Thursday, September 12, 2013

விவேகசிந்தாமணி பாடல்


விவேகசிந்தாமணி


பாடல்: 12
...
ஆல கால விடத்தையும் நம்பலாம் ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.



சாலையை பார் சேலையை பார்க்காதே என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்

விஷங்களுக்கெல்லாம் விஷமாகிய ஆலால விஷதினையும் நம்பலாம். கரைபுரண்டு ஓடும் ஆற்றினையும் தூக்கி வீசும் சூறாவளியையும் நம்பலாம், எம னிடம் இருந்து உயிரை பறிக்க வருபவரையும் நம்பலாம், ஆனால் சேலை கட்டிய பெண்களை நம்பினால் தெருவில் தான் நிற்க வேணும்


சேலை கட்டிய மாதர் என்பதன் விளக்கம் கீழே
சேலைகட்டிய -- சேல் +அகட்டிய மாதர்
சேல் போன்ற விழிகளால் ஆடவர்களை மயக்கி
பொருள் பறிக்கும் விலை மாதர் என்பதே உண்மைப்
பொருளாகும்.

சேலை கட்டிய என வந்ததன் காரணம், எதுகை சீர்
தொடைக்காக பிரித்து அமைக்கப்பட்டது
ஆகவே நல் ஒழுக்க குல மாதரை குறிக்கவில்லை
என அறியவும்

No comments:

Post a Comment