ஏதாவது கேட்டு, பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கும் குழந்தைகளை, ""ஏன் இப்படி!
மரம் மாதிரி நிக்கிறே!'' என்பதுண்டு. இனி அப்படி திட்டாதீர்கள். ஏனெனில், ஆண்டவன்
கூட மரமாகி மாறி நின்ற அற்புதம் உண்டு. திருமாலின் புதல்விகளான அமுதவல்லி,
சுந்தரவல்லி ஆகியோர் முருகனை மணந்து கொள்ள தவமிருந்தனர். இளையவள் சுந்தரவல்லி,
வேடர் தலைவன் நம்பிராஜனின் மகளாக வள்ளி என்ற பெயரில், தென்மலைக் காட்டில்
வளர்ந்தாள். அவளை மணம் புரிய தினைப்புனத்திற்கு வந்தார் முருகன். அவளின் அழகும்,
தேனினும் இனிய குரலும் கண்டு மெய் மறந்து மரமாகி நின்றார். இதனை,""வெற்றி வேலவனே!
நீ புருவத்தை நெறித்தாலே அசுரப்படை அனைத்தும் பொடிப் பொடியாக நொறுங்கி விடுமே!
அப்படிப்பட்ட சக்தி கொண்ட நீ, வள்ளியின் காதலுக்காக மரமாகி நிற்கிறாயே'' என்று
கேட்கிறார் பாரதியார்.
No comments:
Post a Comment