Monday, September 2, 2013

இறைவன் பெயரைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் ரொம்ப கவனம் வேண்டும் என்கிறார் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார். தன் பாடல் ஒன்றில், மனிதனாய் பிறந்தவன், தனது குணங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைக்கக்கூடாது. மாதவன், கோவிந்தன் என்று பெயர் வைக்க வேண்டும் என்கிறார். பெரியாழ்வார் என்பது நாம் அவருக்கு சூட்டிய பட்டம். அவரது நிஜப்பெயர் என்ன தெரியுமா! விஷ்ணு...விஷ்ணு சித்தன் என்று அவரை அழைப்பார்கள். "விஷ்ணு' என்றால் "எங்கும் வியாபித்திருப்பவன், எங்கும் உள்ளவன்' என்று பொருள். ஆம்...அவன் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, அங்கிங்கென இல்லாமல் எல்லா இடத்திலும் பரவி நின்றான். சரி...குழந்தைகளுக்கு இறைவனின் திருப்பெயரை வைப்பதால் என்ன லாபம்...""மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நானுடை நாரணன் தம்மன்னன் நரகம் புகார்' என்கிறார் பெரியாழ்வார். அதாவது, இந்தப் பெயர் வைத்து அழைத்துக் கொண்டே இருப்பதால், அவர்களுக்கு நரகமே கிடையாது என்கிறார். மோட்சம் கிட்ட இறைவன் பெயரைக்
குழந்தைகளுக்கு சூட்டுங்கள்.

No comments:

Post a Comment