Friday, November 15, 2013

கடும் சோதனைகள் வருவது ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள் என்று வருத்த படுகின்றீர்களா ? இறைவன் இருக்கின்றான் பயப்படவேண்டாம்..

கடும் சோதனைகள் வருவது ஏன்?

ஆப்பிரிக்காவிலுள்ள செவ்விந்தியர் என்னும் பழங்குடி மக்கள் வீரம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் உண்டு. அவர்களுடைய தலைவனை வாரிசு அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். எனவே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனக்குப் பின் பொறுப்பேற்க இருக்கும் தன் பிள்ளைக்கு, சிறுவயதில் இருந்தே பலவிதமான சோதனைத் தேர்வுகளை நடத்தி, அவர்களை தலைமைப் பதவிக்கு தயார் செய்வார்கள். அந்த இளைஞர்கள் அப்போது கடுமையான சோதனைகளைச் சந்திப்பார்கள். ஒருமுறை ஒரு தலைவன் தன் மகன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்ததும், அவனை அமேசான் காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு அமாவாசையன்று இருளில் தன்னந்தனியாக விட்டு வந்து விட்டான். அந்த இரவு முழுவதும் அவன் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குகொடுக்கப்பட்ட சோதனைப்பயிற்சி. அங்கு மிருகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றின் உறுமல் சத்தம் பயங்கரமாக இருந்தது. இதுவரை தந்தையின் அணைப்பில் இருந்த அந்தச்சிறுவனுக்கு, ""இப்போது ...தனிமையில் இருக்கிறோமோ! என்னாகுமோ?'' என்ற சிந்தனை ஒரு பக்கம். ""இந்தத் தேர்வில் மட்டும் ஜெயித்துவிட்டால், நாளை நான் செவ்விந்தியர்களின் தலைவன் ஆகிவிடுவேனே!'' என்ற ஆவல் மறுபுறம். ஒருவழியாக இரவுப்பொழுது கடந்துவிட்டது. வானம் வெளுத்து லேசான வெளிச்சம் படர்ந்தது. அந்த இளைஞன் தான் இருந்த இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான். தூரத்தில் தன் தந்தை வில்லை நாணேற்றி நின்று கொண்டிருந்ததைக் கண்டான். ""அப்பா! இரவெல்லாம் இங்கேயா இருந்தீர்கள்? என்னைத் தனியாய் விட்டுவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!'' என்றான் மகன். அந்த தந்தை அவனிடம், ""உன்னை பயமற்ற தலைவனாக்குவது என் கடமை. அதே நேரம் உன்னைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்குண்டு. அதனால் தான் உன்னை மிருகங்கள் ஏதும் தாக்காதபடி மறைந்து காவல் நின்றேன்.'' என்றான். இந்த தகப்பனின் இருத யத்தைப் போலத் தான் நம்மையெல்லாம் பாதுகாப்பதாக ஆண்டவரின் இருதயமும் உள்ளது. அவரது பிள்ளைகளான நம்மை சிம்மாசனத்திற்கு உயர்த்தும்படியான தகுதிகளை நாம் பெற்றுக்கொள்ள நம்மைக் "கடுமையான சோதனை' என்னும் பாதையில் அவர் வழிநடத்துகிறார். அவற்றில் இருந்து மீளும் பயிற்சியைத் தருகிறார். சில சமயங்களில் அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளைகளில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயிருக்கின்றன. எனவே, சோதனைகளை பயமின்றி கடந்து சாதனையாக்குவோம்.

1 comment:

  1. அதிஷடவசமாக இன்றுதான் உங்கள் ப்ளாக் பற்றி என்நண்பர் திரு.ஆவுடமாலிக் அவர்கள் பகிர்தல்மூலம் அறிந்தேன். இப்போதும் நீங்கள் கூறியபடி நான் ஒரு குழம்பிய மனநிலையில்தான் இருக்கிறேன் என்றாலும் உங்கள் மேற்குறிப்பிட்ட விளக்கம் எனக்கு ஒரு சிறு ஒளிக்கீற்றை தந்தது என்றால் அது மிகையில்லை. உங்களோடு மேலும் நட்பு பெற விழைகிறேன். உங்கள் நட்பை விரும்பும் இரா. கணேசன்

    ReplyDelete