபமாலை மற்றும் மழுவும் இருக்க.கீழ்க்கரங்கள் இரண்டில் வலக்கரம் சின்முத்திரை காட்ட,இடக்கரத்தில் சுவடி ஏந்தி காட்சிதருகிறார்.ஈச்வரனுடைய மூவகை வடிவங்களுள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் யோகவடிவம் ஆகும்.இவரிடம் உபதேசம் பெற்ற நான்கு மகரிஷிகளும் இவருடைய திருவடிக்கீழ்,வரிசையாகவோ,பக்கத்துக்கு இருவராகவோ கைகூப்பி அமர்ந்திருப்பர்.இவர் உபதேசித்தது மௌனமாக இருந்து சின்முத்திரை காட்டி ஞானத்தெளிவை தந்ததாகும்.தக்ஷிணாமூர்த்திக்கு 1.சின்முத்திரை,2.ஞான முத்திரை ஆகிய இரண்டும் உண்டு.
இவருக்கு ஆலமர் செல்வர்,தென்முகக் கடவுள்,தென்னவன் என்னும் பெயர்களும் உண்டு.இவர் சிவனின் சொரூபமேயாவார்.இவர் நால்வருக்கும் உபதேசம் செய்தமையால் இவரை உபதேச குரு என்கிறோம்.இவரை குரு மூர்த்தம் என்றும் அழைப்பர்.இவர் இடம்பெயர்வதில்லை.எனவே இடப்பெயற்ச்சி என்பது இவருக்கு கிடையாது.இவருக்கு மஞ்சள் துணியோ,கொண்டைகடலை மாலையோ,முல்லை மலரோ அணிவிக்கவேண்டாம்.சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களே இவருக்கும்.


2.வியாழ பகவான்(பிரகஸ்பதி):
இவர் தேவர்களுக்குக் குருவாக விளங்குபவர்.ஆங்கீரச மகரிஷிக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராகப் பிறந்தவர்.காசியில் சிவபெருமானை வழிபட்டு,தேவர்களுக்கு குருவாக ஆகும் பதவியை பெற்றவர்.

இவரை வியாழ பகவான் என்றும் அழைக்கிறோம்.நவகிரகங்களுள் "குரு" என்றழைக்கப்படும் இவர்,நவகிரக மண்டலத்தில் ஐந்தாவதாகச் சூரியனுக்கு வடக்கில் விளங்குபவர்.இவர் சுபகிரகம்.நல்ல பலன்களைக் கொடுப்பவர்.குருபலன் கூடினால்தான் திருமணம் முதலிய சுபச் செயல்கள் நடைபெறும் என்கிறது ஜோதிடம்.
1867ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.அவை
1.அந்தணன்,
2.அமைச்சன்
3.அரசன்
4.ஆசான்
5.ஆண்டளப்பான்
6.குரு
7.சிகிண்டிசன்
8.சீவன்
9.சுரகுரு
10.தாராபதி
11.தெய்வமந்திரி
12.நற்கோள்
13.பிரகஸ்பதி
14.பீதகன்
15.பொன்னன்
16.மறையோன்
17.வேதன்
18. வேந்தன்
இவற்றிலிருந்து வியாழ பகவான்,பிரகஸ்பதி,குரு,...என்பவரெல்லாம் ஒருவரே என்பது தெரிகிறது.இவருடைய சக்தி-தாரா,நிறம்-பொன்னிறம்,வாகனம்-யானை(அன்னமும்,குதிரையும் கூட வாகனமாகச் சொல்வர்).நான்கு கரங்களில் ஜபமாலை,யோகதண்டம்,கமண்டலம்,வரதம் கொண்டவர்.

நவகிரக ஸ்தலங்கள்:
நவகிரகங்களுக்குறிய வழிபாட்டு தலங்கள்,பல புராணங்களில் பலவாராகச் சொல்லப்பட்டபோதிலும்,பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலங்கள் பின்வருமாறு.
1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திருப்பதி
3.செவ்வாய்-பழனி
4.புதன்-மதுரை
5.வியாழன்-திருச்செந்தூர்
6.சுக்கிரன்-ஸ்ரீரங்கம்
7.சனி-திருநள்ளார்
8.ராகு}
9.கேது}காளஹஸ்தி

இக்காலத்தில் இம்முறை மாறிவிட்டது.இன்று நாம் செல்லும் யாத்திரை பின்வருமாறு,

1.சூரியன்-சூரியனார்கோயில்
2.சந்திரன்-திங்களூர்
3.செவ்வாய்-வைத்தீஸ்வரன் கோயில்
4.புதன்-திருவெண்காடு
5.வியாழன்-ஆலங்குடி
6.சுக்கிரன்-கஞ்சனூர்
7.சனி-திருநள்ளார்
8.ராகு-திருநாகேஸ்வரம்
9.கேது-கீழ்ப்பெரும்பள்ளம்

சூரியன்,சனி நீங்களாக மற்ற கிரகங்களுக்குறிய தலங்கள் மாறியுள்ளன.இவற்றுள் வைத்தீஸ்வரன் கோயில்,திருவெண்காடு,ஆலங்குடி,கஞ்சனூர்,திருநாகேஸ்வரம் முதலியவை பாடல்பெற்ற சிவத்தலங்கள்.ஆனால் இவை இன்று நவகிரக ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இது கால வேறுபாட்டால் நேர்ந்த விளைவு.கோயில் விளம்பரங்கள் அவற்றை நவகிரக கோயில்களாகவே மாற்றியுள்ளன.
இக்கோயில்களில் நவகிரகச் சன்னிதிகள் பழமையாக அமைந்துள்ளபோதிலும்.அந்தந்த கிரகத்துக்குரிய சந்நிதிகள் தனியாக அமைந்தும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டும் உள்ளன.கோஷ்ட மூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்தி,தனிச்சன்னிதியாக மாற்றப்பட்டுள்ளது!



இன்று நவகிரக யாத்திரையில் குரு வுக்காக மக்கள் ஆலங்குடி செல்கின்றனர்.ஆலங்குடி பாடல் பெற்ற சிவஸ்தலம்.இது தக்ஷிணாமூர்த்தி விசேஷ ஸ்தலம்.இங்கு தக்ஷிணாமூர்த்திக்கு உற்சவத்திருமேனியும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.பாடல் பெற்ற இச்சிவஸ்தலம் இன்று குருஸ்தலம் என்று மாற்றப்பட்டு,நவகிரக ஸ்தலமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது.மக்கள் நவகிரக யாத்திரையில் நவகிரக குரு ஸ்தலமாக நினைத்து ஆலங்குடி சென்று நவகிரக குருவுக்கு செய்யும் அர்ச்சனை,பரிகாரம்,பூஜை,வழிபாடுகளை இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு செய்கின்றனர்.அக்கோஷ்டம் இன்று தனிச்சன்னிதியாகவே மாறியுள்ளது.இது சரியா?

குருவுக்குள் குழப்பம் :
ஞானம் அருள் வள்ளலாம் தக்ஷிணாமூர்த்தி நம்மால் சிவமாகவே வணங்கத்தக்கவர்.ஆனால் கிரக நிலையில் உள்ள குரு,தக்ஷிணாமூர்த்தியை விட பல படி தாழ்ந்தவர்.இந்த வியாழ குரு ஈச்வர நியதியை தொழிற்படுத்தவல்ல ஒரு கிரகமே ஆவார்.இந்த உண்மை அறியாமல்,அவரினும் தாழ்ந்தவராகிய நவகிரக குருவுக்கு செய்யவேண்டிய பரிகார,வழிபாட்டை உயர்ந்த ஞான குருவாகிய,சிவ அம்சமாக விளங்கக்கூடிய தக்ஷிணாமூர்த்திக்கு செய்யக்கூடாது.எனவே நவகிரக குருவுக்கு செய்யவேண்டிய பூஜைகளை தக்ஷிணாமூர்த்திக்கு செய்யாதீர்கள்.எனவே ஆலங்குடி செல்லுங்கள்.அங்கு குரு கிரகத்திற்கு உரிய பரிகார அர்ச்சனையை அக்கோயிலில் நவகிரக சன்னிதியில் உள்ள குரு வுக்கு செய்யுங்கள்.இதுவே முறை.அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை தக்ஷிணாமூர்த்தியாகவே வழிபடுங்கள் நவகிரக குருவாக அல்ல.

