எதுவும் நிலை அல்ல நல்லறமே உயிர்க்கு உற்ற துணை
பாடல் :
பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே.
திருமூலர்
விளக்கம் :
நன்மையும் தீமையையும் உள்ளனபோல் காணப்படும் இவ்வுடல்...
நாள்பட்டு மூப்புப் பிணியுற்றுச் இறப்பினை எய்தும். ....
எய்தவே, இந்த உடலாலும், உடல் உழைப்பாலும்
இந்த உடல் சம்பாதித்த சொத்துக்களினாலும் ,
அனைத்து ஐம்புலன் இன்பங்களும் அனுபவித்த , அறுசுவை உணவுகள் உண்ட
பெண்டிரும் மக்களும் தம் உடம்பினை துறந்து அந்த உயிருடன் பின் செல்லமாட்டார்கள் ..
அதுதான் உண்மை .. இருந்தாலும் அவர் வாழ்ந்த பொது செய்த நல்ல செயல்கள் ,
அவர் கொண்ட ஒழுக்கம் , இறைவன் திருவடி மீது கொண்ட சேவை , இவைகள் துணையாய் கூட வரும் ....
கருத்து :
உலகியற் பொருள்களும், செயல்களும் , இன்பங்களும் , எதுவும் நிலை அல்ல ..
ஆதலால் வாழும் காலத்தில் பிறர்க்கு பயனுள்ள செயல்களை ( புண்ணியச் செயல்கள் ) செய்க ...
அதுவே உயிர்க்கு உற்ற துணை

No comments:
Post a Comment