Thursday, September 12, 2013

வேத வாக்கு ------------------

வேத வாக்கு
------------------
வளவாழ்வுக்குச் சில உறுதிமொழிகள்
ஒவ்வொருவரும் இந்த உறுதிமொழிகளை ஏற்று அவற்றின்படி நடந்துகொள்ள வேண்டும்; அவையாவன -
“பிறர் பொருளில் ஆசை கொள்ளமாட்டேன்....
“அநுதினமும் பணிபுரிந்து நூறாண்டு வாழ்வேன்.
“அனைவரையும் நண்பராகக் கண்டு பழகிக் களிப்புடன் நூறாண்டு வாழ்வேன்.
“தேவைக்கு மட்டுமே திட்டமிட்டுப் பொருளீட்டி, எவரிடமும் கையேந்தி இரக்காமல், நூறாண்டு வள வாழ்வு வாழ்வேன்.
“என் மனத்தில் மங்கலமான எண்ணங்களே எழ வைப்பேன்.
“உண்மையே நம்பிக்கை என்பது; பொய்யே அவ நம்பிக்கை –இதுவே ஆண்டவனின் கட்டளை. எனவே, அனைவரும் நம்பிக்கைகொள்ளும் சத்தியத்தில் நூறாண்டு வாழ்வேன்.
-சுக்ல யஜுர்வேதம், 36 – 24
குடும்பம் ஒன்று தொழில்கள் பல
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே தொழிலைச் செய்யவேண்டும் என்பதில்லை. தொழில் என்பது, அவரவருடைய முனைப்பையும் ஊக்கத்தையும் ஈடுபாட்டையும் வாய்ப்பையும் பெற்றது. தச்சனுக்கு மரம் தேவை; மருத்துவனுக்கு நோயாளி தேவை; பாகனுக்கு யானை தேவை; எனவே, தொழிலுக்கு ஏற்பத் தேவைகள் மாறும். இதோ ஒரு குடும்பம் –மகன் கவி பாடுவதில் வல்லவன்;
தந்தை மருத்துவன்; தாய் சமையற் கலையில் தேர்ந்தவள். அவரவருக்கு விருப்பமான தொழில்களை அவரவர்கள் செய்கிறார்கள். - ரிக்வேதம், 9-112-3.
நம்பிக்கையே எல்லாம்
வாழ்வு என்பது ஒரு வேள்வி. இதில், சத்தியம் என்பது கணவன் போல; நம்பிக்கை என்பது, மனைவி போல. உணர்ச்சியடிகாப் பிறப்பது நம்பிக்கை; அறிவின் அடிப்படையில் உதிப்பது சத்தியம். இரண்டும் இணைந்து செயலாற்றினால் தான் மனிதன் வளம்பெற இயலும்.
-ஐதரேய ப்ராஹ்மணம் 7-10.
தீ எரிவது நம்பிக்கையினாலே. நம்பிக்கையுடன் தீயிலிட்ட நெய்தான் தேவர்களிடம் போய்ச் சேரும். நம்பிக்கைதான் செல்வம் சேர்க்கும்.
நம்பிக்கையினால் காற்று வீசுகிறது; மழை பொழிகிறது; கதிரவன் உதிக்கிறான். நம்பிக்கை என்பது, உள்ளத்தில் எழும் ஆர்வத்தினாலும் இயற்கை நியதில் பற்றினாலும் உண்டாவது. எல்லாத் தேவர்களுமே நம்பிக்கையினால் உருவாகின்றனர். நம்பிக்கையினால் கல் தெய்வமாகிறது.
காலையும் நண்பகலும் மாலையும் நம்பிக்கை என்ற தெய்வத்தைப் போற்றுவோம்; ஒளிமயமான வாழ்வு தருவது நம்பிக்கை.
-ரிக்வேதம், 10-151.
நம்பிக்கையே நமது வாழ்வு! அது என்றும் வெற்றிதரும்.
-யஜுர்வேதம், 2-10

No comments:

Post a Comment