Saturday, May 28, 2016

நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?

கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்
கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?
பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள் சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.
கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?
பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.
கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?
பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.
கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?
சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.
கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?
பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?
பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.
கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?
புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;
கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?
பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.
கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?
பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.

நாகலிங்க மரம் ,புஷ்பம் மகிமை

நாகலிங்க மரம் ,புஷ்பம் மகிமை
1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்
2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை
4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .
6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது
7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.
இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்
,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
தரிசிப்போம் .

விதி பற்றி பகவத் கீதையில் கூறியிருப்பது



சோம்பேறியாக இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தினாலும், விதி நன்றாக இருந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

விதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விதியை மாற்ற முடியாது என்றும் சொல்கிறார்கள். இப்படி மாற்ற முடியாத விதியின்படிதான் எதுவும் நிகழும் என்றால், மனித முயற்சியே தேவை இல்லையே? தேவை இல்லை என்பது மட்டுமல்ல – முயற்சியினால் எந்தப் பயனும் கிட்டாது – என்றுதானே ஆகிறது? அதாவது, சோம்பேறியாக இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தினாலும், விதி நன்றாக இருந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும் அல்லவா? ஆக, இந்த ‘விதி’ என்பது சோம்பேறித்தனத்தைத்தான் ஊக்குவிக்கும்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எல்லா மனிதர்களும் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். தானே கூட, எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். அப்படியிருக்க, ‘நீ ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இரு; விதி நன்றாக இருந்தால், உனக்கு நல்லதெல்லாம் நடக்கும்’ என்று சாத்திரங்கள் சொல்லுமா?

விதி, நல்ல நேரம் எல்லாமே, முயற்சி உள்ளவர்களுக்குத்தான் உதவும். நல்ல முயற்சி இருந்தும், ஒருவன் தோற்பது விதியால்தான். மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்க, பேரழிவு ஏற்படுகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்தான் மிஞ்சியிருக்கிறார்கள். கிருஷ்ணர், அர்ஜுனனை அழைத்து, ‘நீ இவர்களை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து சென்று விடு’ என்று கூறுகிறார். அர்ஜுனனும் அதை ஏற்று, அவர்களை எல்லாம் அழைத்துச் செல்கிறான்.

போகிற வழியில், ஒரு கொள்ளைக் கூட்டம் இவர்களை வழிமறித்துத் தாக்குகிறது. முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் கதறுகிறார்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன் அல்லவா? அவன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடிக்க முற்படுகிறான். அவர்களோ கடுமையாகத் தாக்குகிறார்கள். கடைசியில் அர்ஜுனன் தனது சிறந்த ஆயுதமான காண்டீவத்தையே பயன்படுத்துகிறான்.


அதுவும் பலனளிக்காமல், அந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் பெரும் சேதம் விளைவித்துச் செல்கிறார்கள். அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீதி இருந்தவர்களோடு அவன் போய்க் கொண்டிருந்தபோது வியாஸரைச் சந்திக்கிறான். அவரிடம் நடந்ததைச் சொல்லி – ‘ஏன் இவ்வாறு நடந்தது? பாரதப் போரில் துரோணர், பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அச்வத்தாமன்… போன்ற பெரும் வீரர்களை எதிர்த்து வென்றேன்.

ஆனால், இப்போது சாதாரண தீவட்டிக் கொள்ளைக்காரர்களை ஒடுக்க என்னால் முடியாமல் போய்விட்டதே! என் காண்டீவம் கூட பயன் தரவில்லையே? ஏன்?’ என்று கேட்கிறான்.

வியாஸர் சொல்கிறார் : ‘உன்னுடைய வீரத்திற்குக் கிட்டிய நேரம் முடிந்து விட்டது. அதுதான் காலத்தின் வன்மை. காலம் ஒத்துழைக்கவில்லை என்றால், மனித முயற்சி பயன் அளிக்காது’.

அர்ஜுனனுக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்! விதியும், முயற்சியும் சேர்ந்து நன்றாக அமைந்தால்தான், காரியம் கைகூடும். அதற்காக முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்தால், விதியின் கருணை கூட வீண் ஆகிப் போகும்.

அதாவது, மனித முயற்சி நிச்சயமாக வேண்டும்; அது அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. விதியும் நமக்கு நன்றாக இருக்க வேண்டும். ஆக, சோம்பேறித்தனத்தை வளர்ப்பது அல்ல – விதி என்ற தத்துவம். முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போகும்போது – அதற்காகச் சோர்ந்து போய் விடாமல், நாம் தெளிவு பெறுவதற்கு, விதியைப் பற்றிய விளக்கம் உதவும்.

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்



மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?

எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.


நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.

நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.

சுவாமி படங்களை எந்த பக்கம் மாட்ட வேண்டும்



சுவாமி படங்களை வீடு, அலுவலகங்களில் எந்த பக்கம் மாட்ட வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

வீடு, அலுவலகச்சுவரில் சுவாமி படங்களை மாட்டி வைத்திருப்பீர்கள். இந்தப் படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும். இந்த திசைகள் சுத்தமானவை.

மற்ற இரண்டும் அசுத்தமானவை. ஆனாலும், ஒரு விதிவிலக்கு இருக்கிறது.


தட்சிணாமூர்த்தி மற்றும் உக்ர தெய்வங்களான காளி, துர்க்கை, நரசிம்மர், பைரவர், மகான்கள் படங்களை தெற்கு திசை நோக்கி மாட்டலாம்.

பெருமாள், லட்சுமி, சிவன், விநாயகர், முருகன்,மாரியம்மன் உள்ளிட்ட பிற படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே மாட்ட வேண்டும்.

Tuesday, May 24, 2016

தைரியம் வேண்டும்!!!

தைரியம் வேண்டும்!!!
மடாலயத்தில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் இருக்கும் சீடர்களில் ஒருவன் மிகுந்த பயந்த சுபாவம் உடையவன். அவன் இருட்டைப் பார்த்தாலே பயப்படுவான். அந்த மடத்தில் இருக்கும் துறவி எப்போதும் இரவில் படுக்கும் முன்பு தன் சீடர்களுடன் பேசி விட்டு, பின்னர் தான் தூங்கச் செல்வார். அதேப்போல் ஒரு நாள் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் துறவியிடம் கதை சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் கதைச் சொல்ல ஆரம்பித்தார். அதிலும் அவர் சொல்லும் கதை தைரியமற்று இருக்கும் அந்த சீடனுக்கு தைரியத்தை வரவழைக்குமாறு இருந்தது. அந்த கதை என்னவென்றால், "ஒரு ஊரில் மன்னன் ஒருவன் எப்போதும் சூரிய உதயத்தை பார்த்து எழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேப்போல் ஒரு நாள் மன்னர் காலையில் சூரிய உதயத்தைக் காண கண் விழித்தார். ஆனால் அவர் கண்ணை திறக்கும் நேரத்தில், பிச்சைக்காரன் ஒருவன் அவர் கண்ணில் தென்பட்டான். அதனால் வெறுப்புடன் திரும்பிய போது, மன்னர் சுவற்றில் மோதிக் கொண்டு, அதனால் அவர் தலையில் இரத்தம் வழிந்தது. ஆகவே கோபம் கொண்ட அந்த மன்னர், பிச்சைக்காரனை பிடித்து வருமாறு காவலர்களிடம் சொன்னார். அவர்களும் பிச்சைக்காரனை பிடித்து வந்தனர். மன்னரோ, அவனை தூக்கிலிடுமாறு தண்டனை கொடுத்தார். ஆனால் அந்த பிச்சைக்காரன் சிரித்துக் கொண்டு நின்றான். அதைப் பார்த்த மன்னர் அவனிடம் "அட பைத்தியமே! ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரன் "என்னைப் பார்த்ததால், உங்களுக்கு தலையில் மட்டும் தான் இரத்தம் வந்தது. ஆனால் உங்களை நான் பார்த்ததால், எனக்கு தலையே போகப் போகிறது என்பதை நினைத்து சிரித்தேன்" என்று சொன்னான். உடனே அந்த மன்னர் தன் தவறை உணர்ந்து, தண்டனையை ரத்து செய்தார்." என்று சொல்லி, தைரியம் இல்லையென்றால் தம் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று சொல்லிச் சென்றார். பின் அந்த சீடன், அன்று முதல் எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் இருந்தான்

Monday, May 23, 2016

எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

>> எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ...<<
பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார். கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார்.
இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா என்றார் கண்ணன்.

மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார்

மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று
கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும்.
"பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று
ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு
கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார்.
யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.
மஹாபாரதக் கதையின்
முடிவில் வருவது பாரதப்
போர்.
18 நாள் யுத்தம்.
வெற்றி
பாண்டவர்களுக்கு என்பது
தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள்,
கெளரவர்கள் பக்கத்தில் —
பீஷ்மர், துரோணர், கர்ணன்,
துரியோதனன், ஜயத்ரதன்
என்று மிகப் பெரிய பட்டியல்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள்
வென்றார்கள்..?
ஒவ்வொருவருடைய
வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ
கிருஷ்ணனின் "வேலை"
இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால்
பாண்டவர்கள் வெற்றி
பெற்றிருக்கவே முடியாது.
இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய
வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன்
தீட்டிய திட்டம், Master Plan என்ற
பாராட்டைப் பெறும்.?
1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...
அநேகப் பேர் கர்ணனின்
வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன்
தீட்டிய யுக்தி தான் சரி என்று
நினைப்பார்கள்.
இன்னும் சில
பேர் ஜயத்ரதனைக் கொல்ல
சூரியனை மறைத்தது தான்
உயர்ந்தது என்று
நினைக்கலாம்.
இதே
மாதிரிதான், பீஷ்மர்,
துரோணர் - இவர்களுக்கு
எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை
விதுரருக்காகத் தீட்டிய
திட்டம்தான்.
இது என்ன புதுக் கதை?
விதுரர் எங்கே சண்டை
போட்டார்.?
அவரை வீழ்த்தக் ஸ்ரீ
கிருஷ்ணன் ஏன்
திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும்
முன் ஒரு சிறு பயணம் .
யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி
(Step Brother) என்றும்,
பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும்
சித்தப்பா என்றும் அவருடைய
தாயார் ஒரு பணிப்பெண்
என்றும் அநேகமாக
எல்லோருக்கும் தெரியும்.
மகாநீதிமான்,
தருமத்திலிருந்து
சிறிதளவும் நழுவாதவர்
அவர், என்பது மஹாபாரதத்தில்
நடந்த அநேக சம்பவங்களிலிருந்து
தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து
போராடும் பெரிய வீரர்களை
வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட
திட்டங்கள் அவ்வளவு
கடினமானது இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு
பலஹீனம் .
பீஷ்மருக்குப்
பெண்களுடன் போராட
முடியாத மனநிலை.
துரோணருக்குப் புத்திர
பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய
தயாள குணம்.
மேலும் இவர்கள்
எல்லாரும் யுத்தத்தில் மரணம்
அடைய வேண்டும் என்று
நியதி.
சாஸ்திரம் சொல்கிறது.
எல்லா
சமயங்களிலும்
அப்பாமார்களும்,
சகோதரர்களும்,
கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை
கெளரவித்து, அவர்களை
உயர்ந்த நிலையில்
வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள்
யாராவது இதன்படி
நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன்
துகில் உரியும்போது வாய்
திறக்காமல்
மெளனமாகத்தானே
இருந்தார்கள்அதற்கான
தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி.
விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட
வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர்.
மற்ற பெரியவர்கள் செய்த
பிழையை அவர்
செய்யவில்லை.
துணிந்து,
துரியோதனனையும் அவன்
சகோதரர்களையும் கண்டித்து
திரெளபதிக்காக
வாதாடினார்.
அதனால் தருமம்
தவறாத அவரை எப்படி
யுத்தத்தில் சாகடிக்க
முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில்
தரும புத்திரர் (எமனின் மகன்)
எதிர்பக்கம், அவர் தந்தை -
தர்மராஜர் (விதுரர்) சமநிலை
சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும்
யுத்தம் என்று வந்தால், மற்ற
பெரியவர்கள் - பீஷ்மர்,
துரோணர் - போல் விதுரரும்
செஞ்சோற்றுக் கடனுக்காக.,
துரியோதனனுக்காகத்தானே
போராட வேண்டிய
கட்டாயத்துக்குள்ளாவார்.
முன்னமேயே
சொல்லியிருக்கிறோம்.
அவர்
வில் எடுத்தால் அவரை
ஜெயிக்கவே முடியாது.
இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம்
நின்று போரிட்டால்
பாண்டவர்கள் வெற்றி
பெறுவது நிச்சயம் இல்லை.
மஹாபாரதப் போரின் முடிவே
வேறே மாதிரி ஆகிஇருக்க
வாய்ப்பு உண்டு.
அதனால்
எல்லோரையும்விட
மிக முக்கயமான நபர்,
விதுரர்தான்.
அவர்
கெளரவர்களுக்காக நிச்சயம்
போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின்
யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை
கெளரவர்களிடமிருந்து
விலக்கிவைக்கப் போட்ட திட்டம்,
ரொம்ப ரொம்ப சிம்பிள்.
Human
Psychologyஐ நன்கு பயன்படுத்தி
செயல்பட்டார்.
எல்லோருக்கும்
தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன்
தூது.
பாரதப் போரைத் தடுக்க,
ஸ்ரீ கிருஷ்ணன்
பாண்டவர்களுக்காகத் தூது
சென்றான்.
அவன் வருகிறான்
என்று தெரிந்த திருதராஷ்டிர
மகாராஜா தடபுடல் வரவேற்பு
எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும்
நாளுக்கு முந்தின
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார்
வீட்டில் தங்குவார் என்ற கேள்வி
பிறந்தது.
நான், நீ என்று
எல்லோரும் அவரை
அழைத்தார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான்
தூதுவன்.
என் வேலை வெற்றி
பெற்றால்தான் உங்கள்
உபசரணைகளை
ஏற்றுக்கொள்வேன்.
இப்போது
இந்த இரவில் நான் விதுரர்
வீட்டுக்குச் சென்று என்
பொழுதைக் கழிக்கிறேன்”
என்றார்.
விதுரருக்கு மகா
சந்தோஷம். தனக்கு பிரியமான
கிருஷ்ணன் தன்
விருந்தினராக
வருவதைப் பெரும்
பாக்கியமாகக் கருதினார்.
இரவு பொழுது நன்றாகவே
இருந்தது — விதுரருக்கும்
கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ
கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக
வாதாடினான்.
துரியோதனன் ஒரு ஊசி
முனை
நிலத்தைக்கூடப்
பாண்டவர்களுக்குக் கொடுக்க
முடியாது என்று சொல்லி
கிருஷ்ணனையும்
அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம்
நிச்சயம்" என்று சொல்லிவிட்டு
பாண்டவர் முகாமுக்குத்
திரும்பினார்.
திரும்பும்முன்,
கிருஷ்ணருடைய சாரதி
கேட்டான்.
சுவாமி, எந்த
நோக்கத்தில் நீங்கள் விதுரர்
மாளிகையில் தங்க
நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என்
மனதில் ஒரு திட்டம்
இருக்கிறது. அது நடக்குமா.?
என்பது இன்னும் கொஞ்ச
நேரத்தில் தெரியும்” என்று
சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின்
துரியோதனன் சபையில்
எல்லோரும் அவனிடம் கெஞ்சி,
கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு
யுத்தத்தை தவிர்க்க வேண்டும்
என்று வாதாடினார்கள்.
அதில்
விதுரர் குரல் ஓங்கி
ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு
விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று
ஒரு நினைப்பு.
போதாக்குறைக்கு விதுரர்
பாண்டவ தூதரான
கிருஷ்ணனை தன் வீட்டில்
உபசாரம் செய்தது.
விதுரர்
பேச்சைக் கேட்டவுடன்,
துரியோதனனுக்குக் கோபம்
பொத்துக் கொண்டுவந்தது.
என்ன பேசுகிறோம் என்ற
நினைப்பில்லாமல் நாக்கில்
நரம்பின்றி விதுரரை
அவமானப் படுத்திப்
பேசினான்.
குறிப்பாக,
அவரை ‘தாசி புத்திரன்’ என்று
திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர்
சாபம் முற்றிலும் பலித்து
விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம்.
சபையோர்கள் நடுங்க
சபதமிட்டார்.
எனக்கு இங்கே
இனிமேல் வேலையில்லை.
அழிவு காலம் நெருங்கி
கொண்டிருக்கிறது. என்னை
அவமானப் படுத்திய இந்த
துரியோதனனுக்காக நான்
என் வில்லை எடுத்துப் போராட
மாட்டேன்.
அதே சமயம் நான்
பாண்டவர்கள் பக்கமும் செல்ல
மாட்டேன்” என்று சொல்லித்
தன்னுடைய வில்லை
இரண்டாக உடைத்துவிட்டுச்
சபையிலிருந்து
வெளியேறினார்.
யுத்தம் முடியும்வரை அவர்
தீர்த்த யாத்திரையிலிருந்து
திரும்பவில்லை என்பது
வேறு கதை.
இப்பொழுது உங்களுக்கு
புரிந்து இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர்
வீட்டில் தங்காமல் இருந்தால்,
விதுரர் வில்லை உடைத்து
வெளியேறியிருப்பாரா.?
துரியோதனனுக்காகப்
போராட வேண்டிய ஒரு
கட்டாயம் அவருக்கு
வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில்
மஹாவிஷ்ணுவின் வில்.
கோதண்டம் எனப்படும் அந்த
வில்லை எவராகவும் வெல்ல
முடியாது.
அர்ஜுனன்
கையில் உள்ள வில்
பிரம்மாவுடையது. காண்டீபம்
என்பது அதன் பெயர்.
போர்
என்று வந்து விதுரர்
கோதண்டத்துடன் வந்து நின்று
விட்டால் ஆனானப்பட்ட
அர்ஜுனனால் கூட தன்
வில்லான காண்டீபம் கொண்டு
அவரை வெல்ல முடியாது.!
இதனை அறிந்திருந்த ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மா, தான்
விதுரர் மாளிகையில் தங்கி,
துரியோதனனுக்கு
சினமூட்டி அவனை அப்படிப்
பேச வைத்து.,
விதுரர்
வில்லை முறிக்க வைத்து
விட்டார்.
இதுவும்
பாண்டவர்களுடைய
வெற்றிக்கு ஒரு காரணமாக
அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ
கிருஷ்ணனுடைய மஹா
தந்திர யுக்தி.....

சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா

நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் அடிக்கடி வரும். சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா அல்லது வெறும் கற்பனையா; யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார், என்பதே அது .ஒருவருக்கு நடந்ததை அவரே சொல்லி விட்டுப் போயிருந்தால் அதை அகச்சான்று என்றும், பிற்காலத்தில் வந்தவர் அதைப் பற்றி சொல்லியிருந்தால் புறச்சான்று என்றும் சொல்வார்கள். மூவர் தேவாரத்தில் அகச்சான்றுகளாகத் தெரியவரும் செய்திகள் ஏராளம்.
-
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது பதினெட்டாவது வயதில் ஆப்த சிநேகிதரான சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவஞ்சைக்களத்தில் தங்கியிருந்தார். அங்கு கோயில் கொண்டுள்ள அஞ்சைக்களத்து அப்பரிடம் பதிகம் மூலம் உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துத் தனக்குச் சிவலோகம் தந்தருளுமாறு வேண்டவே, சுவாமியும் தேவலோகத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பி அதில் சுந்தரரை ஏறி வரும்படி அருளினார்.
-
இறைவனது அருளை வணங்கியவாறு சுந்தரர் அதில் அமர்ந்தவுடன் அந்த யானை ஆகாய வீதியில் கிளம்பியது. அந்த நிலையிலும் உலகத்தவர்களுக்கு உபதேசம் செய்கிறார் குருநாதர். தனக்குக் கிடைத்த பேரருள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பெரும் கருணை, தேவாரப் பதிகமாக வெளிப்படுகிறது. "தான் எனை முன் படைத்தான்" என்ற அப்பதிகத்தில் தனக்கு வெள்ளையானை தந்தருளிய கருணையைப் போற்றுவதோடு தன்னை இந்திரன், திருமால், பிரமன் முதலியோரும் எதிர்கொண்டு அழைப்பதைக் குறிப்பிடுகிறார்.
-
வேத மந்திரங்களும் ஆகமங்களும் அடியார்களும் முழங்கும் ஓசை எங்கும் கேட்கிறது. இவ்வாறு யானை ஏறி வரும் மகான் யார் என்று இறைவனை முனிவர்கள் கேட்க அதற்கு, எனது பரம பக்தன் நம்பியாரூரன் என்று ஸ்ரீ பரமேஸ்வரன் பதில் சொன்னதாகப் பதிகத்தில் வருகிறது.
-
பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது. இதற்கு அவர் சொல்லும் பிரமாணம் என்ன தெரியுமா? தானே இது சத்தியம் என்பதைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார். இதோ அவ்வினிய வரிகள்:
-
"மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே."
--(‪#‎சுந்தரர்_தேவாரம்_ஏழாம்_திருமுறை‬)
-
நொடித்தான் மலை என்பது கயிலாய மலையைக் குறிக்கும். சிவபெருமானுக்கு வாழையடி வாழையாக மீளா அடிமைசெய்யும் வம்சத்தில் பிறந்த அடியார்கள் சிவலோகம் பெறுதல் உண்மை என்பதை சுந்தரரின் இந்த அகச்சான்று உறுதி செய்கிறது. இதில் சந்தேகம் வேண்டாம். "சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்ற அவரது தேவார அடிகள் இக்கருத்துக்கு உறுதுணை ஆவதை மனத்தில் கொண்டு ஆடி சுவாதி நன்னாளில் குருநாதரின் பாத கமலங்களை வணங்கிச் சிவத்தொண்டு ஆற்றுவோமாக.

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
வலது கைய்யில் வாங்கிய விபூதீயை
ஒரு போதும் இடது கைய்யில் கொட்ட கூடாது வலது கைய்யில் விபூதியைய் வைத்து கொன்டு தான் நெற்றியில் இட்டு கொள்ள வேன்டும்
ஒரு போது எந்த விதமான நியூஸ் பேப்பரிலும் விபூதியைய் மடித்து கொள்ள கூடாது நியூஸ் பேப்பரில் என்ன எழுதி உள்ளதோ அதன் படி தீய என்னங்கள் வரும் ஆகையால் வெள்ளை நிறம் காகிதத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை எழுதி அதனில் விபூதியைய் வைத்து கொள்வது உத்தமம்
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

Thursday, May 19, 2016

லிங்காஷ்டகம்

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம். இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
-
"ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
.
நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
-
"தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
.
தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
-
"ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்." 
.
எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்."
-
"கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் 
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
.
மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
-
"குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்" 
.
குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
-
"தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவையர் பக்தி பிரேவச லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
.
தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
-
"அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் 
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்."
.
எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
-
"ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப ஸதாச்சித லிங்கம் 
பரமபர பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி ஸதாதிவ லிங்கம்."
.
லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள 
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே.
.
தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
.
இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.
-

Wednesday, May 18, 2016

தெரியாமல் செய்த பாவங்கள் பஞ்சாசர மந்திரத்தை தினம் ஜெபித்தால் தீரும்

தெரியாமல் செய்த பாவங்கள் பஞ்சாசர மந்திரத்தை தினம் ஜெபித்தால் தீரும்
தெரரிந்தே செய்யும் பாவங்களை ஈசனிடம் அழுது மண்ணிப்பு கேட்டுவிட்டு அதன் பிறகு பாவம் செய்தல் கூடாது
கொண்டு வந்த பாவத்தை தீர்க்க திருமுறைகளை ஒத வேண்டும்
வெற்றுச் சாத்திரிமார் சொல்லும் போலிப்பரிகாரங்களைப் பெரும் பணச்செலவில் செய்வதில் பலன் ஒன்றும் இல்லை
________________________________
சோதிடமும் ,
பிராயச்சித்தமும்.
குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
நமது கர்மாவை நாமே அனுபவித்து தீர்க்க வேண்டும். இதை சைவம் மட்டுமல்ல இந்து மதப்பிரிவுகள் அனைத்தும், பௌத்தம், சமணம் போன்ற ஏனைய மதங்களும் கூட ஏற்றுக்கொண்ட ஒன்று. ஆயினும் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டி, சேவையினூடாகவும், வழிபாடுகளினூடாகவும் சில பரிகாரங்களைச் செய்யும்போது அது நமது கர்ம பலன்களை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடும். ஆகக்குறைந்தது அதை எதிர்கொள்ளும் மனப்பாங்கையும், மனோபலத்தையுமாவது தரவல்லது. இவை மிகவும் எளிமையான பரிகார முறைகளே. இவற்றுக்கு அதிக பணச்செலவும் இல்லை. இந்த எளிய பரிகாரங்களைப் பூசகருக்கோ அல்லது இன்னொருவருக்கோ பணம் கொடுத்தும் செய்விக்கலாம் என்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றான சிவப்பிரகாசம் கூறுகின்றது.
" மற்றவற்றின் ஒருவினைக்குஓர் வினையால் வீடு
வைதிக சைவம் பகரும் வழியில் ஆற்றப்
பற்றியது கழியும் ; விலையால் ஏற்கும் பான்மையுமாம் "
- சிவப்பிரகாசம் பாடல் 31-
ஆனால் இந்தப் பரிகாரங்கள் அல்லது பிராயச்சித்தங்கள் வைதிக சைவம் பகரும் வழியில் அதாவது வேத ஆகம நூல்களின் பிரகாரம் செய்யப்படவேண்டும். சைவ ஆகமங்கள் இருபத்தெட்டிலும் பிராயச்சித்தவிதி என்று ஒரு படலம் உண்டு. இவற்றை அறியாமல் வெற்றுச் சாத்திரிமார் சொல்லும் போலிப்பரிகாரங்களைப் பெரும் பணச்செலவில் செய்தும் பலன் ஒன்றும் இல்லாமல் அலையும் மக்கள் பலர்.
இவ்வாறு கர்ம வினைகளைக் கழிப்பதற்கு முதலிலே நமது கஷ்டங்களுக்கு காரணம் நமது கர்ம வினைகளே என்ற எண்ணம் வர வேண்டும்; அது என்ன என்று அறிய தகுந்த ஒருவரை அணுக வேண்டும்; அவருக்கு சோதிடத்தோடு வேத ஆகம முறைப்படியான பரிகார வழிகளும் தெரிந்திருத்தல் வேண்டும்; அவர் சொல்லும் பரிகாரங்களை நாம் நம்பிக்கையோடு செய்யவேண்டும்.
இவ்வாறு நமது கஷ்டங்களுக்கு நமது கர்மாவே காரணம் என்று உணராமலும், சோதிடரை நாடாமலும், பரிகாரம் தெரியாமலும் இருந்தாலும் எமது கர்ம வினைகள் கழிவதற்கு வழி உண்டா என்று கேட்கலாம். உண்டு என்று முன்னர் சொன்ன சிவப்பிரகாசம் என்னும் சைவ சித்தாந்த நூல் கூறுகின்றது.
" பண்ணாது பலிக்கும் பான்மையுமாம் "
- சிவப்பிரகாசம் பாடல் 31-
அது எவ்வாறெனில் முன் சொன்ன சைவ ஆகம நூல்கள் கூறும் வழிப்படி நடந்து வந்தால். அவ் வழிகள் எவை என்று கேட்கலாம். அவ் வழிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு படிநெறிகளாம். இப்படி முறைகளை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் பரிகாரங்களுக்கு அடங்காத கர்ம வினைகள் கூடச் சோர்ந்து அடங்கி விடும்.
” முன் சொற்றரு நூல் வழியின் வரின் மிகுதி சோரும்”
- சிவப்பிரகாசம் பாடல் 31-
“ சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்”
என்ற திருவாசக வரிகள் இவ்வாறு திருமுறைகளை ஓதுவதால் எமது முந்தைய கர்ம வினைகள் ஓயும் என்று கூறுகின்றன.
” சிவசிவ என்றிடத் தீவினை மாளும்”
என்று திருமந்திரம் சொல்லுகின்றது.
எமது மதத்துக்கு புறம்பாக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட "சொற்றரு நூல் வழியின் வரின்" என்பதின் படி அவரவர் மத நூல்களின் படி ஒழுகி வந்தாலே அவர்களுக்கு கர்ம வினைகளினால் ஏற்படுகின்ற துன்பங்கள் கழியும்.
' தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் எவ்வளவு பெரிதாயிருந்தபோதிலும் , அவற்றுக்குப் பிராயச்சித்தம் தனிமையில் இருந்து சிவநாமத்தை உச்சரித்தலே ' என்று 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியார் பாடிய சுலோகம் ஒன்று கூறுகின்றது.
' ஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபானாம் மகதாம்கபி
ஏகாந்த நிஷ்கிரதி ; சம்போ: ஸகிர்தேவஹி கீர்தனாத் '
- ஹரதத்த சிவாச்சாரியார் -
ஹரதத்த சிவாச்சாரியார் இந்த சுலோகத்தை பாதி எழுதிய நிலையில் வைத்து விட்டு செல்ல இவர் வடிவில் சிவபிரானே வந்து மிகுதி பாதியையும் எழுதி பூரணப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாறு சிவனே தன் கையினால் எழுதி வைத்த கர்ம பரிகாரம் இது.