குருபெயர்ச்சி:
நவகிரகங்களுள் ஒன்றாக வியாழ பகவான்(குரு)இருப்பதால் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்வது என்பதும்,அவ்வாறு இடம் பெயரும்போது சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்களையும் தருவது இயல்பு.குரு பகவான் இடம்பெயர்வதை குருப்பெயர்ச்சி என்கிறோம்.

எனவே குருப்பெயர்ச்சியும் அதையொட்டி செய்யப்படும் விசேஷ வழிபாடுகளும் நவகிரக குருவுக்கே உரியன.

ஈச்வர வடிவமாக விளங்குகின்ற/வழிபடப்பெறுகின்ற உபதேச/ஞான குருவாகிய தக்ஷிணாமூர்த்திக்கும் இந்த குருப்பெயர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.அதாவது இடம்பெயர்தல் என்பது கிரகங்களுக்கு உரியதே அன்றி சிவ அம்சமாக விளங்கக்கூடிய தக்ஷிணாமூர்த்திக்கு இல்லை.
எனவே குருபெயர்ச்சி காலங்களில் செய்யப்படும் விசேஷ வழிபாடுகளை அந்தந்த சிவாலயங்களில் நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கே செய்யவேண்டும்.அதைவிடுத்து தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்,கொண்ட கடலை மாலை,முல்லை மலர் இவைகளே அணிவிக்கக்கூடாது.இவை அனைத்தும் நவகிரகத்தில் உள்ள குருவுக்கே செய்யவேண்டும்

அபிஜித் காலம்

ஜோதிட சாஸ்திரம் சொல்கிற நல்ல நாள் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்கமுடியாதே அப்படி காத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லவில்லை. இப்படியான நேரத்தில் ஜோதிட சாணிக்கு எந்த விதமான நட்சத்திரமோ தோஷமோ கிடையாது.ஸ்திரம் நமக்கு ஓர் உபதேசம் தந்திருக்கிறது.மத்தியானம் பன்னிரண்டு  மணி அபிஜித் காலம் அந்த சமயத்தில் முகூர்த்தம் பண்ணலாம்.


அந்த காலம் நல்ல காலம்.அதில் உங்களுக்கு முகூர்த்தம் கிடைத்துவிடும்.அன்று கெட்ட நாளாக இருந்தாலும் அந்த12 மணி வேளையில் கெட்ட தோஷங்களெல்லாம் விலகிவிடும்.அதற்கு முன்னாலும் பின்னாலும் அந்த தோஷம் தொடரும். இப்படியாக அவசர காலத்தில் நமக்கு உதவுவதற்காக ஜோதிட சாஸ்திரம் சொல்லும் தீர்வு 

ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகனுக்கும் அதேபோல் ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகளுக்கும்(மருமகள்) ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.அப்படிச் செய்தால் அவர்கள் குடும்பவாழ்க்கை,சந்தோஷம்,புத்திர பாக்கியம் முதலியவை பாதிக்கப்படும்.மேலும் இதற்கு பரிகாரமே இல்லை என்கிறது "உத்தர காலாம்ருதம் "என்ற நூல்

Saturday, March 10, 2012

வள்ளலார்-அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை.

ருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் ஜோதி ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய சத்யஞான சபையில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

கடலூரிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது வடலூர். வடலூரிலிருந்து பார்த் தால் இராமலிங்கரின் இஷ்டதெய்வமான தில்லை அம்பலவாணரின் ஆலய நான்கு கோபுரங்களும் தெரியும். இந்த புனிதத் தன்மையை முன்னிட்டுதான் ஒளி வடிவ இறைவனுக்கு சத்ய ஞான சபை உருவாக்க வடலூரைத் தேர்ந்தெடுத்தார் வள்ளலார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற சித்தாந்தத்தை மேற்கொண்ட வள்ளலார், 1865-ல் உலகை நல்வழிப்படுத்துவதற்கு உருவாக்கியதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும்.

பசித்தவர்களுக்கு அன்னமிட 23-5-1867-ல் உருவாக்கப்பட்டதுதான் சத்ய தரும சாலை. இதை அமைத்து அன்னதானத்தை வள்ளலார் துவக்கினார். அதற்கு அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை 145 ஆண்டுகளாக எரிந்து கொண்டே உள்ளது. இது 21 அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் ஆழமும் கொண்டது. தினமும் காலை 6.00 மணி, 8.00 மணி, பகல் 12.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 8.00 மணி என்று ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடத்துகின்றனர்.

சத்யஞான சபை என்ற கோவில் 25-1-1872-ல் அமைக்கப்பட்டது. இறைவன் ஒளிமயமானவன். இதை உணர்த்த நிறுவியதுதான் இது. உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத் தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தைக் காணலாம். அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடி உள்ளது. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

சத்யஞான சபையில் 1872-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி தரிசனத் தைத் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

இந்த ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.

கருப்புத்திரை- மாயையை விலக்கும்.

நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.

பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.

சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.

பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.

ஆறு வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்.

இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளி யைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.

சூரியனின் உத்தராயன புண்ணிய காலப் பயணம்- அதாவது வடக்கு நோக்கிய நகர்தல் தை மாத முதல் நாளில் தொடங்குகிறது. அந்த மாதத்தில் வரும் பூச நாளின் அதிகாலையில், கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் நடுவில் ஞானசபையில் உள்ள ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இந்த அபூர்வ அமைப்பால்தான் எல்லா ஆலயங்களும் தைப் பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்துகின் றனர். அன்றைய நாளில் சூரிய ஒளியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் எனும் மெய்காந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும்.

"ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய் காந்த அலைகளைப் பெறமுடியும். தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை விளக்கங்களையும் ரகசியங்களையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்' என வள்ளலார் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"தேவையற்ற எண்ணங்களையும் ஆசை களையும் மனதிலிருந்து அகற்ற மனத்தூய்மை வேண்டும். இதை அடைய தியானத்தால் மட்டுமே இயலும். இதுதான் ஆன்ம விசாரணை ஆகும். மனம் ஒருமைப்பட சுவாசம்தான் உறு துணை. சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்ற சுவாசத்தால் புருவ மத்தியான சிற்சபை யில் மென்மையான ஜோதியாக உருவெடுக்கும். இதை ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியால் உணரலாம்' என்கிறார் வள்ளலார். தியானத் தால் இயற்கை ரகசியங்களான இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்றவற்றையும் அறியலாம்.

வள்ளலார் இயற்றிய நூல்கள்

திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் ஆகியவை. திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. இவர் ஒரே இரவில் எழுதிய 1956 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி என்ற அகவல் பா, இவரின் சன்மார்க்க சங்கத்தினரால் பொதுமறை என போற்றப்படுகிறது.

ஆன்மநேய ஒருமைப்பாடு பன்னிரண்டு

ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள் நிலையறிந்து அவ்வமயம் ஆதல் என நான்கு நெறிகளும்; இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கமும்; சமரச சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்யஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கும் என பன்னி ரண்டும் ஒன்றுபட்டதே ஆன்மநேய ஒருமை.

வள்ளலாரின் பத்து நிலைகள்

● நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

● தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

● உலகில் உள்ள எல்லாரும் இன்பமாய் வாழவேண்டும் என நினைத்தல்.

● மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள்மீதும் கருணை காட்ட வேண்டும்.

● பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.

● புழு, மீன் ஆகியவற் றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.

● ஓரறிவு உயிர்கள் வாடி னால்கூட நாம் வாட வேண்டும்.

● எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

இவை புற வாழ்வு தொடர் பான எட்டு நிலைகளாகும்.

அடுத்த இரண்டு நிலை களில் இறைவழிபாட்டுச் சிந்தனை தோன்றிவிடுகிறது.

● எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங் கள் என்று எண்ணி அவற் றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.

● இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதி யில் கருணைமயமான இறைவனோடு இரண் டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு.

வள்ளலாரின் பத்து நெறிகள்

● கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

● மக்களிடம் ஜாதி- சமய வேறுபாடு கூடாது.

● மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

● ஏழைகளின் பசி போக்க வேண்டும்.

● ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

● உயிர்கள் யாவும் சமமானவை.

● அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

● தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக் கூடாது.

● உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

● உண்மையான அன்பால் கடவுளை வழி பாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

வள்ளலார் கூறிய வாழ்க்கை வழிமுறைகள்

காலையில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து தியானம் செய்ய வேண்டும். அதுபோல் இரவு படுக்கும் முன்பும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் சிந்தனையுடன் எழவேண்டும். அதே சிந்தனையுடன் உறங்க வேண்டும். கீரைகள், பழங் களைப் புசிப்பது நல்லது. எப்போதும் மன உற்சாகத்து டன் இருக்க வேண்டும். ஜீவகாருண்யத்துடனும் சுபகுணங்களுடனும் வாழ வேண்டும்.

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:

சென்னை 1825- 1858; கருங்குழி- 1858- 1867; வடலூர் 1867- 1870; மேட்டுக் குப்பம் 1870- 1874.

வள்ளலாரின் அற்புதங்கள்

தில்லை நடராசர் தரிசனம் காண இராமை யாப் பிள்ளை குடும்பத்துடன் தன் நான்கு மாதக் குழந்தையான வள்ளலாரை எடுத்துச் சென்றார். அக்குழந்தை நடராசப் பெருமானுக்கு கற்பூர ஆராதனை நடக்கும்போது கண்ணிமை யாது கண்டு மகிழ்ந்து, கலகலவென சிரித்தது. இது கண்ட தீட்சிதர், "இக்குழந்தை அம்பல வாணரின் அருட்குழந்தைதான்' என்று போற்றி னார்.

பிள்ளைப் பருவத்தில் முருகன் அருளால் திண்ணையிலிருந்து கீழே விழாமல் காக்கப் பட்டார். ஐந்து வயது குழந்தைப் பருவத்திலேயே சிதம்பர ரகசியத்தை மக்களுக்குக் காட்டினார். சக்திதேவியே அண்ணி வடிவில் வந்து இவருக்கு உணவு அளித்துள்ளார். தண்ணீராலேயே இவர் விளக்கெரிய வைத்துள்ளார்.

இராமலிங்கர் தனியறையில் கண்ணாடிமுன் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது முருகன் கண்ணாடியில் திருக்காட்சி தந்து, எல்லா கலைகளையும் ஓதாது உணர்த்தியருளினார்.

திருவொற்றியூர் பட்டினத்தடிகள் ஆலயத் தில் தொண்டாற்றிய மூதாட்டி, தான் உய்யுமாறு ஓர் அற்புதம் காட்டியருள வேண்டினதால், அவர் கரத்தில் மணலைக் கொடுத்தார் வள்ள லார். அது உடனே சிவலிங்கமாக மாறியது.

கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவரின் வாதநோயை- அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தீர்த்து வைத்து, வாத நோய் போக்கிய வள்ளலார் என்று பெயர் பெற்றார்.

துலுக்காணத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வள்ளலாரைப் பாட அழைத்தனர். அங்கு பலி கொடுக்க ஆடு, கோழிகள் இருந்தன. அது கண்ட வள்ளலார், "பலி கொடுப்பது கூடாது; ஆடு, கோழிகளை விடுவித்தால்தான் பாடுவேன்' என்றார். அப்படியே செய்தனர். பின்னர்தான் இவர் பாடினார். அப்போது இவருக்கு வயது 44. அன்று பக்தர்கள் இவருக்கு வள்ளலார் என்ற பட்டம் தந்தனர்.

வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பு

தவ அருட்செல்வர், ஆன்மிக விஞ்ஞானி, ஓதாது உணர்ந்தவர், வள்ளலார் எல பலவாறு போற்றப்பெற்றவர் இராமலிங்க சுவாமிகள். இவரது பெற்றோர் ராமையா- சின்னம்மை. சுபானு ஆண்டு, புரட்டாசி மாதம், 21-ஆம் தேதி (5-10-1823) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு மீன லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரத்தில் வடலூரில் அவதரித்தார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும்; சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மிக நாட்டத்தில் வளர்ந்த அவர், பெரியோர்களின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். மனைவியை ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். ராமகிருஷ்ணர்- சாரதாதேவிபோல் இருவரும் வாழ்ந்தனர்.

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00 மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இறைஜோதியில் கலந்தார். இந்த அறை திருக்காப்பீட்டு அறை எனப்படுகிறது.

தைப்பூசத்துக்கு மறுநாள் இவ்வறை திறக் கப்படுகிறது. அன்று சத்யஞான சபையிலிருந்து வள்ளலார் அருளிய திருவருட்பா பல்லக்கில் எடுத்து வரப்பட்டு இவ்வறையில் வைக்கப்படு கிறது. நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ்வறையை ஜன்னல் வழியாக பக்தர்கள் தரிசிக்கலாம்.

நீக்கமற நிறைந்த சிவன்!

சைவ சமயத்தவரால் முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள அருவம், அருவுருவம், உருவம் ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப் பர். இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.




அருவ நிலை

இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாக வும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்கு வர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் என வும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்கு வர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண் ணால் பார்க்க முடி யாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.

அருவுருவ நிலை

இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத் தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர். இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது; ஞான சக்தியும் கிரியா சக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது. இதை போக சிவம் என்றும் அழைப்பர். இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும். சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும். அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத் தில் உள்ளது. சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்; இன்னது என கூற முடியாதது. உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம். நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவ லிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத் தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. சந்திரசேகரர், உமா மகேஸ்வரர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சுவந்தராரி, மாதங்காலி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீல கண்டர், சக்கரப் பிரதானர், கஜமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங் களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியா கவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவர மூர்த்தி வகை

அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

சிவசக்தி

சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.

சிவாலயங்கள்

ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும். பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார். அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவாலயங் கள்.



பாடல் பெற்ற சிவத்தலங்கள்

புண்ணிய பாரத பூமியில் எண்ணிறந்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. அவற் றுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றால் சிறப்பு டைய சிவத்தலங்கள் மிகப் பல. அவற்றில் 274 சிவத் தலங்கள் முக்கியமானவையாகப் போற்றப்படுகின் றன. இச்சிவத்தலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தலங்களும் இடம்பெற் றுள்ளன. இவை தாமாகவே முக்கியத் துவம் வாய்ந்தன. புகழ்பெற்ற சைவ சமயக் குர வர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரால் போற்றிப் பாடப் பெற்றதால் மேலும் பெருமை பெற்று விளங்குகின்றன.

சிவத்தலத் தொகுதிகள்

சிவத்தலங்கள் பலவற்றுள் சிற்சில தலங்கள் ஒவ்வொரு வகைச் சிறப்பு காரணமாகத் தொகுதி களாக வகுக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வருகின்றன.

தென் கயிலாயத் தலங்கள்: காளத்தி, திருச் சிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்று தலங்கள்.

பஞ்சபூதத் தலங்கள்: திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்; திருவானைக்கா

அப்புத்தலம்; திருவண்ணாமலை தேயுத்தலம், காளத்தி வாயுத்தலம்; சிதம்பரம் ஆகாயத் தலம்.

பஞ்ச சபைத் தலங்கள்: திருவாலங்காடு ரத்தினசபை; சிதம்பரம் கனகசபை; மதுரை இரஜிதசபை; திருநெல்வேலி தாமிரசபை; திருக்குற்றாலம் சித்திரசபை.

பஞ்ச காட்டுத் தலங்கள்: திருவெண்பாக்கம் இலந்தைக்காடு; திருப்பாசூர் மூங்கிற்காடு; திருவாலங்காடு ஆலங்காடு; திருவெவ்வூர் ஈக்காடு; திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.

காசிக்கு சமமான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்.

