Thursday, November 21, 2013

அகோரிகளை மோசமாக சித்தரிப்பது பற்றி

பல இடங்களில் அகோரிகளை மோசமாக சித்தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன்; அம்மணமாக இருப்தெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேட்கிறார்கள் ;; ஒரு பிரபல தொலைகாட்சி ஒன்றில் இவர்களால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பிரயோஜனம் இல்லை என்று சித்தரித்தார்கள் !! இந்த சமூக உணர்வாளிகளுக்கு நான் சொல்லிகொள்வது என்னவென்றல் அகோரம் என்பது தத்துவம்..உடம்பில் துளி கூட துணி இல்லாமல் இருப்பது சுலபம் என்று நாம் நினைக்கிறோம் ..ஆனால் துணியோடு இருப்பதை விட நிர்வாணமாக இருப்பதில் தான் சிரமம் அதிகம் உள்ளது ..பனிக்குளிரிலும் சுடு வெயிலிலும் அவர்கள் நிர்வாணமாக தான் இருக்கிறார்கள்;சரி இதை விடுங்கள் மழை, குளிர் போன்ற பருவ நிலைகளையும் தாண்டி நிர்வாணமாக இருக்கும் நிலையில் உணர்வுகளை மறைப்பதில் தான் சிக்கலே உள்ளது. அவ்வளவு சுலபம் அல்ல நிர்வாணம் என்ற நிலை. ஒரு குழந்தை நிர்வாணமாக இருப்பதை பற்றி கவலை படுவதில்லை. அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து நிர்வாணத்தை மறைக்க ஆரம்பிக்கிறதோ அது தான் மனதில் கள்ளம் கபடத்தின் துவக்க நிலை .. ஒரு சராசரி மனிதன் முற்றிலும் துறந்தால் மட்டுமே இந்த நிலையில் இருக்க முடியும்;ஆனால் இந்துக்களாகிய நம்மில் சிலரே நம் மதத்தின் தத்துவங்களின் சிறு துளி கூட தெரியாமல் இவர்களை கேலி கிண்டல் செய்து வீண் ஜம்பம் அடித்து கொண்டிருக்கிறோம். அகோரம் என்பது அபமானம் அல்ல அபிமானம் !! அது வாழ்கையின் தத்துவம் !! அகம் பிரம்மாஸ்மி

No comments:

Post a Comment