புண்யாகவாசனம்

புண்யாகவாசனம்
பு - பாபநாசனம்
ண்ய - தேகசுத்தி
ஹ - ஸ்தான (இட)சுத்தி
பாபநாசத்தையும், தேகசுத்தியையும் ஸ்தானசுத்தியையும் தருவதால் "புண்யாகவாசனம்" என்ற பெயர்பெற்றது. இதை விக்னேஸ்வர பூஜைக்குப் பின் செய்ய வேண்டும்.
புண்யாகவாசனம், சர்வபாபத்தையும் போக்குவதாலும், சர்வசித்திகளையும் உண்டாக்குவதாலும், நித்யகர்மாக்களிலும், விசேஷக்கிரியைகளிலும், இஷ்டமான கார்யம் (காம்யம்) செய்யும் போதும் இடங்களை சுத்தமாக்கும்போதும், பிம்பங்களைச் சுத்தமாக்க விரும்பும்போதும் மற்ற மங்களகரமான காரியங்களை மேற்கொள்ளும்போதும் புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.
ஏன் செய்யவேண்டுமென்றால், எல்லா காரியங்களையும் செய்யும்போதும் புண்யாகவாசன ஜலத்தைப் புரோக்ஷணம் செய்வதானது சுபத்தைத்தரும். செய்யும் கிரியை மூலம் நல்ல பலனைக் கொடுக்கச் செய்யும். இல்லையெனில் அநேக இடையூறுகள் வந்து சேரும். எனவே, அவசியம் புண்யாகவாசனம் செய்தல் வேண்டும். மேலும், எங்கெல்லாம் புண்யாகவாசனம் இன்றி செயல்கள் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் அச்செயல்கள் எந்தவித நற்பலனையும் தராது. மாறாக, அங்கு பூத, பிரேத, பிசாசங்கள் வந்து கூடும் என்று காரணாகமம் கூறுகிறது. எனவே, அவசியம் புண்யாகவாசனம் செய்வது நன்மை பயக்கும்.
விநாயகர் பூஜைக்குப் பின்னரும் மற்ற செயல்களைத் தொடங்கும் முன்னரும் புண்யாகவாசனத்தைச் செய்ய வேண்டும்.
புண்யாகவாசனம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.
1. சுத்தம் 2. மிஸ்ரம் 3. கேவலம்.
(1) சுத்தம்: சாங்கமான ஆவரணத்தோடும் அந்தந்த தியானத்தோடும் வேத மந்திரங்களோடும் வருணனை ஆவாஹித்துப் பூஜிப்பது சுத்தம் எனப்படும்.
(2) மிஸ்ரம்: ஆவரண பூஜையின்றி வேத மந்திரங்களை மட்டும் சொல்லி ஆவாஹித்து பூஜிப்பது மிஸ்ரம் எனப்படும்.
(3) கேவலம்: வருணனின் பெயர்களை மட்டும் சொல்லிப் பூஜிப்பது கேவலம் எனப்படும்.
சிவாலயங்களில் சுத்த புண்யாகவாசனத்தையும், பிதுர் காரியங்களில் மிஸ்ர புண்யாகவாசனத்தையும், அந்தியேஷ்டியில் கேவல புண்யாகவாசனத்தையும் செய்தல் வேண்டும்.
இதில நித்தியம், நைமித்தியம், காமியம் இவைகளில் சுத்த புண்யாகவாசனமே செய்தல் வேண்டும்.

Tuesday, May 17, 2016

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் !!!

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் !!!
[ ABISHEGAM (Bathing the God) ]
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்
1. கந்த தைலம் - இன்பம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி - அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி
8. பால் - ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் - முக்தி
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23. பன்னீர் - குளிர்ச்சி தரும்
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்
திருச்சிற்றம்பலம்

எட்டு வகை முத்திரைகள்

மந்திரங்களை ஜெபம் செய்து உச்சரிக்கும் போது ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும்.
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
- இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் பக்தியுடன் சொல்லி வந்தால் கேட்டவை அனைத்தும் கிடைக்கும்

