Tuesday, November 18, 2014

மாந்த்ரிகமும் மனிதர்களும் .....

மாந்த்ரிகமும் மனிதர்களும் .....
இந்த உலகில் எந்தனையோ தகவலும் ,பாடம்களும் ,விவரம்களும் உள்ளது ,இதில் மாந்திரிகம் என்று ஒன்றும் உள்ளது .
இந்த பதிவு மாந்திரிகத்தை பற்றி எனக்கு கிடைத்த சில அனுபுவமும் மற்றும் நூல்களில் நான் படித்த சில தகவல்களும் சித்தர்கள் இவைகளை 
என்ன சொல்கிறார்கள் என்பதனை பற்றியும் தெரிந்து கொள்வோம் .
இதை படிக்கும் பொழுது உங்களுக்கு நம்ப முடியாத சில விவரமும் 
குழப்பும் சொற்களும் வரலாம் .
இதை நம்புங்கள் என்று நான் பதியவில்லை 
இது ஒரு subject அவ்வளவுதான் .
நம்பிகை சார்ந்த விவரம் என்பதால் அறிவியால் சார்ந்த காரணம் இருக்காது .........
இந்த மாந்திரிகம் என்பது மந்திரத்தை கொண்டது .இது நம்முடைய 
நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று என்னவேண்டாம் .
ஆப்ரிக்கா நாடு,சீனா ,ஜப்பான் ,பர்மா ,மற்றும் யூதர்கள் உள்ள நாடுகள் 
இதை இந்த நம்பிகைகளை இன்னும் வைத்து உள்ளார்கள் .
பைபிள் நூலில் பழைய ஏற்பாடு படிக்கும் பொழுது இந்த மந்திர கலை 
எப்படி அவர்களிடம் இருந்திருகிறது என்று புரியும் .
பல பலி புசைகளை நம்பும் கருப்பு இனத்தவர் இதை நம்பி தான் பல முயற்சிகள் மற்றும் செயல்களை செய்வர் .
இப்படி இருக்கும் இருந்து வரும் இந்த மாந்திரிகத்தை தான் நாம் பார்க்க போகிறோம் .
மாந்துரிகம் என்றால் என்ன ?
தேவதைகளின் துணையால் சித்து வேலைகளை செய்வது .
தேவதைகளை பற்றி தெரிந்தால் தான் இவை புலப்படும் .
மனிதன் 
ஆண் இறந்தால் பிசாசு 
பெண்ண இறந்தால் பேய்
தன்னுடைய உடலை தானே தண்டித்து இறப்பது தான் மனிதர்களை 
பேயாகவும் பிசாசகவும் அழிய வைக்கும் .
இவர்களை கட்டுபடுத்த தோன்றியவர்களே தேவைதைகள் .
இந்த தேவதைகள் முழுக்க முழுக்க தெய்வம்களின் கட்டுபாட்டில் உள்ளவை
தெய்வம் என்பது இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது .
மந்திரம்களை கொண்டு இந்த தேவதைகளை தன்னுடைய விருப்பத்திற்கு 
கொண்டு வருவது மாந்திரிகம் .
மந்திரம் என்பது ஒளி ஒலியும் சேர்ந்தது
கிராமம்களில் வியாதி வந்தவுடன் நோயுக்கும் பேயுக்கும் வைத்தியும்
பார் என்பார்கள் .
அதாவுது உடலுக்கு மருந்து 
மனதுக்கு மந்திரம் என்பது
இதை தான் கோவிலில் பூசாரி மந்திரித்து விடுவார் என்பது .
நம்முடைய உடல் ஸ்துலம்,சூச்சமம் என்று இரண்டாக உள்ளது என்கிறது
சித்தர் கூறிய நூல்கள் . ஸ்துல உடல் நாம் கண்களால் பார்க்க கூடியது 
சூச்சமம் என்பது நம் கண்களால் பார்க்க முடியாதது .
இது முதலில் கண்பார்வைகளுக்கு தெரிவது இல்லை .ஆனால் பிறர் 
தப்பான எண்ணம் கொண்டு நம்மை பார்க்கும் பொழுது கண்கள் வழியாக 
நம்மில் உள்ள சூச்சமத்தை பாதிக்கும் .
இதனால் வரும் சில பயம் ,சுரம் போன்ற தொல்லைகள் .
இதற்க்கு நம் குடும்பத்தில் பெண்கள் கைகளில் காய்ந்த மிளகாய், உப்பு தெருவில் உள்ள மண் எடுத்து இவைகளை ஒன்றாக்கி நம்மை சுற்றி போட்டு(திருஷ்டி கழித்து) எரித்து விடுவார்கள் .
மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு .
துரியோதனன் தான் போருக்கு போகும் முன் தான் தாயிடம் 
ஆசி வாங்க செல்கிறார் .
அவர் அன்னை துரியோதனனிடம் நீ குளித்து விட்டு வெறும் உடம்பாக 
என்னை வந்து பார் என்கிறார்கள் .
இவரும் அப்படி வந்த பொழுது அந்த தாய் பல வருடமாக கட்டி இருந்த 
கண்களை அவிழ்க்கிறார் 
கண்களில் இருந்து வந்த(சக்தி ) பார்வை இவர் உடல் முழுவதும் பாய்கிறது 
அதோடு துரியோதனின் உடல் முழுவதும் ஒரு கவசம் போல் பாதுகாக்கிறது .
யுத்த களத்தில் பீமன் துரியோதனை அடிக்கும் பொழுது கணிர் கணிர் என்ற சத்தம் மட்டும் வருகிறது .குழம்பிய பீமன் கிருஷ்ணனிடம் 
சொல்ல கிருஷ்ணர் விளக்கம் தருகிறார்
மனதின் செயல்பாடு(சக்தி ) கண்களில் வரும் என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும் .

No comments:

Post a Comment