நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது.கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரியபுலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும், இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும்.
கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம். திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம். அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்
என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
No comments:
Post a Comment