மூன்று காயாரோகணத் தலங்கள்: காஞ்சி, குடந்தை, நாகப்பட்டினம்.

மூன்று மயானங்கள்: காஞ்சி, திருக்கடவூர், திருநாவலூர்.

எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.

திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;

திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;

திருவதிகை- திரிபுரம் எரித்தது;

திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;

திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;

வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;

திருக்குறுக்கை- காமனை எரித்தது;

திருக்கடவூர்- யமனை உதைத்தது.

ஏழு விடங்கத் தலங்கள்: உளியால் செதுக் கப்படாமல், தான்தோன்றியாக- சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங் களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி விசேஷம். இம்மூர்த்தம் வீதிவலம் வரும் பொழுது ஒரு தனி நடனமாடிக் கொண்டு வருவர். இவ்வகையாலும் இத்தலங்கள் விசேடம்.

திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்.

நாகைக் காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார தரங்க நடனம்.

திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.

திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.

திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்.

திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்.

பாடல் பெற்ற சிறப்போடு அற்புதங்களின் சிகரமாக அமைந்துள்ள சிவத்தலங்களைப் போற்றி வழிப்பட்டு உய்தல் நம்மவரின் கடமை ஆகும்.      

தைப்பூசம்

முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் மட்டுமின்றி, சிவ- வைணவ- அம்மன் கோவில்களிலும் தைப்பூசம் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும்.

அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.

திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம்
சிறப்பு வாய்ந்தது. ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.

நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேள்வி மலை. இங்குள்ள கோவிலில் முருகப் பெருமான் எட்டடி, எட்டு அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் சுமார் ஆறடி, இரண்டு அங்குல உயரத்தில் ஸ்ரீவள்ளி உள்ளாள். வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. எனவே இங்கு தெய்வானை விக்கிரகம் இல்லை. ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

தைப்பூசத் திருநாள் முருகப் பெருமானுக்குரியதாகப் போற்றப்பட்டாலும், தில்லை வாழ் நடராஜப் பெருமானுக்கும் உரிய நாள் என்று புராணம் கூறுகிறது.

ஆதிகாலத்தில் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார். அதுவே ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புத நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் பல திருத்தலங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்

சிவராத்திரி

சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன.

பொதுவாக எல்லா சிவாலயங் களிலும் மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப் படுகிறது.

கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.

மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.

சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை "லோக சிவராத்திரி' என்று சொல்வார்கள். இவ்வாண்டு திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.

சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திரி.

தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.



சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவ பெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. இயலாத வர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங் களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

அன்று தானதர்மங்கள் செய்வது சிறப்பிக்கப் படுகிறது.

சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!

மறதி- என்பது பலமா, பலவீனமா?

றதி- என்பது பலமா, பலவீனமா? மறதி பலமாவ தும் உண்டு; பலவீனமாவதும் உண்டு. புறவுலகத்தை மறந்து தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேடுவதில் மறதியே பலம். ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது.

"நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.'

"எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள்' என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.

ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். கடுமையான போர்க்களத்தில் ஒரு காட்சி.

அரக்கன் சூரபத்மனின் வீரமகேந்திர புரம். போர்க்களத்தில் நிற்கிறான் சூரன். சுற்றிலும் ஆயிரம் ஆயிரம் வெள்ளம் அசுரர் சேனைகள். எதிரே லட்சத்து ஒன்பது வீரர்களுடன் தேவசேனா பதியாக பாலமுருகன் நிற்கி றான். அவனது அழகுத் திருமுகம் காண்கிறான் சூரன். பாலனென்று பரிகாசம் செய்தவனிடம் பாசம் பொங்குகிறது. முகத்தைப் பார்த்தவன் அந்த அழகில் மயங்கி அப்படியே கீழே பார்க்கிறான். இரு செம்மலர்த் திருவடிகள். அந்தத் திருவடிகளில் உள்ள சிலம்புகளில் ஓங்கார ஒலி கேட்கிறது.

அப்படியே நிமிர்ந்து ஆறு திருமுகங்களின் பேரழகைக் காண்கிறான்.

"ஆஹா, என்ன தெய்வீகக் களை!' என்று வியக்கிறான். கணநேரம் தன்னை மறந்து வணங்குவதற்கு கைகளைத் தூக்கு கிறான். அவ்வளவுதான்! அடுத்த கணம், "சீ, இச்சிறு பாலனுடனா நான் போரிடுவது?' என்ற ஆணவம் தலை உச்சிக்கு ஏறிவிட்டது. ""ஏ, சிறுவனே! நான் கையில் ஆயுதம் எடுக்குமுன் ஓடிவிடு!'' என்று உறுமுகிறான்.

அருகேயிருந்த தம்பி சிங்க முகன் மெதுவாகக் கூறுகிறான்: ""அண்ணா, அது சிறுபாலன் அல்ல; சிவபாலன். அவனை எதிர்ப்பது சிவனையே எதிர்ப்பதாகும்.''

""ஏய் சிங்கமுகா, என்ன பிதற்றுகிறாய்? சிவனாம் பாலனாம். சிவனும் சக்தியும் எப்பொழுதடா கூடிக்குலவினார்கள்? குழந்தை பெற்றார்கள்? என்னிடமே புதுக்கதை கூறுகி றாயா?''

""மன்னிக்க வேண்டும் அண்ணா. புதுக்கதை இல்லை; பழங்கதைதான். நாம் சிவனாரிடம் வரம் பெற்றபோது அவர் சொன்னதை மறந்து விட்டீர்கள் அண்ணா.''

"சிங்கமுகா, சூரியப்பகைஞனான எனது மகன் பானுகோபன் இறந்ததும் உனக்கும் பயம் வந்துவிட்டது! அன்று சொன்னதை நான் ஒன்றும் மறக்கவில்லை. சிவனார்தான்

எனக்கு "யாவராலும் வெலப்படாய்' என்று வரம் தந்திருக்கிறார்.''

""நீங்கள் சொன்னது சிவன் தந்த வரத்தின் பிற்பகுதி. முற்பகுதியில் அவர் சொன் னது "எமது சக்தி ஒன்றின் அல்லால் யாவராலும் வெலப்படாய்' என்பதுதான்.''

""நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

""எமது சக்தி என்று சிவனார் அன்று சொன்னதை நான் மறக்க வில்லை. நீங்கள் மறந்துவிட்டீர்கள். சிவனது சக்தியாக- சிவனிடமிருந்து மட்டுமே தோன்றியவன்தான் இந்த சிவபாலன். நீங்கள் எண்ணியிருப்பதுபோல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனல்ல! முழுக்க முழுக்க ஓர் ஆணின் சக்தியில் மட்டுமே தோன்றிய ஆண் மகன்! எனவே அவர் அன்று சொன்ன "எமது சக்தி' என்பது இச்சிறு பாலனே.''

அப்போதும் அதன் உண்மையை சூரன் உணரவில்லை. ""எவரானாலும் சரி; இதற்கெல் லாம் அஞ்சி நான் தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன். முன்வைத்த காலைப் பின்வைப்பவன் இந்த சூரனல்ல. சிங்கமுகா, அந்த சிறுவனை நீயே தொழுதுகொண்டிரு!'' என்றான்.

இவ்வாறு சூரபத்மன் வாங்கிய வரத்தை மறந் தது இயல்புதான். அந்த மறதிக்குக் காரண மாயிருந்தது மனதில் குடிகொண்டுவிட்ட ஆணவம்! எனவேதான் கருணை வள்ளலாகிய முருகனும் சூரனை அழிக்காமல் அவனது ஆணவத்தை மட்டுமே அழித்தான்.

பொதுவாக அசுரர்கள் கடுந்தவம் புரிவதில் வல்லவர்கள். அதன்பின் தந்திரமாக சாகாவரம் கேட்பதும் அவர்களது வழக்கம். வரம் கொடுப்பதில் எளியவர்கள் சிவனும் பிரம்மனும். இவர்கள் கேட்டபடி வரத்தைக் கொடுத்து விடுவர். பின்னர் அசுரர்கள் ஆணவத்தில் அழிவுகளைச் செய்யும்போது இவர்களாகவோ அல்லது சக்திதேவியின் துணைகொண்டோ அல்லது திருமாலின் துணையினாலோ அந்த அரக்கர்களை அழிப்பதும் புராணங்கள் காட்டும் உண்மை.

