Thursday, November 14, 2013

பட்டினத்தார்

பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார்.
அதைக் கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரைக் காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங் கோவணத்துடன் ஆண்டிக் கோலத்தில் அமர்ந்திருந்தார்.
அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாகச் செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாகக் கேட்டான்.
அவை எல்லாம் இருந்திருந்தால்நான் உம்முன் நின்றிருப்பேன்.துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள். இந்தச் சிறப்பு ஒன்று போதாதா..!
என்று அமைதியாகப் பதிலளித்தார் பட்டினத்தார்.

No comments:

Post a Comment