ஆவணிமாத பவுர்ணமியும், அவிட்டமும் இணையும் நாளில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், பூணூல் அணிவது வழக்கம். பூணூல் அணிந்தவர்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை
குறைந்தது 144 முறை காலை, நண்பகல், மாலையில் ஜபித்து வரவேண்டியது கடமை. காயத்ரி
மந்திரம் ஜபித்தால் துன்பம், எதிரி பயம் நீங்கும். முகத்திலும், உடலிலும் ஒருவித
"தேஜஸ்' உண்டாகும். பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர்
ரிஷிகளுக்கும் தர்ப்பணம் (எள்ளும்,நீரும் கலந்து தாரையாக விடுவது) என்னும் சடங்கைச்
செய்கின்றனர். குருவாக இருந்து செயல்பட்டவருக்கும், வயதில் மூத்தோருக்கும்
வெற்றிலை, பாக்கு, பழம், காணிக்கை அளித்து பாதம் தொட்டு வணங்குவர். பூணூல் அணிந்து
வரும் ஆண்களை, பெண்கள் வாசலில் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பர்
No comments:
Post a Comment