செய்வினை தோஷம் நீங்க, ஏதாவது சக்தி மிக்க பரிகாரம் கூறுங்கள்.
நாம் முற்பிறவியில் செய்த தவறுகளே "செய்வினை' என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதன் விளைவு தான், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள். இதன் தொடர்பானதே, பிறர் நமக்கு செய்யும் மந்திர, தந்திரச் செயல்கள். திருஞான சம்பந்தர் முன்வினைத் துன்பம் நம்மைத் தீண்டக் கூடாது என்பதற்காக, திருநீலகண்ட பதிகம் பாடியுள்ளார். "செய்வினை நம்மைத் தீண்டப் பெறா- திருநீலகண்டம்' என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். திருவள்ளுவர் குறிப்பிடும் "ஊழ்வினை' என்பதும் இதை குறிக்கும். பொதுவாக பிறர் நமக்காகச் செய்யும் தீய செய்வினைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மேற்கூறிய சம்பந்தர் தேவாரமும், ராகு கால துர்க்கை வழிபாடும் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாகும்.
No comments:
Post a Comment