இவர்கள் கொடுக்கும் வரத்தில் எங்காவது சிறு விஷயம் அசுரர்களின் அழிவுக்கு ஆதார மாய் அமைந்துவிடும். சூரன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவன் வரம் வாங்கும் பொழுது, "தாங்கள் அன்னை சக்திதேவியுடன் கூடாமல் பிறக்கும் ஒரு பிள்ளையால்தான் எனக்கு மரணம் வரவேண்டும்' என்று சாமர்த் தியமாகக் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இன்றி பிள்ளை பிறக்காது என்ற அவன் எண் ணம் தவறாகிப் போனது. இரணியன் பெற்ற வரமும் இப்படித்தான் அமைந்துவிட்டது.

இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.

இராவணன் கேட்கும் முன்னாலேயே, ""முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று- எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும்'' என்றார்.

இந்த வரத்தை இராவணன் எப்படி- எப்பொழுது மறந்தான்?

சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத் தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான்.

வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது.

""சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே?'' என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி.

இராவணன், ""அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி'' என்றான்.

""என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா?'' என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.

இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ""ஆம் தேவி. இப்பொழுதுதான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது.

அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.''

""அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா?''

""அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை.''

""சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணிதான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்துவிட்டீர்களே சுவாமி!''

""ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.''

ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள்.

இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.

"காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன்
நாமம்கெடக் கெடும் நோய்.'

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்


ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1836-ல் பிறந்தவர். அவரது 177-ஆவது அவதார நன்னாள் இவ்வாண்டு 23-2-2012-.

நமது ஆன்மிக இந்தியாவில் சாதுக்களுக் கும் தபஸ்விகளுக்கும் குறைவே இல்லை. ஆனால் எல்லாருடைய பெயர்களையும் யாவரும் அறிவதில்லை; பிரபலமாவதும் இல்லை. பொதுவாக ஞானிகள் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். என்றாலும் சீடர் களாலும் அன்பர்களாலும் அவர்கள் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனர்.

காஞ்சி மகா பெரியவரும் பால் பிரண்டனும் சொல்லாமலிருந்தால், ரமண மகரிஷியை உலகம் பரவலாக அறிந்திருக்காது. பரமஹம்ச யோகாநந்தர் இல்லாவிட்டால் மகா அவதார் பாபாவைப் பற்றி அறிய நேர்ந்திருக்காது. அதுபோல சுவாமி விவேகானந்தர் இல்லாவிடில் ராமகிருஷ்ண ரைப் பற்றியும் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிந்திருக்காது.

இன்று உலகெங்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆன்மார்த்தமாக வணங்கும் ஆன்மிக குருவாக விளங்கிக் கொண்டிருக் கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவ்வளவு பேருக்கும் அருவ நிலையில் நின்று அருள்புரியும் பேராற்றல் யாருக்கு இருக்கும்? இறை அவதாரத்துக்கே இருக்கும். ராமகிருஷ்ணரும் ஒரு அவதாரமே.

ராமகிருஷ்ணரின் தந்தை க்ஷீ திராம் சத்தியசீலர். ஒரு பொய் கூற மறுத்ததால், தன் எஜமானரால் ஊரைவிட்டு வெளியேற்றப் பட்டவர். ஒருமுறை அவர் தனது முன்னோர் களுக்கு சிரார்த்த கர்மங்கள் செய்ய கயையில் உள்ள விஷ்ணுபாதம் தலத்துக்குச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, "உமது பக்திக்கு மகிழ்ந்தோம்; உமக்கு மகனாக அவதாரம் செய்வோம்' என்று கூறினாராம். அவரோ, "சுவாமி, நான் பரம ஏழை. என்னால் உங்களை சிறப்பாகப் பராமரிக்க இயலாதே...' என்று கூற, "நீ பக்தியுடன் அளிக்கும் எளிய உணவே போதும்' என்று சொல்லி மறைந் தாராம். கண்விழித்தெழுந்த க்ஷீ திராம் கனவில் கண்டதை எண்ணி பிரம்மித்தார். திருமாலின் பெருங்கருணையை நினைத்து உள்ளம் பூரித்தார். அந்த மனநிறைவோடு தான் வசித்த கமார்புகூர் வந்து சேர்ந்தார்.

அங்கு அவர் மனைவி கூறிய செய்தி அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

அதாவது- அவ்வூரிலுள்ள சிவாலயத்துக்கு அவள் வழிபடச் சென்றபோது, சிவலிங்கத் திலிருந்து ஒரு பேரொளி தோன்றி அவளுக் குள் புகுந்ததாகவும்; அவள் நெடுநேரம் அங்கேயே மூர்ச்சித்துக் கிடந்ததாகவும்; பின்னர் கண்விழித்தபோது தான் கருவுற்றி ருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினாள். நெகிழ்ந்த க்ஷீ திராம், "இந்த ஆன்மிக ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம்' என்றார். அவ்வாறு இறையருளால் அவதரித்தவரே ராமகிருஷ்ணர்.

சைதன்ய மகாப்பிரபுவும் இவ்வாறு அவதரித்தவர்தான். ராமகிருஷ்ணரே தான் சைதன்யரின் மறு அவதாரம் என்று கூறினார். சைதன்யர்போல பலருக்கு காட்சி யும் கொடுத்தாராம். சைதன்யர் ஒரு காஷ்ட சந்நியாசி; இருதாரம் மணந்தவர்; படித்த மேதை. ராமகிருஷ்ணரோ கல்வி பயிலாதவர். ஆனால் அவர் பேசியது எல்லாமே வேதாந்தம், உபநிடதம். ராஜாஜி அவர்கள் ராமகிருஷ்ணரின் வாக்குகளை "ஸ்ரீராமகிருஷ்ண உபநிடதம்' என்று கூறியிருக்கிறார்.

ராமகிருஷ்ணரின் அண்ணன் ராம்குமார் தட்சினேஸ்வர காளி கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தார். அருகே சிவன், ராதாகிருஷ்ணர் சந்நிதிகளும் உண்டு. இளம் வயது ராமகிருஷ்ணருக்கு கல்வியில் நாட்டமில்லாததால், அண்ணனுக்கு உதவியாக காளி கோவிலுக்குச் சென்றார். ராதாகிருஷ்ணர் சந்நிதியில், சுவாமியின் பாதங்களுக்கு அருகே பாகவதமும், வால்மீகி ராமாயணமும் வைக்கப்பட்டிருக்கும். பாகவதம் கண்ணனின் லீலைகளை விரிவாகக் கூறும் நூல். அங்கு அமர்ந்து ராமகிருஷ்ணர் தியானம் செய்யத் தொடங்கி னார். அவரது பக்தி ஈடுபாட்டின் காரண மாக அந்த ராதாகிருஷ்ணன் பாகவதத்தில் புகுந்தார்; பாகவதம் ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. அவர் கூறினார்: "பகவான், பாகவதம், பாகவதன் யாவும் ஒன்றே!' எத்தகைய அத்வைத தத்துவம்!

ராமகிருஷ்ணர் காளி தேவிக்கு பூஜை செய்ய நியமிக்கப்பட்டார். அந்த அன்னையை தியானித்து வணங்கிய ராமகிருஷ்ணர், அவளது தரிசனத்தை வேண்டினார். ஆனால் தரிசனம் கிட்டாமல் நாட்கள் கடந்தன. ஒருநாள் அவரது பக்தி மிகவும் முற்றியது. பவதாரிணி அன்னையின் தரிசனம் காணாமல் இந்த உயிர் எதற்கு என்று தீர்மானித்த அவர், அன்னையின் கரத்திலிருந்த வாளையே எடுத்து தன் தலையை வெட்டப்போக, அன்னை அவருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்தருளினாள்.

