Monday, November 25, 2013

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்:

 
 
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்:

''நாம் உயர்வாக இருக்கிறோம். ஆனால், நம் உதவியைப் பெறுபவர் நம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கிறார் என்று நினைத்து கொள்ளும்போதே செய்யும் உதவி பயனற்றதாகிவிடும்.
தினமும் தூங்கும்போது இன்று நாம் யாருக்காது உதவி செய்திருக்கிறோமா என்பதைப் பற்றி ஒரு நிமிஷமாவது சிந்திக்க வேண்டும்.
ஒருவருக்கு பணத்தால் தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. உடலாலும் மற்றவர்க்கு உதவி செய்யலாம். அதுவும் கூட புண்ணியமானது தான்.......
சம்பாதித்த பின் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப்போடக்கூடாது. அவ்வப்போது செய்வது நல்லது.
இளைஞர்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்காமல், பிறருக்கு தொண்டு செய்து பயனுள்ளதாக்க வேண்டும்.
உடல் வலிமையைக் காட்டிலும் மனவலிமை முக்கியம். ஒழுக்கத்துடன் இருந்தால் மனவலிமையை எளிதாகப் பெறமுடியும்.

காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment