அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிக இன்பம் கிட்டலாம். ஆனால், இவற்றால் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு இல்லாமல், வெறும் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. அன்பில்லாத வாழ்வில் ருசியே இல்லை. அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச்செலவானாலும் தெரிவதில்லை. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. ஆனால், அன்புக்குரிய ஒருவரை விட்டுப் பிரியும்போது துக்கம் உண்டாகிறது. அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். என்றும் மாறாத வஸ்துவாக இருப்பவர் பரமாத்மா மட்டுமே. அவர் மீது பூரணமான அன்பைச் செலுத்த வேண்டும். நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும் அவரை விட்டு நாம் பிரிவதில்லை. இதுவே சாஸ்வதமான அன்பாகும். ஈஸ்வரனிடம் இந்த அன்பை அப்பியாசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் (உலக உயிர்கள்) விஸ்தரிக்கவேண்டும். இதுவே ஜென்மம் எடுத்ததன் பயன்.
Sunday, June 17, 2012
அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை.

சண்டிகேஸ்வரர்
சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன்
கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன்
கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடுவிரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது
போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம்
கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ
கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. இவர் நாயன்மார்களில் ஒருவர். 12வயது
சிறுவனாக இருந்தபோதே சிவனருள் பெற்றவர். பன்னிரு திருமுறைகளில், கண்ணப்பருக்கு
அடுத்தபடியாக போற்றப்படுவர் இவர் தான்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது சரியா?
குடியிருக்கும் வரை அது உங்கள் வீடு தான். வாடகை வீட்டில் குடியிருக்கிறோம் என்று மற்ற விஷயங்களை ஒதுக்கி விடுவதில்லையே. ஹோமம் நடத்துவது சிறப்பானதே.
** எண்களில் எட்டு ஒதுக்கப்பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?
.
வெள்ளையர்களின் வரவால் விளைந்த விபரீதங்களில் இதுவும் ஒன்று. நம்மைப் பொறுத்தவரை எட்டு மிக உயர்ந்த எண். இதனை "அஷ்ட' என்று சொல்வார்கள். அஷ்ட லட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட மூர்த்தி என்று எவ்வளவோ எட்டைப் பற்றிச் சொல்லலாம்.
* தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?
மனிதசக்திக்கும், தெய்வசக்திக்கும் வேறுபாடு உண்டு. ஒரே நேரத்தில் தெய்வத்தால் பல செயல்களைச் செய்ய முடியும். கோடிக்கணக்கானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். எந்த தீய சக்தியையும் அழிக்கும் ஆற்றலை உணர்த்தும் வகையில் கைகளில் ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இதை நாம் உணர்வதற்காக பல கைகளும், தலைகளும் தெய்வ வடிவங்களில்
சித்தரிக்கப்படுகின்றன.
* நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?
ஏ. லீலாவதி, மதுரை.
நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.
* தகுதிக்கு மீறிய பரிகாரங்களை ஜோதிடர்கள் சொல்லும்போது எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எளிய பரிகாரத்தை இறைவன் ஏற்கமாட்டாரா?
எஸ்.கே. கோதண்டராமன், மதுரை.
நம்மால் முடிந்ததைச் செய்தால் போதும். இறைவன் ஏற்றுக் கொள்வார்.
* ஒருவர் வேண்டிய காணிக்கையை மற்றொருவர் மூலம் செலுத்துவது ஏற்புடையது தானா?
ந.ராமசாமி, திருநின்றவூர்
வேண்டிக்கொண்ட காணிக்கையை காலம் தாழ்த்தாமல் எப்படியாவது இறைவனுக்கு செலுத்திவிட வேண்டும் என்ற அடிப்படையில் இது சரியானது தான்.
* தர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான் கடவுள் பூஜை செய்ய வேண்டுமா?
வி.ராமகிருஷ்ணன், தேனி.
கிடையாது. தர்ப்பணம் முடிந்தபின் கைகால்களைக் கழுவி விட்டு திருநீறு அல்லது திருமண் திலகமிட்டு பூஜை செய்யலாம். குளிக்கக்கூடாது.

தெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?
15.6.12

* ஒரு வயது வரை குழந்தைக்கு ஜாதகம் கணிக்கக்கூடாது என்பது ஏன்?
* ஒரு வயது வரை குழந்தைக்கு ஜாதகம் கணிக்கக்கூடாது என்பது ஏன்?
அதற்குள் ஜாதகம் கணித்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒரு வயது வரை குழந்தையின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை கூட செய்யக்கூடாது. குங்குமம் இடுதல், பூ வைத்தல் போன்றவை கூடாது. தாய்ப் பாலைத் தவிர வேறு உணவு தரக்கூடாது. இவற்றையெல்லாம் ஏன் ஏற்படுத்தினார்கள் என்றால் குழந்தைக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காகத்தான். ஓராண்டு முடிந்து ஆயுஷ்யஹோமம் செய்யப்படும் வரை குழந்தை தெய்வ சம்பந்தமுடையதாக இருப்பதால் அர்ச்சனை செய்வது, ஜாதகம் பார்ப்பது போன்றவை தேவையில்லை.
** உலகிலேயே பாரதம் சிறந்த ஆன்மிக பூமியாகத் திகழ்வதற்கு சிறப்பான காரணம் உண்டா?
ஆன்மிகத்தின் மூலம் மக்களை நெறிப்படுத்தும் வழியை முதலில் கூறியது வேதங்கள் தான். மதம் என்ற பெயரில் ஆன்மிகம் பிரிவதற்கு முன்பே அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சநாதன தர்மம் என்ற பெயரில் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்மிகம் உலக மக்களிடையே பரவியிருந்தது. தேவர்களின் நிலைப்பாடுகளையும், யாகங்களின் மூலம் அவர்களை திருப்தி செய்து, மழை, பயிர் வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றைப் பெறலாம் எனவும் கூறும் வேதங்கள், தெய்வ வழிபாட்டுக்குரிய விஷயங்களாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ராமேஸ்வரத்துக்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை (இமயம் முதல் குமரி வரை என்றும் சொல்லலாம்) புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற இடமாகக் கூறுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படுகின்ற புண்ணியநதிகளாகிய கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி நதிகள் இங்கு தான் உள்ளன. சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் திருவருட் செயல்கள் இங்குதான் நிகழ்ந்தன. யாராலு<ம் தோற்றுவிக்கப்படாதது என்ற சிறப்புடைய சநாதன தர்மம் பல அருளாளர்களாலும், குருமார்களாலும் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு இந்து மதமாக வளர்ந்துள்ளது. எந்த நாட்டவராயினும் பிறரையும் அரவணைத்துக் கொள்வது நம் பாரததேசம் தான். ஆன்மிகம் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு ஆலமரம் என்றால் அதன் ஆணிவேர், நமது புண்ணிய பாரததேசம்தான்.
* திருஷ்டி போவதற்கு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைப்பது முறையானதா?
இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் இதில் சறுக்கி விழுந்து கஷ்டப்படுகிறார்கள். எனவே விழுந்தவர்களுக்கு இருந்த திருஷ்டி தோஷம் நீங்கி விடுகிறது. விழுந்தவர்கள் கடும் சாபமும் பூசணிக்காயை நடுரோட்டில் முறையில்லாமல் உடைத்தவரையே சேருவதால், திருஷ்டி தோஷம் கழிவதற்கு பதில் பல தோஷங்கள் சேர்ந்து விடுகின்றன.
* கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?
"விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? அல்லது சுவாமி பெயருக்கு செய்யலாமா?
** கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா? அல்லது சுவாமி பெயருக்கு செய்யலாமா?
நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும். குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் அதன் உடம்புக்கு ஆகாது என்று வாங்கித்தர மறுக்கிறோம். இதனால் குழந்தைக்கு நல்லதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இறைவனிடம் நாம் கேட்பதும்! நமக்கு எது ஏற்புடையதோ அதை நாம் கேட்காமலேயே ஆண்டவன் கொடுப்பார். இதைப் புரிந்து கொண்டால் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் நம் பெயருக்குச் செய்து கொள்ளலாம்.
* கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் செய்யலாமா?
கோளறு பதிகத்தை எல்லாரும் தாராளமாகப் பாராயணம் செய்யலாம். சொல்லில் தவறு ஏற்படாமல் இருக்க யாராவது சொல்ல அதைக்கேட்டு, தினமும் காலையும், மாலையும் சுவாமி முன்பு பாராயணம் செய்யுங்கள். கிரக தோஷம் நீங்குவதுடன் பயம் நீங்கி மனத்தெளிவும் உண்டாகும்.
* அலுவலகத்தில் பணிசெய்யும் நேரத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபிக்கலாமா? அல்லது சுவாமி முன் அமர்ந்து தான் சொல்ல வேண்டுமா?
"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்று சுந்தரரும், "இடரினும் தளரினும்' என்னும் சம்பந்தர் தேவாரத்திலும் எப்போதும் சுவாமி நாமத்தை ஜபம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது. பணியின் போது தாராளமாக ஜபம் செய்யலாம்.
* சிலகோயில்களில் மட்டும் ஆண்களை சட்டையோடு அனுமதிப்பதில்லையே ஏன்?
அந்தச் சில கோயில்களில் தான், நம் கலாச்சாரம் ஓரளவாவது காப்பாற்றப்பட்டு வருகிறது. கோயிலும் தெய்வங்களும் பாரம்பரியமானவை. இவ்விஷயத்தை மதித்துத்தான், நாம் கோயில்களுக்குச் செல்கிறோம். தெய்வத்தின் மீதுள்ள மதிப்பை வெளிப்படுத்த நாமும் பாரம்பரிய உடையில் செல்வது அவசியம். திருமணத்திற்கு இரவல் வாங்கியாவது பட்டுப்புடவையும், நகைகளும் அணிந்து செல்வதில்லையா? அதுபோல கோயிலுக்குச் செல்லும்போது பக்தி அவசியம். பக்திக்கு பாரம்பரியத்தைப் போற்றும் பண்பும் அவசியம். எனவே, கலாச்சாரத்தை நாமாகவே முன்வந்து, எல்லா கோயில்களிலும் பின்பற்றுவோமே!
வீட்டில் விக்ரஹபூஜை செய்வதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் யாவை?
எண்ணெய், பால், பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். வஸ்திரம், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும். தனியாக சாதம் வடித்து அதில் சிறிது நெய், பருப்பு சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும். பிறகு கற்பூரம் காட்ட வேண்டும். அந்தந்த தெய்வத்திற்குரிய தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இம்முறையில் பூஜை செய்வது சிறப்பு. பஞ்சலோக விக்ரஹமாக இருந்தால் எண்ணெய் சாத்தவேண்டாம்.
குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்
** குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே
அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?
அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.
* தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா?
சென்றபிறவியில் செய்த பாவபுண்ணியபலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத் தான் அவன் திருந்தும்வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார். இந்த கருணையைப் புரிந்து கொண்டவர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து அலட்சியப்படுத்துபவர்களும் தீயவழியில் சென்று
பாவத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்பதுன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண்டேயிருப்பார். ஒரே பிறவியில் மனிதனைத் திருத்துவதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தராது.
* பெற்றோர் இருக்கும்போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?
தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர்வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.
* ஆண்வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா?
நேரடியாகக் கொடுக்க முடியாது. உங்கள் தந்தைவழி அதாவதுசித்தப்பா,பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.
* கோயிலில்உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா?
தேங்காய் சிதறுவது போன்று நம் தடைகள் மற்றும் கஷ்டங்கள் சிதறுவதாக அர்த்தம். எனவே, அது பிரசாதம் கிடையாது. சில விஷயங்களை இல்லாதவர்களுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.
* வீட்டிலேயே எள்தீபமிட்டு சனீஸ்வரரை வழிபடலாமா?
எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. கோயிலில் தான் ஏற்ற வேண்டும்.

சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?
* சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?
சூரியோதயத்திற்கு முன் விடியற்காலை 4.30-6மணி வரை பிரம்ம முகூர்த்தம். இரவில் தூங்கி மீண்டும் எழுவதே ஒரு மறுபிறப்பு தான். பிறப்பு என்பது படைத்தல் அதாவது சிருஷ்டி சம்பந்தப்பட்டது. சிருஷ்டியைச் செய்யும் பிரம்மனின் பெயரால், ஒருநாளின் துவக்க நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடுவர். இவ்வேளைக்கு தோஷம் என்பதே கிடையாது. நேரம் பார்த்து செய்ய இயலாத ஒருசில அவசியமான சுபநிகழ்வுகளை பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம்.
* எனக்கு அறுபதாகும் போது மணிவிழா செய்ய இயலவில்லை. மனைவிக்கு 60 வயது ஆகும்போது சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா?
உங்களுக்கு 60வயது பூர்த்தியான பொழுது செய்திருந்தால் அது சஷ்டியப்த பூர்த்தி. இதுவே உங்களுக்கும், மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நலன் கிடைக்கச் செய்யப்படுவதாகும். மனைவிக்கு 60வயதாகும்போது குடும்பத்தில் எல்லோருக்குமாக ஆயுள்ஹோமம் செய்யுங்கள். இது பொதுவான விஷயம் தான் என்றாலும், உங்களின் மணிவிழாவாக நினைத்து செய்து கொள்ளுங்கள்.
* குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்குப் பரிகாரமாக யாரை வழிபடவேண்டும்?
பாலாரிஷ்டம் நீங்க சாந்தி ஹோமம் செய்வது நன்மை தரும். வேதவிற்பன்னர்களைக் கேட்டால் வழிகூறுவார்கள். பொதுவாக முருகன், சந்தானகோபாலன், மாரியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும்.
** கோயில் கிணற்றில், குளத்தில் பக்தர்கள் காசைப் போடுவது ஏன்?
ஒருவர் போட்டுத் துவங்கி வைக்கிறார். ஏன் எதற்கு என்று கூட சிந்திக்காமல் எல்லோரும் அதைச் செய்கின்றனர். இதைச் செய்யாதவர்களை செய்தவர்கள் தூண்டுவது தான் வேடிக்கை. தேவையில்லாத ஒன்றை பலநாட்கள் செய்யப்பழகிவிட்டால் அது வழக்கமாகி விடுகிறது. கேள்வி என்று வரும்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க வைத்து
விடுகிறார்கள்.
ஸ்ரீசக்ரம் என்பது என்ன? அதை பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன?
சக்தியந்திர வழிபாடுகளில் மிக உயர்ந்தது ஸ்ரீசக்ரம். யந்திர ராஜா என்ற இதனைக் கூறுவர். ஒரே அளவிலான 43 முக்கோணங்களைக் கொண்டது இந்த யந்திரம். சிவாலயங்களில் உள்ள மனோன்மணி எனப்படும் அம்பாள் சந்நிதிகளில் இச்சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ய ஆகமநூல்களில் கூறப்படவில்லை. துர்க்கை, ராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதும், யந்திரத்தைத் தனியாக வழிபாடு செய்வதும் வழக்கில் இருந்தது. சக்திவாய்ந்த இதனை வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். உபதேசம் பெற்று உரிய நியமங்களை அறிந்து ஸ்ரீசக்ரத்தை வழிபடவேண்டும்.
ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?
** ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை
ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?
வயலில் போடும் விதை நெல்லை ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன என்பது போன்றது தான் உங்கள் கேள்வி. ஹோமத்தில் போடும் ஒரு புடவையை எத்தனை ஏழைகளுக்குக் கொடுப்பீர்கள். வயலில் இட்ட நெல் பன்மடங்காகப் பெருகி எல்லோருக்கும் பயன்தருவது போல ஹோமத்தில் இடும் திரவியங்கள் எல்லாம் நம்மையே திரும்ப வந்தடைகின்றன. ஹோமத்தை ஏற்கும் அன்னை, மழை பொழியச் செய்தும், பருத்தி, பட்டு என எல்லாவற்றையும் விளையச் செய்தும் அருள்புரிவாள்.
* ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கடவுள் வழிபாட்டில் இல்லாமல் இருப்பது ஏன்?
ஒரு சில தெய்வங்கள் இரு சக்திகளோடு இருப்பது தத்துவங்களின் அடிப்படையில் தான். இதனை இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையாக எடுத்துக் கொள்வது தவறு. மனிதவாழ்வில் கூறப்படும் மனைவி வேறு. தெய்வநிலையில் சக்தி என்பது வேறு. காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. நாம் வாழ்வதற்கு பூமியும், செல்வமும் தேவைப்படுகின்றன. இதனை இரு சக்திகளாக அதாவது தனது திறன்களாக விஷ்ணு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். ஒன்று ஸ்ரீதேவியாகிய செல்வம். மற்றொன்று பூதேவியாகிய பூமி. ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். நமது விருப்பம் சரியா தவறா என்று அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து பிறகு அதை அடைய முயல்கிறோம். விருப்பம், அறிவு, செயல் என மூன்றும் சேர்ந்தால் தான் ஒருவிஷயம் நிறைவுபெறும்.
இம்மூன்றும் முருகப்பெருமான் வடிவம். விருப்பம் என்னும் இச்சாசக்தி வள்ளி, அறிவு என்னும் ஞானசக்தி முருகன், செயல் என்னும் கிரியாசக்தி தெய்வானை. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெய்வங்களுக்குரிய சக்தியை மனைவியாகச் சித்தரித்துள்ளனர். சக்தியைப் பெண்ணாக்கி வழிபடுவது நம் மரபு.
* பவுர்ணமியன்று முடிவெட்டக்கூடாது என்பது உண்மை தானா?
நாம் செய்யும் காரியம் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலவிதானம் என்னும் நூலில், குறிப்பிட்ட சில திதிகள், நட்சத்திரங்களில் சவரம் செய்து கொண்டால், குறிப்பிட்ட உறவினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.
* குரு உபதேசம் இல்லாமல் மந்திரம் ஜெபிக்கக்கூடாதா?
மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அதிகமாக ஜெபம் செய்தவர்களிடத்தில் மகிமை பெருகியிருக்கும். பிறருக்கு உபதேசிக்கும்ஆற்றல் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இவர்களை அடையாளம் காண்பது கடினமான விஷயம். அவர்களை குருநாதராக ஏற்று உபதேசம் பெறும் மந்திரமே தெய்வத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். ரிசர்வ் வங்கி மூலம் அச்சடித்த பணமே செலாவணிக்குரிய உண்மைப் பணமாகும். அதையே நாம் அச்சடித்தால் போலியாகிவிடும். பணத்திற்கு அரசு அங்கீகாரம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஜபத்திற்கு குருஉபதேசம் முக்கியமானது.
* கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடந்தேற எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
படிப்பு வேலை என்று பல காரணங்களைச் சொல்லி பெண்கள் திருமணத்தைத் தட்டிக் கழித்து விடுகின்றனர். வெள்ளிக்கிழமையில் காலையும், மாலையும் துர்க்கையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

பற்று என்பது ? ஆசை என்பது `?வாரியார்
* நிலவு இரவை ஒளியுள்ள தாக்குகிறது. கதிரவன் பகலை வெளிச்சமாக்குகிறது. தர்மத்தால் மூவுலகமும் பிரகாசம் பெறுகிறது. அதுபோல நல்ல பிள்ளைகள் குடும்பத்தை விளங்கச் செய்கிறார்கள்.
* தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர்கள், நண்பர்கள் என்று நம் மீது எத்தனையோ பேர் அன்பைப் பொழிகிறார்கள். இருந்தாலும் தாய் காட்டும் அன்பே தலைசிறந்ததாகும்.