ராமகிருஷ்ணரைப் போன்ற உச்சநிலை பக்தர்களைக் காண்பது அரிது. அன்னைக்கு பூஜை, நிவேதனம் செய்யும் சமயம் பாவ சமாதி நிலை ஏற்பட்டுவிட்டால், தனக்கே பூஜையும் நிவேதனமும் செய்துகொள்வாராம்.

ஒருமுறை அவர் அன்னைக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, அரசி ராஸ்மணி தேவி வந்தாளாம். அவளது மனம் முழுமையாக அன்னையிடம் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதுபற்றிய கவலை அவள் மனதை ஆக்ரமித்திருந்தது. இதையுணர்ந்த ராமகிருஷ்ணர், "அன்னையின் சந்நிதியில் வேறு நினைவா?' என்று அரசியின் கன்னத் தில் அறைந்தாராம். பார்த்த அனைவரும் என்ன ஆகுமோ என்று அஞ்சி நிற்க, அரசியோ, "தவறு என்மீதுதான்' என்றாளாம்.

பைரவிப் பிராம்மணி என்றொரு யோகினி. அவள் ராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண தட்சிணேஸ் வரத்துக்கு வந்தாள். ராமகிருஷ்ணரின் நடை, பாவனை, முக லட்சணங்களைப் பார்த்ததுமே அவர் ஒரு அவதார புருஷர் என்பதைக் கண்டு கொண்டாள். முதிர்ந்த ஞானிகள் கொண்ட சபையைக் கூட்டி, அவரை பரிசீலனை செய்யச் சொல்லி, அவர் ஒரு அவதார புருஷர் என்று உணர்த்தினாள். சாக்த வழிபாட்டை ராமகிருஷ்ணருக்கு தீவிரமாக போதித்தவள் இந்த யோகினியே. ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் சென்றதில்லை. குருமார்களே இவரைத் தேடிவந்து போதித்தனர்.

ஒருமுறை சீதாராம தரிசனம் காண, பஞ்சவடியில் தன்னை அனுமனாக பாவித்து தவம் மேற்கொண்டார். தீவிர உபாசனையில் அவரருகே ஒரு கருங்குரங்கு வந்து அமர்ந்த தாம். இந்த நிலையில் சீதை அவருக்கு தரிசனம் தந்து அவருள் மறைந்தாளாம்.

அதன்பின் ராமரும் தரிசனம் தந்து அவருள் மறைந்தாராம். எனவே, அனுமனைத் துதித் தால் சீதாராம தரிசனம் காணலாம் என்பர்.

அதுபோல கிருஷ்ண தரிசனம் காண, தன்னை ராதையாக பாவித்து தியானம் செய்தாராம். பெண்களைப்போலவே புடவை, ரவிக்கை, அணிகலன்கள் பூண்டு, பெண்கள்போலவே பேசிப் பாடினாராம்.

அந்த தீவிர மாதுர்ய பக்திரச சாதனையில், ராதா தேவி தரிசனம் தந்து அவருள் மறைய, அவளைத் தேடி வந்த கிருஷ்ணரும் காட்சி தந்து அவருள் மறைந்தாராம்.

சம்புசரண் மல்லிக் என்பவர் ஒரு ஆழ்ந்த கிறிஸ்துவ பக்தர். அவர் ஒருமுறை ராமகிருஷ்ணருக்கு பைபிளைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட ராமகிருஷ்ண ருக்கு ஏசுமீது ஈடுபாடு உண்டாயிற்று. சம்புசரண் வீட்டில் மேரியுடன் உள்ள குழந்தை ஏசுவின் படம் இருந்தது. அதையே உன்னிப்பாக தியானித்தார் ராமகிருஷ்ணர். படம் உயிருடன் பிரகாசித்தது. அதிலிருந்து தோன்றிய ஒளி ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. ஏசுவின் நினைவிலேயே மூன்று நாட்கள் மூழ்கியிருந்தாராம். பிரபுதயாள் சர்மா என்ற ஏசுபக்தர் 31-8-1885-ல் அவரைக் கண்டு, ஏசுதான் இந்த ராமகிருஷ்ணர் என்று பூஜித்து வணங்கினாராம்.

அவருக்கு அல்லாமீதும் ஈடுபாடு இருந்தது. தனது ஒன்பதாவது வயதிலேயே கமார்புகூரில் இருந்த மசூதிக்கு நமாஸ் செய்யச் சென்றிருக்கிறார்.

அங்குள்ள அரச மரத்துக்குக் கீழே ஒளிமயமான ஒருவரை தரிசித்து, அந்த உன்மத்த நிலையில் இரண்டரை மணி நேரம் இருந்தாராம். பின்னர், பஞ்சவடியில் 1866-ல் கோவிந்த ராய் என்ற ஸுபி யோகி, குரானைப் பற்றியும் ஸுபி தத்துவங்களையும் ராமகிருஷ்ணருக்கு போதித்திருக்கிறார். அப்போது இஸ்லாமியத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர், அவர்களைப்போலவே உடையணிந்து "அல்லா அல்லா' என்று ஆழ்ந்து துதித்து நமாஸும் செய்திருக்கிறார். அந்த உச்ச நிலையில் மூன்று நாட்கள் கழிந்தபோது, பெரிய தாடியுடன் கூடிய- ஒளி மிகுந்த முகம்மதுவையும் தரிசித்தாராம்; அவரும் ராமகிருஷ்ணருள் புகுந்தாராம்.

இவ்வாறு எண்ணற்ற தெய்வீக அனுபவங்களைக் கண்டவர் ராமகிருஷ்ணர். அவர் மற்றவர்களுக்கு தெய்வ வடிவங்களில் காட்சியளித்த சம்பவங்களும் ஏராளம்.

அவரது வாழ்க்கை ரகசியம் ருசிக்க ருசிக்கத் திகட்டாத ஆன்மிகப் பேரமுதம்!

தந்திர யோகத்தின் 24 குறியீடுகள்

தந்திர யோகத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒருவர் இந்த பாடத்திட்டத்தின்படி 24 வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய திருக்கும். இவற்றையே தந்திர யோகத்தின் 24 குறியீடுகள் என்று கூறுகிறார்கள். அவை எவை எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.


இந்து ஆகமங்கள் கூறும் ஏழு குறியீடுகள்

தந்திர யோகத்தின் முதல் ஏழு குறியீடு களை இந்து ஆகமங்களான சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள் ஆகியவற்றிலிருந்தே கற்றுக்கொள்ள முடியும்.

முதல் ஏழு குறியீடுகள் குறித்த விளக்கங் கள் ஆகமங்களில் பெரும்பாலும் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் வடிவிலேயே இருக்கின்றன. சிவன் குருவாகவும், பார்வதிதேவி சிஷ்யை யாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆகமங்கள் கூறும் ஏழு குறியீடுகள் எவை?

1. படைப்பு

இந்த பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப் பட்டது? கிரகங்களும் பூமியும் எவ்வாறு உண்டாயின? உயிரினங்கள் எவ்வாறு உருவாகின என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைக் கூறுவதே முதலாம் குறியீடு!

2. அழிவு

உருவான அனைத்திற்குமே அழிவு என்ற முடிவு கட்டாயம் உண்டு. பிரபஞ்சத்தின் அழிவு, உலகத்தின் அழிவு, உயிர்களின் அழிவு போன்றவை எவ்வாறு நிகழும் என்பதை இந்த இரண்டாம் குறியீடு விளக்கமாக எடுத்துரைக்கின்றது.

3. வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. வெவ்வேறு ஆகமங்களில் இவை விவரிக்கப்பட்டுள்ளன.

4. சாதனை

ஆண்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகள், பெண்களுக்கான ஒழுக்க முறைகள், சம்சாரிகள், துறவிகள், தலைவர்கள்,
அரசர்கள் என ஒவ்வொரு வகையினரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளை இந்த சாதனை எனும் நான்காம் குறியீடு விளக்குகிறது.

5. புனஸ்கரணம்

ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சடங்கு முறைகளைக் கூறுவதே "புனஸ் கரணம்' என்ற தந்திர யோகக் குறியீடு. சைவ ஆகமங்களில் ஒருவகை புனஸ்கரணமும், வைணவ ஆகமங்களில் வேறுவகை புனஸ் கரணங்களும், சாக்த, பௌத்த ஆகமங் களில் மிகவும் வேறுபட்ட வேறுவகையான சடங்கு முறைகளும் தரப்பட்டுள்ளன. ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக உள்ளாரோ, அந்த மத ஆகமங்கள் கூறும் புனஸ்கரணங் களே அவருக்கு விதிக்கப் பட்டவை.

6. ஷட் கர்மங்கள்

"ஷட்' என்றால் "ஆறு' என்று பொருள். தந்திர யோகம் பயிலுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆறு வகையான வித்தைகளையே ஷட் கர்மங்கள் என வகைப்படுத்தி யுள்ளனர். பிற ஆகமங்களை விட சாக்த ஆகமங்களிலேயே இந்த ஷட் கர்மங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.

இதில் கூறப்பட்டுள்ள ஆறு வகையான கருமங்களும் பிளாக் மாஜிக் எனப்படும் எதிர்மறை வித்தைகளாகும். தந்திர யோகத்தை நல்ல வழியில் பயன்படுத்தி முக்தி நிலையை அடைய விரும்புகிறவர்கள் இந்த கர்மங்களின் பக்கமே திரும்ப மாட்டார்கள்.

தந்திர யோகத்தை தீய வழிகளில் பயன் படுத்தி பணம், புகழ் ஆகியவற்றை அடைய விரும்பும்  கீழான மனோபாவம் கொண்டவர் கள் இந்த ஷட் கர்மங்களை மட்டுமே இறுகப் பற்றிக் கொள்கிறார்கள். இது பாவ கர்மாக்களைக் கொண்டு சேர்க்கும். ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

தந்திர யோகம் கூறும் ஆறு வகையான கர்மங்கள் (வித்தைகள்) எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.

கர்மம்- 1 சாந்தி

தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தும் தந்திர வித்தையே "சாந்தி' எனப் படுகிறது. தந்திர யோக வழிபாடுகளில்- குறிப்பாக சாக்த மத வழிபாடுகளில் பல உக்கிரமான தெய்வங்களை (காளி) வழிபடுகிறார்கள்.

இந்த உக்கிரமான தெய்வங்களின் உக்கிரத்தைக் குறைத்து, சாந்தப்படுத்தி நமது கோரிக்கைகளுக்கு அவர்களை செவி சாய்க்க வைக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தரும் வித்தையே சாந்தி என்ற கர்மம்.

கர்மம்- 2 வசீகரணம்

வசீகரணம் என்றால் வசியப்படுத்துதல். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வசியப்படுத்தும் முறைகளோடு இயற்கை, சிறு தெய்வங்கள் ஆகியவற்றை வசியப்படுத்தும் முறைகளும் வசீகரணத்தில் விளக்கப்படுகின்றன.

கர்மம்- 3 மாரணம்

தனது பகைவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் மாந்திரீக முறையே மாரணம் எனப்படுகிறது.

கர்மம்- 4 உச்சாடனம்

தீய சக்திகளை- பேய், பிசாசுகளை விரட்டும் மாந்திரீக முறையே உச்சாடனம்.

கர்மம்- 5 ஸ்தம்பனம்

தனது தந்திர யோக வலிமையால் எதிரி களை ஸ்தம்பிக்கச் செய்வது- அவர்களது செயல்களை முடக்குவதே ஸ்தம்பனமாகும். மனிதர்களை மட்டுமின்றி பிற உயிர்களை யும், சிறு தேவதைகளையும்கூட ஸ்தம்பிக்கச் செய்யும் வழிமுறைகள் உள்ளன.

கர்மம்- 6 வித்வேஷணம்

கொடூரமான- தீய ரத்தவெறியை உருவாக் கும் மாந்திரீகப் பயிற்சி வித்வேஷணம் எனப் படுகிறது. மனிதர்களிடம் மட்டுமின்றி, பிற உயிர்களிடத்தும் இந்தப் பயிற்சியால் ரத்தவெறியை உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு யானைக்கு மதம் பிடிக்கச் செய்து எதிரியைக் கொல்ல ஏவிவிட முடியும்.

இந்த ஷட் கர்மங்கள் அனைத்துமே பாவ கர்மாக்களைக் கொண்டு வந்து சேர்க்கும். வாம முறையில் செல்பவர்கள் மட்டுமே இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். தட்சிண முறை தந்திர யோகத்தில் இந்த ஷட் கர்மங்களுக்கு இடமில்லை.

7. தியான யோகம்

தந்திர யோகத்தின் ஏழாவது குறியீடான தியான யோகம், தியானம் குறித்தும் யோக சாதனைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறது.

யாமளைகள் கூறும் எட்டு குறியீடுகள்

தந்திர யோகத்தின் முதல் ஏழு குறியீடுகளும் ஆகமங்களில் விளக்கப்பட்டுள் ளன. அடுத்த எட்டு குறியீடுகள் (8 முதல் 15 வரை) யாமளைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.

8. படைப்பு பற்றிய விளக்கங்கள்

யாமளைகள் கூறும் படைப்பு பற்றிய விளக்கங்களில் சில இன்றைய நவீன விஞ்ஞானம் கூறும் விளக்கங்களுக்கு ஒத்து வருகின்றன. சில விளக்கங்கள் நவீன அறிவியலால் சாத்தியமற்றவை என ஒதுக்கத்தக்கதாக உள்ளன.

9. கோள்கள், விண்மீன்கள் பற்றிய வர்ணனைகள்

நவீன டெலஸ்கோப்புகள், கருவிகள் எதுவுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது ஞானிகள் கோள்கள் குறித்தும் விண்மீன்கள் குறித்தும் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவை குறித்து யாமளைகள் விளக்குகின்றன.

10. தினசரி சமயச் சடங்குகள்

ஒவ்வொரு மதத்தினரும் தினசரி செய்ய வேண்டிய பூஜைகள், சடங்குகள் இந்த 10-ஆம் குறியீட்டில் விளக்கப்படுகின்றன.

11. பரிணாம வளர்ச்சி

நவீன விஞ்ஞானத்தில் 18-ஆம் நூற்றாண் டில்தான் பரிணாம வளர்ச்சி தத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. சார்லஸ் டார்வினை பரிணாம வளர்ச்சியின் பிதாமகன் என்று கொண்டாடுகிறோம். ஆனால் டார்வினுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட யாமளைகளில் பரிணாம வளர்ச்சித் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

12. சூத்திரங்கள்

கணிதம், வான இயல், கட்டடக் கலை போன்ற பல துறைகளில் பயன்படக்கூடிய பலவிதமான சூத்திரங்கள் (ஃபார்முலாக்கள்) இந்த 12-ஆவது குறியீட்டில் தரப்பட்டுள் ளன. நமது கோவில்கள், நாம் பயன்படுத்தும் யந்திரங்கள் போன்றவை இந்த சூத்திரங் களின் அடிப்படையிலேயே அமைக்கப்படு கின்றன.

13. வர்ண பேதம்

வர்ண பேதங்கள் எவ்வாறு உருவாகின- ஒவ்வொரு வர்ணத்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் ஆகியவை இதில் விளக்கப்படுகின்றன.

14. சாதி பேத தர்மங்கள்: (தர்ம விதிகள்)

15. யுக தர்மங்கள்

ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள்.

தந்திர யோகக் குறியீடுகள் 1 முதல் 7 வரை ஆகமங்களிலும்; 8 முதல் 15 வரை யாமளைகளிலும் கூறப்பட்டுள்ளன என்பதைக் கண்டோம். மீதமுள்ள குறியீடு கள் (16 முதல் 24 வரை) நிகமங்களிலும், பிற தந்திர யோக நூல்களிலும் விளக்கப்பட்டுள் ளன. நிகமங்களில் பார்வதி குருவாகவும் சிவன் சீடனாகவும் உருவகம் செய்யப் பட்டுள்ளனர்.

