மகாபாரதத்தில் வரும் கதை நம் அனைவருக்கும் பொருந்தும்.
துரோனாச்சாரியார் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து என்ன தெரிகிறது என்று கேட்பார், ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது, பறவை தெரிகிறது என்பார்கள். அர்ஜுனனோ, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது என்பான். மற்ற மாணவர்கள் அம்பு விடுகையில் அவை எங்கோ திசை மாறிச் செல்லும், அர்ஜுனனின் அம்புகளோ சரியாக அதன் இலக்கை அடையும். இது அனைவருக்கும் தெரிந்த கதை.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நம் சமூகத்தில் நம்மிடையே நிறைய மோதல்கள் வருகின்றன. முகப்புத்தகத்தில் ஹிந்துக்களின் ஆற்றல் இந்த உள்சண்டையிலேயே கழிந்து விடுகிறது. ஏன் நம் குழுவில் கூட சில விவாதங்களும், கருத்து மோதல்களும் நடைப்பெறுகின்றன. இதனால் நமக்கு ஏதாவது கால் காசுக்கு பயனுள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில்....
சில நாள் முன்பு ஒரு கருத்து மோதல் நடந்ததாய் சொன்னார்கள். நான் வேறு வேலைகள் காரணமாகவும், நம் குழு வலைமனை குறித்து நண்பர்களுடன் ஆலோசனைகள் செய்து கொண்டிருந்தாலும் குழுவிற்கு வரவில்லை. ஒரு நபரை நம் குழு நிர்வாகி, அவரின் தவறான சில நடவடிக்கைகளுக்கு விலக்கி விட்டார் என்று சொன்னார்கள். இது எனக்கு மறுநாள் மாலைதான் மற்ற நிர்வாகிகள் மூலமாக தெரியும். இருந்தும் ஒரு நிர்வாகி என்கிற முறையில் அவருக்கு, சரி தவறுகள் தெரியும். அவர் செய்திருப்பதை மறு பரிசீலனை செய்வது தவறு. அது அவரை குறைத்து மதிப்பீடுவது போல் ஆகும். ஆகையால் அதை குறித்து நான் தலையிடவில்லை. இதை குறித்து ஒரு விளக்கத்தை மட்டும் குழுவில் பதிந்துவிடுங்கள் என்று சொன்னேன்.
இன்று ஒருவர் அந்த விலக்கப்பட்ட நபர் என்னை விமர்சித்து எழுதியுள்ள பதிவின் சுட்டியை காட்டியிருந்தார். அவர் என்னை விமர்சித்து எழுதி இருப்பது தெரிந்தது. நான் அதை சுட்டிக்காட்டிய நபரிடம் இதை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டேன். சமூக காரியங்களில் நாம் ஈடுபடும்போது இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவது இயற்கைதான். நம்முடைய இலக்கு எந்த காரணம் கொண்டும் திசை மாறி சென்று விடக் கூடாது. அர்ஜுனனுக்கு எப்படி மரம் தெரியவில்லையோ, கிளை தெரியவில்லையோ, பறவை தெரியவில்லையோ அது போல நமக்கு இந்த விமர்சணங்கள், வசைகள், ஏளனப் பேச்சுக்கள் ஆகியவை தெரியக் கூடாது. நம் இலக்கு மட்டுமே நமக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் அர்ஜுனன் தன் இலக்கை சரியாக வீழ்த்தியது போல் நாமும் வீழ்த்த முடியும்.
நம் இலக்கை விட்டு நம்மை எந்த காலத்திலும் திசை மாற அனுமதிக்கக் கூடாது நண்பர்களே. நம் இலக்கில் நாம் குறியாக இருந்து விட்டால் நம் வெற்றியை யாரும் தட்டி பறித்து விட முடியாது.

No comments:
Post a Comment