27.நட்ச்சத்திரங்களிலும் பிறந்தவர்களது பொதுப் பலன்,

27.நட்ச்சத்திரங்களிலும் பிறந்தவர்களது பொதுப் பலன்,

1434892916practical-vastu5அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள்.
செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர். தைரியம் உடையவர், செய் தொழிலைத் தவறு இல்லாமல் செய்பவர், பெண்கள் விரும்பத்தக்கவர். தருமம் செய்யும் பண்புடையவர், பொய் பேச மாட்டார். ஆடை அணிகலனில் விருப்பம் உடையவர். சிறு கோபத்தை உடையவர். மிகுந்த புகழை உடையவர். கெட்டிக்காரர். சிவந்த கண்களையும், அகன்ற மார்பையும் உடையவர். தூய்மையானவர். உயர்ந்த நெற்றி உடையவர். சாத்வீக குணத்தை உடையவர்.
1. அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கோள் சொல்வோன், மனசஞ்சலம் உடையவர், பாவி, அழகற்றவர், அந்தியரிடம் அன்பு காட்டுபவனாக இருப்பார்.
2. அசுவினி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறரின் மனோ பாவங்களை அறிபவர், அழகுள்ளவர், நன்மை செய்பவர், சாத்திரம் உணர்பவர், ஞானி போன்ற பண்புகளை உடையவனாக இருப்பார்.
3. அசுவினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கணிதக் கலையில் விருப்பம் உள்ளவர். நல்ல புத்திமதி நுட்பம் உடையவர், மூலவியாதி உடையவர், நல்ல செயல்களையே நினைப்பவனாக இருப்பார்.
4. அசுவினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் உடம்பு சிறிது கூனி இருக்கும். மிகுந்த அறிவுள்ளவர், ஜோதிடம் அறிந்தவர், இந்திரன் போன்றவர், காமகுணம் உள்ளவர், சத்திரியர் போன்ற பண்புகளை உடையவர்.
நட்சத்திர கோவில்
பரணி
பரணி நட்சத்திர பிறந்தவர்கள் அனைத்து முழுமையாகப் முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள்.
நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.
பெற்றோருக்கு இனியவர், ஞானி, சிறு நித்திரை உடையவர். சிறு கோபி, தரும சிந்தனை உடையவர். செல்வம் உடையவர், புகழ், திடமான வாக்கு உடையவர், தாம்பூலத்தில் விருப்பம் உடையவர், உடலின் இடப்பாகத்தில் மரு உள்ளவர், சாமர்த்தியம் உடையவர், பெண்களில் சொற்களில் பிரியம் உடையவர், சிறிய மோவாய்க் கட்டையை உடையவர்.
1. பரணி முதல் பாதத்தில் பிறந்தவர் சிவப்பு நிறம் உள்ளவர். வீரன், பலசாலி, நீதிமான், பகைவரை வெல்லுபவர், சிவந்த உரோமம் உடையவனாகவும் இருப்பார்.
2. பரணி இரண்டாம்பாகத்தில் பிறந்தவர் ஞானி, நிபுணன், சோம்பல் உடையவர், தருவார், சாஸ்திரம் சொல்பவனாகவும் இருப்பார்.
3. பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், உருளும் கண்களை உடையவர், நல்ல உயரமானவர்.
4. பரணி நாலாம் பாதத்தில் பிறந்தவர் உடல் பருமனானவர், கோபம் உடையவர், அரசு அரசியல் பணி செய்பவர், துர்க்குணம் உள்ளவனாகவும் இருப்பார்
நட்சத்திர கோவில்
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள்.
வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். ரசவர்க்கங்களில் விருப்பம் உடையவர், அற்ப நித்திரை உடையவர், சொல் சாதுரியம் உடையவர், பொய் பேசியாவது பொருள் சம்பாதிக்கும் திறமை உடையவர், அறிவாளி, அரசர்கள் விருப்பத்திற்கு உரியவர், பரிசு பெறுபவர், பலவான், வஞ்சக மனம் உடையவர், மார்பில் மரு உடையவர், வழக்குத் தொடுக்கும் துணிந்த மனம் உடையவர்.
செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்.
1. கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர் , ஆசாரமுள்ளவர், வித்துவான், பிரபு இலாப சேகரர், சூரன், பசுப்பீரிதி உள்ளவர், புத்திமான் ரோகமுள்ளவர்.
2. கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் , ஆசாரமற்றவன், கோபி, வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், சாஸ்திரங்களை விரும்பாதவர்.
3. கிருத்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர், துஷ்டபெண்களைச் சேருபவர், புத்தியற்றவர், மிகுந்த சூரன், கோபி, தீமைகளையே பிரதானமாக செய்பவர்.
4. கிருத்திகை நான்காம் பாதத்தில் பிறந்தவர் தரித்திரன், சாஸ்திரம் கற்காதவர், மனஸ்தாபம் உடையவர், பொறுமையற்றவர், துக்கம் உடையவர், ரோகம் உடையவர்
நட்சத்திர கோவில்
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்டே செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். தண்ணீர் அதிகம் குடிப்பதில் விருப்பம் உடையவர், சொன்ன சொல் கேட்பவர். பண்டிதனும் அரசனும் ஆவார். அன்னதானம் செய்பவர், இரும்பு வியாபாரி,நெய், பால் இவற்றில் விருப்பம் உடையவர். இரண்டு கண்களும் பருத்து நெற்றி சுருங்கி இருப்பவர், வஞ்சகம் பேசாதவர், வலுத்த உள்ளங்கால் உடையவர், திடமான நடையுடையவர். கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
1. ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர் பொருள் உள்ளவர், அழகுள்ளவர், அலைச்சல்படுவோன், கருமி, அந்நியருக்குத்துன்பம் தருபவர், பொறுமையற்றவர், வர்மி, ரோசம் உடையவர், ரோகம் உடையவர்.
2. ரோகிணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கருணை உடையவர். சாந்த குணம் உடையவர். ரோகி, ஆசாரம் உள்ளவர், உண்மை பேசுவார், விரும்பிய பெண்ணை மணப்பான், வாய் சாதுர்யம் உள்ளவர், ஆசை உள்ளவர்.
3. ரோகிணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கணித வித்தையில் வல்லவர், சங்கீத ஞானம் உடையவர், மந்திரங்கள் அறிந்தவர், சுகவான், பஞ்ச காவியங்கள் அறியாதவர்.
4. ரோகிணி நான்காம் பாதத்தில் பிறந்தவர் உண்மை பேசுபவர், அந்நியரின் சொத்தை விரும்புபவர், பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.
நட்சத்திர கோவில்
மிருகசீரிடம்
மிருகசீரிடம் நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். காலையில் நீராடுவதில் விருப்பம் உடையவர். பரந்த கண்களையுடையவர். மயிரில் அழகுடையவர், கல்வியில் சிறந்தவர், திடமான தேகம் உடையவர், உள்மனதில் உள்ள கருத்தை வெளியிட விரும்பாதவர், பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவர். தாம்பூலப்பிரியர், நினைத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர், உயர்ந்த நெற்றியை உடையவர் ஞானி. விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்
1. மிருகசீரிஷம் முதல் பாதத்தில் பிறந்தவர் செல்வம் உடையவர். பகைவரை வெற்றி கொள்பவர், பருமனான சரீரம் உடையவர். கோபம் உடையவர். ஆசாரம் இல்லாதவர், இராட்சசத் தன்மை உடையவர்.
2. மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் வழக்குரைப் பவர், உபதேசம் செய்பவர், சாது மனத்திற்கு உகந்தவர், உண்மை பேசுபவர், பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.
3. மிருகசீரிஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் உயர்ந்த குணம் உடையவர். உத்தமன், சாது, சந்தோஷம் உடையவர், ஆசாரம் உடையவர், புத்திமார், சீமார்.
4. மிருகசீரிஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் புத்திமார், மெய்யே உரைப்பவர், சாது, தருமம், செய்பவன், காமம், கோபம், வஞ்சகம் உடையவர்.
நட்சத்திர கோவில்
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். பொய்யுரை சொல்வோன், கீர்த்தி உடையவன். தரித்திரன், நீண்ட வடிவமுடையவன், கணுக்காலில் வியாதியுடையவன், கொடிய சண்டை செய்பவன், தலைமயிர் அழகுடையவன். இருகண்களும் சிவந்து இருக்கப் பெற்றவன். தேக பலமுடையவன், கோபி, பந்துக்களுடையவன், உயர்ந்த மூக்குள்ளவன். மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.
1. திருவாதிரை முதல் பாதத்தில பிறந்தவர் இனிய வசனங்களைப் பேசுபவர், நல்லகுணம் உள்ளவர். மகாத்துமா, பெண்களுக்கு இனியவர்.
2. திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் , பேசுவதில் கெட்டிக்காரர், கருணை இல்லாதவர், தர்க்கம் புரிபவர், கல்வியில்லாதவர், தக்க பெண்களோடு போகம் கொள்பவர்.
3. திருவாதிரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் வாதரோகம் உள்ளவர், கோபம் உடையவர், கருணையற்றவர், கோள்சொல்பவர், பெண்களுக்கு போகத்தைத் தராதவர்.
4. திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர் விவேகம் உடையவர். சுற்றத்தாருக்கு விரோதி. ஈனகுணம் உடையவர், அழகுள்ள உடல் உள்ளவர், கெட்டவர்
நட்சத்திர கோவில்
புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். சொல் சாதுர்யர், அகங்காரம் உடையவர், பரந்த தோள்களை உடையவர். சிக்கன முடையவர். நீண்ட வழி நடப்பவர். கடுமையாகப் பேசுபவர், கள்ளன், மலர் போன்ற கையை உடையவர். அறிவாளி, பொய் பேச மாட்டார். பித்த தேகம் உடையவர். கல்வியில் ஊக்கம் கொண்டவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.
1. புனர்பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பருமனான உடல் உள்ளவர். பிலுக்கன், போகி, செவிடன், காமி, பன்றி மயிர் போலும் உரோமம் உள்ளவர்.
2. புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பித்தம் சேர்ந்த உஷ்ண தேகம் உடையவர், சோம்பேறி, ஆசாரம் இல்லாதவர், தூக்கம் உடையவர்.
3. புனர்பூசம் மூன்று பாதத்தில் பிறந்தவர்கள் குஷ்டரோகி, சாது, அலைச்சல் உள்ளவர், காவியம் அறியாதவர், பல் வியாதி உள்ளவர், நீண்ட ஆயுள் உள்ளவர்.
4. புனர்பூசம் நான்காம் பாதத்தில பிறந்தவர்கள் நல்ல செயல்கள் செய்பவர், குள்ளமாக இருப்பவர், நல்ல அழகுடையவர், பார்வை லட்சணம் அறிபவர்.
நட்சத்திர கோவில்
பூசம்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். குதிரை உடையவர். வழக்கு உரைக்கும். கள்ளன், ஏளனமாக பேசும் குணம் உடையவர். தாய் தந்தையரை இரட்சிப்பவன், கொடியன், ஒழுக்கம் உள்ளவர், தனவான், கண்களும் மூக்கும் அழகாக உள்ளவன், பசி பொறுக்கமாட்டார், வாசனைப் பொருட்களைத் தரிப்பதில் விருப்பம் உடையவர், நல்லவர், செல்வம் உடையவர். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக்கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.
1. பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர் வயிற்று நோய் உடையவர். நிஷ்டூரன், தருமவார், கோபமுடையவர், புத்திசாலி, தீர்க்க ஆயுள் உடையவர், கொடியவர்.
2. பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் பிரபுவார், எக்காரியத்தையும் தடை செய்பவன், மக்களை வருத்துபவர், நிதானம், உள்ளவர், அன்னியரிடம் நட்பு உடையவர்.
3. பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சுற்றத்தாருக்கு இனியவர், புத்திசாலி, ஞானி, சந்தோஷம் உடையவர், பசுவிடம் விருப்பம் உடையவர், சுற்றத்தால் நல்ல காரியம் முடிப்பவர்.
4. புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் சண்டைக்காரர், கோபம் உள்ளவர், பெண்களிடம் அன்பு உள்ளவர்.
நட்சத்திர கோவில்
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பகையை விரும்புவர், பெற்றோருக்கு விருப்பம் உடையவர். மனதில் துக்கம் உடையவர், காட்டில் திரிபவர், சிற்றுண்டியை விரும்புபவன் புத்திமான், வஞ்சகம் இல்லாமல் எவரையும் ஏளனம் செய்பவர், சுகம் உடையவர், தன்னைவிட வலிமையான யாரையும் கண்டு அஞ்சாதவர், விழியும் புருவமும் உயர்ந்து ஒதுங்கி இருப்பவர். கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர்.
1. ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர் மிகுந்த சொல்வன்மை உள்ளவர். பெண் போன்ற வடிவம் உடையவர். நல்ல அறிவுடையவர், மகிழ்ச்சியுடன் இருக்கும் தன்மை உடையவர், பலவிதமான செயல்களைச் செய்பவர்.
2. ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் அயலான் இடும் வேலைகளைச் செய்பவன், அழகுடையவர், ஏக்கமுடையவர், ஆசாரமுடையவர், தீய வழியில் நடப்பவர், துர்ப்புத்தி உடையவர்.
3. ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் முன்கோபி, மனைவியை வதைப்பவர், ஞானி தாமத குணமுள்ளவர், நலமற்ற சொற்களைப் பேசுபவர், மிகவும் நிபுணர்.
4. ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் பொன்னை அழிப்பவர், கொலை செய்பவன், கோபக்காரர், தீயவனுக்கு நல்லவர், இழிந்த பெண்களின் போகத்தை விரும்புபவர், வியாதி உடையவர்.
நட்சத்திர கோவில்
மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலைகயையும் சமாளிக்க கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள்.
உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். பல திசைகளில் சுற்றுவதில் விருப்பம் உடையவர். அழகர், இசைப்புலவன், நீராடுவதில் விருப்பம் உடையவர், அழகன், இசைப்புலவர், நீராடுவதில் விருப்பம் உடையவர், வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர், செல்வம் உடையவர், வலது பக்கத்தில் மரு உடையவர், நியாயஸ்தன், அற்ப நித்திரை உடையவர். ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர்.
1. மகம் முதல் பாதத்தில் பிறந்தவர் மற்றவர்களுக்கு பயம் அளிக்கும் சிவந்த கண்களை உடையவர், சிவந்த நிறம் உடையவர், சிறந்த மதியூகி, சிவந்த ரோமத்தை உடையவர்.
2. மகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல அறிவு இல்லாதவர், குற்றம் உடையவர். செலவழிப்பதில் விருப்பம் உள்ளவர். பொன் போன்ற கண்களை உடையவர், காது நோய் உடையவர்.
3. மகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலசாலி, நோய்கள் உள்ளவர். சாது, கடின சொற்களைப் பேசுபவர், பொல்லாதவர், பரிசுத்தமானவர், பேராசை உடையவர்.
4. மகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் ஒழுக்கமுடையவர், பெண்கள் பேச்சை கேட்பவர், சிரங்கும் வேறு ரோகங்களும் உள்ளவர். நல்ல மனைவி அமையப் பெற்றவன், இனிய சொற்களை பேசுபவர்.
நட்சத்திர கோவில்
பூரம்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள்.
வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். இதமான வார்த்தைகளைப் பேசுபவர், கல்விமான், சிவந்த கண்கள் உடையவர், மிகவும் உழைத்துச் செல்வத்தை தேடுபவர் , பின்னால் வருவனவற்றை முன்னாலேயே அறிந்து செயல்படுபவர். வியாபாரி, கடினமான வார்த்தைகளைப் பேசுபவர், பலவிதமான எண்ணங்களை எண்ணுபவர், வேசிகளின் பிரியர், நகை அழகர், உயர்ந்த பண்புள்ளவர். ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப்பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.
1. பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர் தீரன், இனிமையான பேச்சு உடையவர், கோபம் உடையவர், ஆசாரம் உள்ளவர், வீரம் உடையவர், செல்வம் இல்லாதவர், சிறிய வீட்டை உடையவர், வியாபாரம் செய்பவர்.
2. பூரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் உழவர், தாகம் உடையவர், மனக்கிலேசம் உடையவர், பிறர் உதவி இல்லாதவர்.
3. பூரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல குணமுடையவர், செல்வமேம்பாடு உடையவர், புகழ் உடையவர்.
4. பூரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் துக்கம் உடையவர், வடு உள்ளவர், நித்திப்பவர், பிராமணர்களையும் தெய்வங்களையும் துதிப்பவர்.
நட்சத்திர கோவில்
உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்டே செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். வஞ்சகம் இல்லாமல் பேசுபவர், கைவலி உடையவர், கல்விமான், அழகான கண்களையும் வாயையும் உடையவர், பெண்களிடம் விருப்பம் உள்ளவர், முன்கோபி, மார்பு முகம் இவற்றில் மரு உள்ளவர், பொய்யில்லாத சூரன். நீராடுவதில் விருப்பம் உடையவர், அற்பப்பசி உடையவர், பக்தியுள்ளவர், நடை அழகர், தருமம் செய்பவர், ஞானி. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.
1. உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர் இனிய வசனம் பேசுபவர், புகழ் உடையவர்,கண்ணியமானவர், தீரன், நல்லவர், சுற்றத்தார் மேல் விருப்பம் உடையவர்.
2. உத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கருமி, தரித்திரன், ஊண் விருப்பம் உடையவர், குற்றமும் சஞ்சலமும் உடையவர், யாசகம் செய்பவர்.
3. உத்திரம் முன்றாம் பாதத்தில் பிறந்தவர் பிலுக்கண், உண்மை பேசுபவர், பசுமேய்ப்பன், ஆசாரம் உடையவர்.
4. உத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நன்றி மறவாதவர் பிறரை மதிக்காதவர், மற்றவரைத்தூஷிப்பவர், வாலிப வயதில் தாயை இழப்பவர்.
நட்சத்திர கோவில்
அஸ்தம்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள்.கோபி, கல்விமான், சிறுபசி உள்ளவர், தருமவார், இன்பக் குறிப்பு உள்ளவர், சூரன், அழகர், கடினமான வார்த்தைகள் பேசுபவர், புத்திமான், பின்வயதில் செல்வம் பெறுவர், சிறுகண் உடையவர், அகன்ற மார்பை உடையவர், பின்கால் அழகர், குருபக்தி உடையவர். ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.
1. அஸ்தம் முதல் பாதத்தில் பிறந்தவர் கலகம் செய்பவர், பொய்யர், கர்வம் உடையவர், பிலுக்கண் ஆசாரம் உடையவர், பசுக்களிடம் பிரியமுள்ளவர்.
2. அஸ்தம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல குணமானவர், வாலிபத்தில் தாயை இழப்பவர், ஆடல் பாடலில் விருப்பம் உடையவர்.
3. அஸ்தம் முன்றாம் பாதத்தில் பிறந்தவர் பகைவர் போன்ற மனத்தை உடையவர், சிறு வயதில் தந்தையை இழக்கக் கூடியவர், பெரிய தந்திரசாலி வியாதியை உடையவர், வியாபாரி.
4. அஸ்தம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நன்னடைத்தை உடையவர், கொடையாளி, உயரமானவர், சந்தோஷி, மேன்மை, உடையவர், தாய்க்கு இனியவர், புகழ் உடையவர்
நட்சத்திர கோவில்
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். பலம் பொருந்திய உடல் உடையவர், அகன்ற மார்பை உடையவர், கடின நடையர், பிரிய வசனம் உடையவர், நல்ல குணம் உடையவர், தமோ குணம் உடையவர், எல்லோருக்கும் நண்பர், திடமான வாக்கு உடையவர், முகத்தில் மரு உள்ளவர், அற்ப நித்திரை உடையவர், அதிகம், செலவழிக்க மாட்டார், சூரன், துக்கம் உள்ளவர், முன்கோபி. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.
