Sunday, September 1, 2013

கிருஷ்ண பகவான் நேரில் உபதேசித்ததாக வியாசர் தந்திருக்கும் சாஸ்திரம் பகவத் கீதை.

கிருஷ்ண பகவான் நேரில் உபதேசித்ததாக வியாசர் தந்திருக்கும் சாஸ்திரம் பகவத் கீதை. `இது சாஸ்திரம் மட்டுமல்ல. உலக வாழ்க்கைக்கு உதவும் புத்தி மதிகள் அடங்கிய உயர்ந்த நூலாகும்'. அர்ச்சுனனுக்குச் சொல்வது போல் மனித குலம் முழுமைக்கும் இதில் தர்மம் உபதேசிக்கப்பட்டுள்ளது.

பகவான் ஆதி சங்கரரர், ராமானுஜர், மத்வாச்சாரியார், மகாத்மா காந்தியடிகள், லோகமான்ய பாலகங்காதர திலகர், சுவாமி விவேகானந்தர், ஞானேஸ்வரர், வினோபாபாவே, அரவிந்தர், அபேதாநந்தர், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா, சுவாமி சித்பவானந்தர், சுவாதி சின்மயானந்தர்,

ராஜாஜி, மகாகவி பாரதியார், கண்ணதாசன், நா.கிரிதாரி பிரசாத் முதலியோர் பகவத்கீதைக்கு உரை எழுதியுள்ளனர். `

கீதை வேதத்தின் சாரம்' என்கிறார் பகவான் ஆதி சங்கரர்.
`கீதை பாபத்தைப் போக்கும் சஞ்சீவி' என்கிறார் ராமானுஜர்.
`கடமையைக் காட்டும் நூல்' என்கிறார் திலகர்.
`பக்தியின் உருவமே இந்த நூல்' என்கிறார் மகாத்மா.
`பற்றின்றிப் பணி செய்வதே பரமனுக்கு உகந்த நெறி'

என்பதை வலியுறுத்துகிறது கீதை என்கிறார் வினோபாபாவே.

`சோகத்தை நீக்கி யோகத்தைச் சொல்ல வந்த நூலே கீதை' என்கிறார் அரவிந்தர்.

No comments:

Post a Comment