Tuesday, November 18, 2014

பஞ்சகச்சம் உடுத்தும் சமயத்தில், சம்ப்ரதாயத்தில் இருக்கும், கவணிக்க வேண்டிய, ஒரு சில விஷயங்கள்:

பஞ்சகச்சம் உடுத்தும் சமயத்தில், சம்ப்ரதாயத்தில் இருக்கும், கவணிக்க வேண்டிய, ஒரு சில விஷயங்கள்:
* பூணுலை நிவித்தமாக (மாலையாக) போட்டுக்கொள்ளவேண்டும். மேலும் அதை வலது காதில் மாட்டிக் கொள்ளவேண்டும். இது அவசியம். .
* முடிந்தால் திவிதீய வஸ்த்ரம் தலையில் (முண்டாசு மதிரி) இருத்தல் நல்லது. அல்லது தோளில் போட்டுக் கொள்ளவேண்டும். அதாவது அந்த சமயத்தில் ஒற்றை வஸ்தரமாக இருப்பது தவிற்க்கப்பட வேண்டும்
*ஸ்மார்த்த சம்ப்ரதாயத்தில் நாபி (தொப்புள்) வெளியே தெரியாமல், தொப்புளை மறைத்துதான் கச்சம் அணிந்துகொள்ளுவது பழக்கத்தில் உள்ளது.
* கச்சம் கட்டி முடித்தவுடன் அங்கவஸ்த்ரத்தை (த்விதீய வஸ்த்ரம்) இடுப்பில் கட்டிகொள்ளவேண்டும்.
* அங்கவஸ்த்ரத்தை இடுப்பில் கட்டி கொள்ளும்போது ‘பெல்ட்’ மாதிரி வேஷ்டியின் மேல் சுற்றிகொள்ளுவதை தவிற்கவேண்டும். அங்கவஸ்த்ரம் ப்ரதான வேஷ்டியை தொட்டுக்கொண்டிருக்கலாமெ தவிற, அதன்மேல் சுற்றி கொண்டிருக்கக்கூடாது.
* அதே மாதிரி கச்சம் கட்டி முடித்தவுடன் கால்களை அலம்பிக் கொள்ளுவதும் பழக்கத்தில் உள்ளது. புதிய வஸ்த்ரமாக இருந்தால் இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும்.

No comments:

Post a Comment