16. மந்திரங்கள்

பல்வேறு மந்திரங்கள், அவற்றின் செயல் முறைகள், எந்த மந்திரத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பனவற்றை இந்த குறியீடு விளக்குகிறது.

17. யந்திரங்கள்

கோடுகள், எழுத்துகள், எண்கள் ஆகியவற்றால் பலவகையான யந்திரங்களை உருவாக்க முடியம். உதாரணமாக ஸ்ரீ சக்கரத்தைக் கூறலாம். இந்த யந்திரங்கள் அபரிமிதமான சக்தியை உருவாக்குபவை. இந்த யந்திரங்களை அமைக்கும் முறைகள், உருவேற்றும் வழிகள், பலன்கள் ஆகியவை இந்த 17-ஆவது குறியீட்டில் உள்ளன.

18. கடவுள்கள் மற்றும் அவர்களது துணைவியர் பற்றிய வர்ணனைகள்

நமது கலாசாரத்தில் சக்தியையே கடவுள் களாக உருவகப்படுத்தியுள்ளனர். சக்தி பல வடிவங்களாகவும், பல நிலைகளிலும் உள்ளது. ஒவ்வொரு வகையான சக்தியும் ஒவ்வொரு கடவுளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளது.

எந்த ஒரு சக்தியாக இருந்தாலும் அதனுள் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு சக்திகள் மறைந்துள்ளன. இந்த இரண்டும் இணையும்போதே சக்தி செயல்படத் துவங்கும். (உதாரணமாக மின்சார சக்தி).

நவீன விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கருதப்படும் இந்த நேர் சக்தி, எதிர்சக்தி தத்துவம் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் நமது இந்தியக் கடவுள்கள் அனைவருமே ஆண் (நேர்சக்தி), பெண் (எதிர்சக்தி) என ஜோடி ஜோடியாக உள்ளனர்.

இந்தக் கடவுள்கள், அவர்களது துணை ஆகியவற்றை விளக்குவதே 18-ஆவது குறியீடு.

19. தீர்த்த தலங்களும் அவற்றின் தன்மைகளும்

மலைகள், ஆறுகள், கடல்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள சில இடங் களில் சக்தியின் அளவும், வெளிப்பாடும் மிகமிக அதிக நிலையில் இருக்கும். இந்த இடங்களையே தீர்த்த தலங்களாக நமது முன்னோர்கள் அமைத்தனர்.

ஒவ்வொரு தீர்த்த தலத்தின் சக்திநிலை, அந்த சக்தியின் தன்மைகள், அந்த இடத்திற்குச் சென்று வழிபடும் முறைகள், அதன் நன்மைகள் ஆகியவற்றை இந்த 19-ஆவது குறியீடு விளக்குகின்றது.

20. விரத அனுஷ்டானங்கள்

விரதங்களுக்கு இந்திய கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடமுண்டு. விரதங்களால் நமது சக்திநிலை உயரும். உடலும் மனமும் பண்படும். இந்த விரதங்களை அனுஷ்டிக்கும் முறைகளை 20-ஆவது குறியீட்டில் காணலாம்.

21 புனிதமானவை- புனிதமற்றவை

இந்திய கலாச்சாரத்தில் மட்டுமின்றி, தொன்மையான அனைத்து கலாச்சாரங்களிலும் சில பொருட்களைப் புனிதமானவை எனக் கொண்டாடும் வழக்கமும்; சிலவற்றை புனிதமற்றவை என விலக்கி வைக்கும் பழக்கமும் உள்ளது. எவை எவை புனிதமானவை- எவை எவை புனிதமற்றவை என்பதையும் அதற்கான காரணங்களையும் தந்திர யோகத்தின் 21-ஆவது குறியீடு பட்டியலிடுகிறது.

22. அரசர்களுக்கான தர்ம நெறிகள்

"அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்பது பழமொழி. ஒரு நாட்டை ஆளும் அரசன் தர்மநெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால்தான் அந்த நாடும் மக்களும் நலமாக இருக்க முடியும். அரசர்களுக்கான தர்மங்கள், நெறிகள் 22-ஆம் குறியீட்டில் விளக்கப் பட்டுள்ளன.

23. சாதாரண மக்களுக்கான தர்ம நெறிகள்
24. ஞானம் குறித்த விளக்கங்கள்

ராமநவமி

ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருத்தப்பட்டன. அவர்கள்மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதை களின் மனக் குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு.

முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மை யாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-ஆவது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான்.

தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு. இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி, தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும்.

ராமநவமியன்று ராமர் படத்தையும் ராமாயண காவியத்தையும் பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். ராமர் பட்டாபிஷேக படத்தைப் பூஜிப்பதும் நன்று. வடை, பருப்பு, பானகம், நீர்மோர், பாயசம் போன்றவற்றைப் படைத்து, பின் அவற்றை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். விசிறி தானம் செய்வதும் நல்லது. நியமத்தோடு விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.


ராமநவமியன்று, "ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும்; எல்லை யற்ற புண்ணியம் கிட்டும். ராமநவமி யில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப் பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

"ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள "ரா'வும் "ம'வும் இணைந்து உருவானதே "ராம' எனும் மந்திரம். இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக் கூடியது. "ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்களெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும்; "ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போடு அந்தப் பாவங்கள் மீண்டு வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.

வால்மீகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதிவிட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து, அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர். முன்னதாக பிரம்மா நூறு கோடி சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றியதாகவும்; அதை வால்மீகி 24,000 சுலோகங்களுடன், பல கிளைக் கதைகளைக் கொண்டு 500 சர்க்கங்கள், ஆறு காண்டங் கள் உள்ளதாக எழுதினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

ராமபிரான் முடிசூடிக்கொண்டபின் அஸ்வமேத யாகம் செய்தார். அதன்பின் அஸ்வமேத யாகத்தைவிட பத்து மடங்கு பெரிதான வாஜபேயம், நூறு மடங்கு பெரிதான ஸுவர்ணகம், கோஸவம், அதிராத்திகம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களையும் 16 ஆண்டுகள் செய்தார். இவற்றுக்கு வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கச்யபர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், பரத்வாஜர், துர்வாசர், பார்கவர், வாமனர், மார்கண்டேயர், மௌத்கல்யர், கர்க்கர், சியவனர், சதானந்தர், சுப்ரமர், அகத்தியர், அத்ரி, வால்மீகி போன்ற ரிஷிகளும் முனிவர்களும் துணையிருந்தனர்.


ராமாயண கதாபாத்திரங்கள்


சீதை: ஏர் முனையில் கிடைத்தவள் என்பதால் சீதை என பெயர் பெற்றாள். பூமகளின் அவதாரம் என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கினாள்; கற்புக் கனலியாகவும் விளங்கினாள். சிவபெருமான் சீதையாகவும்; உமையவள் ராமனாகவும் அவதரித்ததாக சில புராணங்கள் கூறுகின்றன. சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும் அமைந்திருந்தது.

லட்சுமணன்: பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே ராமனுக்குத் தம்பியாக அவதரித்தான். வெளியில் உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு செய்யவே பிறந்த உத்தமன். இவனது மனைவி ஊர்மிளா; மகன்கள் அங்கதன், சந்திரசேது.


பரதன்: திருமாலின் சக்ராயுதமே பரதனா கப் பிறந்தது என்பர். ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின் பாதுகைகளைப் பெற்றான் பரதன். அவர் திரும்பி வந்ததும் அவற்றை ராமனின் கால்களில் அணிவித்தவ னும் பரதனே. ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன் ஆகியோர் மகன்கள்.


சத்ருக்ணன்: திருமாலின் சங்குதான் இவன் என்பர். ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம சரிதத்தைப் பாட,
அதை முதலில் கேட்டவன் இவனே. லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள் சுருதகீர்த்தியை மணந்தவன்.

லவன், குசன்: இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள். குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.

பாதுகை: வைகுண்டத்தில் எம்பெருமாளின் பாதுகையை சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன. ராமாவதாரத்தின்போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும் அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார் பகவான் என்கின்றன புராணங்கள்