1. சித்திரை முதல் பாதத்தில் பிறந்தவர் பொல்லாத காரியங்கள் செய்பவர், கண்ரோகக்காரர், வியாக்கியானம் செய்பவர், சஞ்சாரி.
2. சித்திரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல வார்த்தைப் பேசுபவர், தன் உடம்பைக் கவனித்துக் கொள்பவர், தரித்திறர், உயரமானவர், தவம் செய்பவர், சஞ்சல மனம் உடையவர்.
3. சித்திரை முன்றாம் பாதத்தில் பிறந்தவர் கீர்த்திமான் பராக்கிரமசாலி வித்துவான், நல்ல நடத்தையுடையவர், அறிவுள்ளவர்.
4. சித்திரை நான்காம் பாதத்தில் பிறந்தவர் பகைவரை வணங்கச் செய்பவர், சுயபுத்தி உடையவர், வெற்றிடையவர்.
நட்சத்திர கோவில்
சுவாதி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். பலரிடத்திலும் பிரியமாக இருப்பவர், போஜனப் பிரியர், துடையில் மரு இருக்கும், தெய்வ பக்தி உள்ளவர், சுதந்திரத்தில் விருப்பம் உள்ளவர், ராஜ வேலைக்கு உரியவர். கல்விமான், பெற்றோரிடத்தில் அன்பு உள்ளவர், விசுவாசம் உள்ளவர், வலிமையான உடல் உள்ளவர், நேர்மையாகப் பேசுபவர், கையில் ஆயுதம் பிடிப்பவர், தியாகி. பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்
1. சுவாதி முதல் பாதத்தில் பிறந்தவர் , தீரன், கனவு காண்பவர், ஞானி, செல்வர்களிடம் நேசம் உள்ளவர், கல்வித் திறனும் பேச்சுத் திறமையும் உடையவர், சாது.
2. சுவாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் மனோதிடம் உள்ளவர், வாய் வார்த்தை ஜாலம்பேசுவார், புத்திசாலி, காரியவாதி. உண்மை, பேசுவார், அந்தரங்கக்காரர்.
3. சுவாதி முன்றாம் பாதத்தில் பிறந்தவர் வில்வித்தை விரும்புபவர், குரூர குணம் உடையவர், வஞ்சக எண்ணம் உடையவர், தீய வழியில் நடப்பவர், கலகம் செய்பவர்.
4. சுவாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் சொல் சாதுர்யம் உடையவர், கோபி, கலகத்தில் விருப்பம் உடையவர், ஒழுக்கம் உடையவர், துன்மார்க்கர், திருடர்.
நட்சத்திர கோவில்
விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். நீதிமான், நித்திரையில் விருப்பம் உடையவர், முகத்தில் மரு உடையவர், சுற்றத்தார்க்கும் அரசருக்கும் பிரியர், சொல் அடக்கம் உடையவர். நல்ல வார்த்தைகளை உடையவர். பொறுமையுடையவர், பெண்களின் விருப்பத்திற்குரியவர், தலை, மார்பு, இடுப்பு இவற்றில் மரு உடையவர், செல்வம் உள்ளவர், சதுர் வேதங்களிலும் நிபுணர், குணவான், முன்கோபி, தெய்வ வழிபாடு செய்பவர், வில், வாள் இவற்றைத் தாங்கும் வலுவுடையவர், யானை, குதிரை இவற்றைச் செலுத்துபவர், தியாக குணத்தையுடையவர். வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.
1. விசாகம் முதல் பாதத்தில் பிறந்தவர் வஞ்சகர், கல்விமார், ஜோதிடம் அறிந்தவர், சௌக்கியவார், புலவர், வியாபாரி.
2. விசாகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் தற்புகழ்ச்சிக்காரர், மந்திவாதி, உண்மை பேசுபவர், நீதிமார், ரோகி, சந்தோசம் உடையவர், நல்லவர்.
3. விசாகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், கள்ளன், குள்ளன், நல்ல காரியங்களை அறிந்தவர், அந்நியப் பெண்களிடம் விருப்பம் உள்ளவர், வாய்ஜாலக்காரர்.
4. விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் அரிய புத்திமான் யோகி, செல்வர், ஞானி, ஒருதாரம் உடையவர், உயரமானவர், வாய்ஜலக்காரர்.
நட்சத்திர கோவில்
அனுஷம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவனாய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவான வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள். நல்ல குணவான், தாம்பூலப் பிரியன், எல்லாராலும் புகழப்படுபவர், கண்ணியம் உடையவர், பக்திமார், நீதிமார், தூய்மையானவர், சிவந்த கண்களை உடையவர், மனிதர்களுள் சிறந்தவர், மானஸ்தர், பெண்களால் விரும்பப்படுபவர், அகன்ற மார்பை உடையவர், பெற்றோரை இரட்சிப்பவர், யானைபோன்ற வேகம் உடையவர், நல்ல வார்த்தைகளைப் பேசுபவர், செல்வம் உடையவர்,கோபி. உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.
1. அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தவர் நல்ல பதவியை உடையவர், நியாயக்காரர், சக்தியவார், ஆசாரக்காரர், மந்திரவாதி, செய்வோர்.
2. அனுஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் புல்லாங்குழலிசையில் பிரியம் உடையவர், நல்ல வாய்ஜாலம் உடையவர், சிறந்த புத்திமார், கருமி.
3. அனுஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்திமார், அழகர், மெல்லிய குரல் உடையவர், கல்விமான்.
4. அனுஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நச்சுச் சொல்லை உடையவர், ரோகி, மோசக்காரர், நாணயம் உடையவர்.
நட்சத்திர கோவில்
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சாமாளிக்க கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள்.வலிமை வாய்ந்தவர், துஷ்டர்களின் நண்பர், பொய் பேசாதவர், உபாயர், பக்தி உள்ளவர், கோபம் உள்ளவர், உள்மூச்சு உள்ளவர், புத்திமார், உயரமானவர், தமயரை ரட்சிப்பவர், சிற்றுண்டி பிரியர், அரசர்களுக்கு இனியவர், கண்கள் சிவந்து இருப்பவர், வலது புரத்தில் மரு இருப்பவர், கெட்ட சொல்லைத் திடமாகக் கொள்ளமாட்டார், பொய்யை மெய்யாக மாற்றும் திறமையுள்ளவர், நற்கேள்வி உள்ளவர், கடினச் சொல்லை உடையவர். கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
1. கேட்டை முதல் பாதத்தில் பிறந்தவர் எழுதவல்லவர், கர்வி, பரிகாசம், செய்பவர், விளையாட்டுச் செய்கை உடையவர், மகிழ்ச்சியுடைய மனம் உள்ளவர்.
2. கேட்டை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் சங்கீதப் பிரியன் வாய்ஜாலம் உள்ளவர், ஈகைக்குணம் உடையவர், சுகவார், போகி, கல்மனம் உடையவர், ரோகி.
3. கேட்டை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கண்நோய் உடையவர், பசு உடையவர், கலக்க்காரர், இழிந்த புத்தி உள்ளவர், அந்நியரின் தொழில்களைத் தனது என்று நினைத்துச் செய்பவர். சாது.
4. கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர் கலகம் செய்வதில் விருப்பம் உடையவர், முன்னோடி, வஞ்சகர், குரூரன், தன்குல மேன்மையைக் கூறுபவர்.
நட்சத்திர கோவில்
மூலம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்காள சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். மிக்க நித்திரைப் பிரியர், புறங்கால் அழகுடையவர், செய்யும் கருமங்களைக்குற்றம் இல்லாமல் செய்பவர், பக்திமார், ஆயுதத்தால் ஜீவிப்பார், தாய், தந்தையாருக்குப் பிரியர், தவநெறி உடையவர், சிறுதீனி தின்பவர், லோபி, கண் சிறுத்து சிவந்து இருப்பவர், கல்விமார், கொடுமையே செய்பவர், பந்துக்களைச் சேராதவர், முன்கோபி கொடியர். சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
1. மூலம் முதல் பாதத்தில் பிறந்தவர் கிழங்குவகைப் பொருட்களில் விருப்பம் உள்ளவர், பாபத் தொழில்களையே செய்பவர், ரோகி பித்தம் கொண்டவர்.
2. மூலம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் வித்வார், வயிற்று நோய், உடையவர், பொய் பேசுபவர், நல்ல புத்தி உள்ளவர், எல்லோரிடமும் இன்பம் உடையவர்.
3. முலம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பில்லி, சூன்யம், இவற்றில் ஆர்வம் உள்ளவர், புதிய கலைகளைக் கற்றுக் கொள்பவர், அழகுள்ளவர், சோம்பேறி, கருமி, நல்ல பழக்கங்களில் விருப்பம் உள்ளவர்.
4. மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நல்ல பலவான், காரியத்தில் வல்லவர், சாது, கோபத்தை அழித்தவர், ஞானி பகைவரை வெல்லுபவர், கழுத்தில் நோய் உள்ளவர்.
நட்சத்திர கோவில்
பூராடம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்ட செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். குறுகிய நெற்றி உடையவர், உயரமானவர், விசனம், உள்ளவர், வாசனைப்பிரியர், மன்னருக்கு நண்பர், உயர்ந்த பதவியை வகிப்பவர், சிற்றுண்டிப்பிரியர், தாய்க்கு விருப்பமானவர், தன்னை வந்தடைந்தவரை ரட்சிப்பவர், சிறிய சிவந்த கண்கள் உடையவர், நீண்ட கை, கால்களை உடையவர், அழகுடையவர், விசால மனம் உடையவர், கள்ளன், சூரன், வலிமையான கரங்களையும் தோள்களையும் உடையவர், பொய் சொல்லாதவர், பயணம் செய்வதில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு இனியர், தரும சிந்தனை உடையவர். சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
1. பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர் மிகுந்த வணக்கத்துக்கு உடையவர், குழந்தை பேறு இல்லாதவர், சச்சரவு உண்டாக்குபவர், சூரன், நடுவயது வரை ஆயுள் இருப்பவர்.
2. பூராடம் இரண்டாம பாதத்தில் பிறந்தவர் யோகி, அழகுள்ளவர், நண்பர்கள் இல்லாதவர், அறிவற்றவர், வேசிகளின் லோலர்.
3. பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சுகவார், செல்வம் உடையவர், வாலிப தசையில் தாயை இழப்பவர், பெரிய வியாதி உடையவர், நற்குணவார், தெளிவான சிந்தவனை உடையவர்.
4. பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் பலமில்லாதவர், முதுகு நோய் உள்ளவர், திருடன் அபவாதம் சொல்பவர், பலவான், துரோகி, தந்தையைச் சிறுவயதிலேயே இழப்பவனாயும் இருப்பான்.
நட்சத்திர கோவில்
உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுப்பூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். பெண்களுக்கு இனிமையானவர், முகத்தில் மரு உடையவர், சரீரபலம் உடையவர், பலவார், புத்திமார், சுற்றத்தார்க்கு நல்லவர், நீண்ட மூக்கு, உடையவர், நல்ல வார்த்தைகளையே பேசுபவர், போஜனப்பிரியர், நீரைக் கண்டு அஞ்சமாட்டார், தர்மி, பிறர்பொருளை விரும்பமாட்டார், தூயவர், நல்லவர்க்கு நல்லவர், தியாகி. அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும்.
1. உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர் அழகு வாய்ந்தவர், நல்ல புத்திசாலி, ஈகைத் தன்மை உடையவர், சகல விதமான சாஸ்திரங்களை அறிந்தவர், குருசை உபசரிப்பவர்.
2. உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல வாக்குச் சாதுரியம் உடையவர், உலோபி, தற்பெருமை பேசுபவர், திடவான், மேன்மையான கருமங்களை ரகசியமாக செய்பவர்.
3. உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கல்விமான் பெரு நோக்காய்ப் பேசுபவர், குரூரமானவர், கலங்கிய மனத்தை உடையவர், கோபி, பருத்த தேகத்தை உடையவர்.
4. உத்திராடம் நான்காம் பாதத்தில பிறந்தவர் தைரியம் வீரியம் உடையவர், தரும்ம் செய்பவர், விசேஷ செயல்பாடு உள்ளவர், வியாபாரி, சுற்றத்தார்களிடத்தில் அன்புள்ளவர்.
நட்சத்திர கோவில்
திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். கல்வி உடையவர், ஒரு வழிப் போக்கர், விரைவில் கோபம் வந்து உடனே மாறும் குணம் உடையவர். முன்னும் பின்னும் பார்த்து நடப்பவர், உயர்ந்த உள்ளங்கால்களை உடையவர், பெண்களுக்கு இனியவர், வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர், மயிர் அழகர், உற்சாக முடையவர், சிக்கனத்தை கடைபிடிப்பவர், ஈகை குணம் இல்லாதவர். தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.
1. திருவோணம் முதல் பாதத்தில் பிறந்தவர் புத்திசாலி, தூயதேகத்தை உடையவர், பிள்ளைகள் இல்லாதவர், போகி, நிலைபெற்ற உற்சாகி, கலகக்காரர், கர்வி.
2. திருவோணம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் பிரும்ம ஞானி, கருமி, தயவு தாட்சண்யம் இல்லாதவர், லோபி சிநேகம் இல்லாதவர்.
3. திருவோணம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பிரும்ம கருமி, ரோகி, போகி, செல்வம், உடையவர், உதார குணம் உடையவர், தயவற்றவர்.
4. திருவோணம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் வேசி லோலன், சீலம் உடையவர், தருமம் புகழ் உடையவர், தனவான், பயிர் செய்பவர்
நட்சத்திர கோவில்
அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். நெறியான தொழிலைச் செய்பவர், ஒருவருக்கும் பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமான நாசி உடையவர், ஒருவர் சொல்லையும் பொறுக்கமாட்டார். மாமிச பட்சண பிரியர், பெற்றோருக்கு விருப்பமானவர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உடையவர், அழகர், அறிவாளி, பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார்கள். செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.
1. அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர் காமி, பசி, பொறுக்க இயலாதவர், மனக்கிலேசம் உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம் உடையவர், கறுப்பு நிறம் உடையவர்.
2. அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சி உடையவர், சாஸ்திரவாதி, தருமம் உடையவர், தரித்திரம் உடையவர்.
3. அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் குணசீலன், இளைத்த உடல் உடையவர், திடமான மனம் உடையவர், நல்ல நடத்தை உடையவர், சிவந்த நிறம் உடையவர்.
4. அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் தனவான், குரூரன், ஸ்தூல தேகத்தை உடையவர், கர்வி, வஞ்சகன், மயிர் அழகுள்ளவர்.
நட்சத்திர கோவில்
சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமான சொற்களை பொறுக்கமாட்டார். ரோகம் உடையவர், இனியவர், பக்திமான், கை, கால் வலுவுள்ளவன், அழகிய வாயை உடையவர், பொய் பேசமாட்டார். அரசர்க்கு இனியவர், நீராடுவதில் விருப்பம் உடையவர். பகைவரை வெல்பவர், செல்வம் உள்ளவர், வழக்கு உரைப்பவர். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.
1. சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர் குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின் மேல் அன்புடையவர்.
2. சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், கிலேசம் உடையவர், வஞ்சகன். ஆசாரம் அற்ற இழிந்த குலத்தவர்.
3. சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல காரியங்களை எல்லாம் முடிப்பவர், பசி உள்ளவர், வயிற்றுநோய் உள்ளவர், பித்தன், சேவக விருத்தி செய்பவர், புத்திமான்.
4. சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நஷ்டத்தை உணர்பவர், நினைத்த காரியத்தை முடிப்பவர், நல்லவர், சுகவான்.
நட்சத்திர கோவில்
பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பிறர் சொல்லைப் பொறுக்க மாட்டார், வழக்குரைப்பார், பால், நெய், இவற்றில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு கவுரவம் வழங்கமாட்டார். கல்விமான், ஆசி கூறுபவர், அழகுடையவர், பக்திமான். மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.
1. பூரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் பிராமணர், அகன்ற முகத்தை உடையவர், பலவான், மனைவிமேல் பிரியம் உடையவர், சண்டை செய்வோன், நல்லுணர்ச்சி உடையவர், சுகவான்.
2. பூரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் கடவுள்மந்திரம் அறிந்தவர், உண்மை தளராதவர், யாரிடமும் சென்று வணங்கிக் காரியத்தை முடிப்பவர்.
3. பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சந்தோஷம் உள்ளவர், பொறுமை, நல்ல நடத்தையுள்ளவர், புலவர், அயலாளிகளின் வீட்டுப் போஜனத்தில் விருப்பம் உடையவர்.
4. பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் குணவான். சத்தியவான், குள்ளன், நட்புள்ளவர், நல்ல தொழில் உள்ளவர், சீமான்.
நட்சத்திர கோவில்
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க்கூடிய மனநிலையை வளர்த்துவிரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். மிகுந்த சுற்றத்தாரை உடையவர், கோள் சொல்லும் குணம் உடையவர், நீதிமான் பிறருக்கு உதவி செய்பவர், வித்தையில் விருப்பம் உடையவர், தாம்பூலப் பிரியர், நாடுகள் சுற்றுபவர், பரந்த காதும், பரந்த மார்பும் உடையவர், புத்திமான், பெண்களுக்கு இனியன், பொய்யன், பிறர் தொழிலை விரும்பி செய்பவர், நல்லவருக்கு நல்லவர். வழக்கை தொடுப்பதில் பலவான்.
1. உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர் நிறைந்த உடல் உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் ரோஷம் உடையவர், சாது, தரித்திர்ர், நல்ல குணவான், நல்ல நடை உடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள் பக்தி நிறைந்தவர், முன்கோபம் உடையவர், எல்லா நேரத்திலும் இன்பத்தோடு இருப்பவர், கலகம் மூட்டுவர்.
4. உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் புலவர், சொல்லில் வாட்டம் உடையவர், பேதி உடையவர், குடும்பி, கோபி, கிலேசம் உள்ளவர்.
நட்சத்திர கோவில்
ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிராயணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். பெண்களிடம் பிரியம் உடையவர், பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்ல குணவான், அழகான கண்களை உடையவர், வாய் சாதுரியர், பிராமணர்களை வணங்கும் பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்கு இல்லையென்று கூறாதவர், பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டான்.
1. ரேவதி முதல் பாதத்தில் பிறந்தவர் கலகப்பிரியன், நிபுணன், வித்துவான், கிலேசன், சந்தோஷி.
2. ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் திருடன், தீரன், சௌக்கியவான், கோபி, கருமி, சஞ்சலம் உடையவன், மெலிந்த சரீரம் உடையவன்.
3. ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்தியற்றவன், பாபி, வஞ்சக குணம் உள்ளவன், தரித்திறன், நல்ல குணம் இல்லாதவர்.
4. ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் தீரன், சத்தியம் பேசுபவர், இழிந்த குலத்தவர், சுகவான், பகைவரை வெல்பவர்.