* நம்மிடம் பற்று, ஆசை என்று இருவித குணங்கள் இருக்கின்றன. பற்று என்பது நம்முடைய பொருளின் மீது காட்டுவதாகும். ஆசை என்பது பிறருடைய பொருள் மீது வைப்பதாகும்.
* ஆபரணம் பலவாக இருந்தாலும் அதில் இருக்கும் தங்கம் ஒன்றாக இருப்பதைப் போல, உலகில் உடல் பலவானாலும் அதில் இருக்கும் உயிர் அனைத்தும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.
* தன்னுடைய வயது, குடும்பப் பிணக்கு, மந்திரம், மருந்து, மனைவியின் அன்பு, தானம், அவமானம் போன்ற விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைப்பது நல்லது.
* மகிழ்ச்சி, வீரம், தைரியம், கருணை, புத்திசாலித்தனம் முதலிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனதில் தெய்வ அருளும் குடிகொண்டிருக்கும்.
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் பிள்ளை இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* பெற்ற தாயை உள்ளன்புடன் ஒருதரம் வணங்குவதால் ஆறுதரம் பூமியை வலம் வந்த புண்ணியமும், பத்தாயிரம் முறை காசியில் நீராடிய பலனும், பலநூறு முறை சேதுக்கரையில் நீராடிய பலனும் கிடைக்கும். இத்தகைய அன்னையின் தாமரைத் திருவடிகளை தினமும் வணங்க வேண்டும். அவளுக்கு துன்பம் செய்பவர்களை மனிதவர்க்கத்தில் சேர்க்க முடியாது.
* தர்மசிந்தனை, வெட்கம், தாட்சண்யம் போன்ற நற்குணங்கள் இல்லாத மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொள்வது கூடாது.
* புதிதாக கல்வி பயில்பவர்க்கு இரு குணங்கள் இருக்க வேண்டும் ஒன்று குருபக்தி, மற்றொன்று மன அடக்கம். இந்த இரு குணங்களைக் கொண்டவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.
* உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாருக்கு உதவி செய்கிறோம் என்பதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். பாம்புக்கு பால் வார்ப்பது போல தீயவர்களுக்கு உதவி செய்தால்தீமையே உண்டாகும்.
* பொறுமை கடலைவிடப் பெரியது. உலகம் அழிந்தாலும் பொறுமை மிக்கவரின் புகழ் என்றும் அழிவதில்லை.
* ஒழுக்கத்துடன் வாழ்பவனே உண்மையான மனிதன். இல்லாவிட்டால் மனித உடம்பெடுத்த விலங்கு என்று தான் சொல்ல வேண்டும்.
* பண்பட்ட மண்ணில் விழுந்த சிறுவிதை ஒன்றுக்கு ஆயிரமாக விளைகிறது. அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி ஆயிரமாயிரம் பயனைத் தரும்.
* பிறரைக் கெடுத்து வாழ நினைப்பது ஆசை. தான் வாழ நினைப்பது பற்று. தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ நினைப்பது அன்பு. எல்லா உயிர்களும் வாழ நினைப்பது அருள்.
* உண்ணாமல் உறங்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், கடவுளை ஒருபோதும் எண்ணாமல் இருக்கக் கூடாது.
- சொல்கிறார் வாரியார்
Monday, June 4, 2012
சாமுத்திரிகா லட்சணம்
உலகை ஆளும் ஆண்
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.
நாக்கில் மச்சம்
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
அரசாளும் ஆண்
நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.
மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.
பாலுணர்வு அதிகம் உண்டு
கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.
அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.
புகழ் கிடைக்கும்
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.
கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.
ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
செல்வம் பெருகும்
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.
Friday, June 1, 2012
லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி
·
உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன?
·
ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான். அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.
·
தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூஜிக்கப்பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை...! என்று ஆணையிட்டான். உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது. கொஞ்சநேரம் கழிந்தது. அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன். வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா? சீற்றமாக கேட்டார்.
·
மன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை. வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது; வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது.. நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு. இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும். லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்.
·
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?
|
பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?
|
|
மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.
மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
|
Subscribe to:
Posts (Atom)