Wednesday, May 7, 2014

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக (லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும்

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக (லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். அப்போது உடலில் ஹ்ரீயும் (வெட்கமும்) உண்டாக வேண்டும்'' என்கிறது "தைத்திரீயோபநிஷத்' என்னும் <நூல். தானம் கொடுப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது சரி. ஏன் வெட்கப்பட வேண்டும் என்று எண்ணலாம். இந்த வெட்கம், கவுரவக் கூச்சத்தால் உண்டாவதாக இருக்க வேண்டும். தன்னை நாடி வந்தவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்க முடியவில்லையே என்பது ஒருபுறம். தானம் செய்வது வெளியில் நாலுபேருக்குத் தெரிந்து பாராட்டத் தொடங்கினால், "நான்' என்ற எண்ணம் வந்து விடுமே என்பது மறுபுறம். இப்படி இருவித வெட்கம் உண்டானால் அது நிஜமான தானமாக இருக்கும். தானம் கொடுக்கிறோம் என்று கருதாமல், "நம்மை இவ்வாறு கொடுக்க வைத்த கடவுளுக்கு நன்றி' என்ற உணர்வோடும் தானம் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment