Thursday, November 14, 2013

மறுபிறப்பு இருக்கா இல்லையா ????

மறுபிறப்பு இருக்கா இல்லையா ????

மறுபிறப்பு மட்டுமில்லை முற் பிறப்புகளும் உண்டு,, இப்போது இன்னொன்று தெளிபடுத்த விரும்புகிறேன், நீங்கள்,, நான்,, என்று சொல்வது நமது உடலை தான், நமது உடல் பல கோடி அணுக்களால் ஆனது, இந்த அணுக்கள் அனைத்தும் நாம் பூமியில் இருந்து உணவு சுவாசம் உட்கொள்ளுதல் மூலமாக தான் சேகரிக்கிறோம், இறந்த உடன் ஒரு அணு கூட பாக்கி இல்லாமல் பூமி எடுத்து கொள்ளும், என் உடம்பில் இருக்கும் அணுக்கள் நாளை ஒரு புழுவுக்கு இரையாகலாம் அப்போது என்னில் ஒரு சிறு பகுதி புழுவாக மாறிவிடும், அதே புழுவை பறவை கொத்தி செல்லலாம், இப்போது நான் பறவையின் ஒரு சிறு பகுதி, நான் மற்றும் நீங்கள் இங்கே தான் இருக்கிறோம் இறந்தாலும் சரி பிறந்தாலும் சரி நாம் உடம்பாக கொண்டிருப்பது இங்கிருந்து தான் பெறப்பட்டது இங்கு தான் விட்டுச்செல்லப்படும்,, மொத்தமாக ஒரு வரியில் சொன்னால் இதற்கு பெயர் தான் 'லா ஆப் கன்சர்வேஷன் ஆப் மாஸ் ஆர் எனெர்ஜி' (Law of Conservation of mass/ energy)

No comments:

Post a Comment