Thursday, September 19, 2013

அயல்நாட்டில் வசிக்கும் நான் பித்ரு கார்யங்களை இங்கேயே செய்யலாமா? பலன் தருமா



அயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்.
ப்ரஹ்மோபதேசம் (உபனயனம்), சீமந்தம்,விவாஹம்
(”வேதமும் பன்பாடும்” புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்:)

கேள்வி:...
அயல்நாட்டில் வசிக்கும் நான் பித்ரு கார்யங்களை இங்கேயே செய்யலாமா? பலன் தருமா? தயவு செய்து எங்களது தாபத்தை தீருங்கள்.

பதில்:
ச்ராத்தம் போன்ற பித்ரு கர்மாவை புண்ணிய பூமியான பாரதத்தில் செய்வதுதான் ஸ்லாக்யம். இதில் சந்தேகமில்லை. திதி முதலிய நாள் பார்ப்பதிலும் வெளிநாட்டில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். வேறுபடலாம். ச்ராத்த மடி மற்றும் நியமங்களை அங்கு அனுசரிக்க இயலாமல் போகலாம்.

ஆனால் நம்மவர்கள் பித்ரு கார்யங்களை விடாமல் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அயல்நாட்டில் இருந்தாலும் செய்து வருவது தாபத்தை ஓரளவிற்கு நிச்சயம் தீர்க்கும். அயல்நாட்டில் செய்தால் அன்று முழுவதும் ஆசாரத்துடன் இருப்பது மிக அவசியம்.

முடிந்த போதெல்லாம் தாய் நாட்டிற்கு வந்து முறையாக செய்து வரலாம். அதற்கு தகுந்தபடி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று. அபர கார்யங்களை பாரதத்தில் செய்வதுதான் நல்லது.

மற்றுமொரு முக்க்கியமான விஷயம்:
அதேமாதிரி கீழ்கண்ட கர்மாக்களையும் அயல் நாட்டில் செய்வதைவிட, நம் நாட்டில் செய்வது அதிக பலனை தரும். ஏனெனில், இந்த கர்மாக்கள் மிக முக்கியமானது மாத்ரம் அல்ல, இவைகள், நாற்பது சம்ஸ்காரங்களில் அங்கமாகும்:

1. ப்ரஹ்மோபதேசம் (உபனயனம்)
2. சீமந்தம்
3. விவாஹம்
.

No comments:

Post a Comment