தேவர்களுக்காக கந்தன் மனம் மகிழ்ந்து எல்லாப் பொருள்களிலும் தன் உரு காட்டி விஸ்வரூபம் கொண்டு நின்றான். அக்கருணை தேங்கிய விஸ்வரூபத்தை வீரவாகு தேவர் தரிசித்தார். இரு கரங்களை சிரமேற் தூக்கிக் கூப்பினார். ஆனந்தக் கடலில் ஆழ்ந்து தோத்திரம் செய்தார்.
``எப்பொருளுக்கும் மூலாதாரமான குரு மூர்த்தமே உமது விஸ்வரூபத்திலே அண்டாண்டபுவனங்களும் சப்தமென்று சொல்கின்ற சாகரங்களும், மேகங்களும், மண்டலங்களும், புரிகளும், தீவுகளும், ரிஷிகளும், மலைகளும், சீரஞ்சீவியர்களும், அஷ்டமென்று சொல்கின்ற திக்குபாலகரும், கெஜங்களும், குலாசல பருவதங்களும்,
நாகங்களும் வசுக்களும், ஏகாதசருத்திரரும், துவாதசா சித்தர்களும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், பதினெண்கணங்களும், நாற்பத்திரண்டு சக்திகளும், நவக்கிரகங்களும், இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரனும், ஐம்பத்து மூன்று தீர்த்தங்களும்,
நான்கு வேத ஆறு சாஸ்திர பதினெண் புராண இருபத்தெட்டாகம தொண்ணூற்றாறுதத்துவம், அறுபத்து நான்கு கலைஞானங்களும், சாலோக சாமீப சாரூப சாயுச்சியமாகிய நான் பதவிகளும் உமது திருவுருவத்திலே பிரகாசிக்கின்றன. உமது ஸ்ரீ விபூதியின் அருமை பெருமைகளை என் ஒரு நா எடுத்துச் சொல்லுந்தரமன்று.
ஓ! வண்டுகள் மதுவுண்டு இன்னிசை பாடுகின்ற கடம்பமாலையைத் தரித்த கந்தனே! உமது விஸ்வரூபத்தை மறைந்தருள வேண்டும் என்றனர். குமரனும் அஞ்சேலென வீரவாகு தேவரை ஆதரித்துத் தமது விஸ்வரூபத்தை யொழித்து முன் போல் ஆறுமுகத்துடன் பிரகாசித்திருந்தார்.

No comments:
Post a Comment