Thursday, November 14, 2013

இந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதா?

 
 
இந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதா?

சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதென்பது இந்துத்துவத்தின் மரபிலேயே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக சொந்த நாடு இல்லாமல் உலகமெங்கும் அகதிகளாக, பல கஷ்டங்களை அனுபவித்த யூதர்கள், மீண்டும் உதயமான இஸ்ரேலில் கூடியபோது, ஒவ்வொரு நாட்டிலும் தாங்கள் பட்ட இன்னல்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் இருந்து போன யூதர்கள் மட்டுமே, தாங்கள் எவ்விதக் கஷ்டத்துக்கும் ஆட்படாமல் ஹிந்துக்களால் நன்றாக நடத்தப்பட்டதாகச் சொன்னார்கள் என்பது வரலாறு. இன்றைக்கும், கேரளத்தில் பண்டைய ஹிந்து அரசர்கள் யூதர்களுக்கு வழிபாட்டுத் தலம் அமைக்க அளித்த நில உரிமைப் பட்டயத்தை யூதர்கள் நன்றியுடன் பாதுகாக்கின்றனர்.
பார்ஸீக்கள் இஸ்லாமியர்களால் ஈரானிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது இந்திய அரசர்களே அவர்களுக்கு அடைக்கலம் அளித்தனர். சிரியாவிலிருந்து ரோமானியர்கள் விரட்டப்பட்ட பழமையான கிறிஸ்தவர்களுக்கு கேரள இந்து அரசர்கள் ஆதரவு நல்கினர்.
இந்துத்துவத்தின் பாரம்பரியம் இதுதான். மதநம்பிக்கையின் அடிப்படையில் அது எவரையும், எந்த சிறுபான்மை யினரையும் துன்புற...ுத்துவதில்லை.

தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்ற ஒளரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்த குரு கோவிந்த சிங், தன் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்களை சகோதரிகளாகப் பார்த்த வீர சிவாஜி இருவரும் இந்திய பாரம்பரியத்தின் சின்னங்கள். அப்படியிருக்கும்போது எப்படி இந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதாக, அடக்குமுறை கொண்டதாக இருக்க முடியும்?
நிச்சயமாக இந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. இன்னும் சொல்லப் போனால் பல்வேறு வகையினரான மத நம்பிக்கைகளுக்கு இந்த நாட்டில் அரணாக விளங்குவது இந்துத்துவமே.

பஹாய்கள் ஈரானிலும், அஹ்மத்தியாக்கள் பாகிஸ்தானிலும், ஃபெலூன்காங்க் அமைப்பினர் சீனாவிலும் படும் கஷ்டங்களையும், அனுபவிக்கும் மனித உரிமை மீறல் களையும் உதாரணமாகக் காணலாம். ஈரானிலும் பாகிஸ் தானிலும் சீனாவிலும் ஆதிக்க சக்திகளாக இருப்பவர்களும் அவர்களால் அடக்குமுறை அனுபவிப்ப வர்களும், இந்தியாவில் சமரசத்துடன் வாழ முடிவது எப்படி? இந்துத்துவப் பண்பாடே காரணம் அல்லவா?

No comments:

Post a Comment