Monday, November 27, 2017

திபாவளி ஸ்நானம்

திபாவளி ஸ்நானம்.
அபாமார்கமதோ தும்பீம் ப்ரபுன்னாடமதாபராம்
ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாயவை
அபாமார்கலதே தேவி அபவர்கப்ரதேஸுபே
அலக்ஷ்மீம் நாசயமே கேஹே ம்ருத்யும் வாரயவாரய போ
ஸீதாலோஷ்டஸமாயுக்த ஸகண்டகதளான்வித
ஹரபாபமபாமார்கம் ப்ராம்யமாண: புந: புந:
என்கிற வாக்கியத்தின்படி அபாமார்கம் என்னும் நாயுருவிக்கொடி அல்லது தும்பீ என்னும் சுரைக்காய் இலை கொண்டு 3முறை தலையை சுற்றி வாசலில் எறிந்து பிறகு
ஆஷ்வயுக் கிருஷ்ணபக்ஷஸ்ய சதுர்தஸ்யாம் விதூதயே
திலதைலேநகர்தவ்யம் ஸ்நானம் நரகபீருணா
என்கிற வாக்கியத்தின்படி ஐப்பசி கிருஷ்ண சதுர்த்தசியில்
நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் கங்கா ஸ்நானம் செய்து நீராடி புத்தாடை அணிந்து மனத்துக்கினியானை பாடி ஏழ்மை துக்கம் விரோதி இவைகள் நீங்கி லக்ஷ்மீ கடாக்ஷம் பெருகி நீரும் உம்மை சேர்ந்தவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ  பிரார்த்திக்கிறேன்.
🌺🔱 ஸ்ரீ ஞானாக்ஷி வித்யாலயம் 🔱🌺
சிவஸ்ரீ.Dr. V. கார்த்திகேய சிவாச்சாரியார்,BA, MBA, Phd.
ஸ்ரீ வித்யா உபாசகர்,ஸ்ரீ வித்யா கேந்திரம்,சென்னை.103

No comments:

Post a Comment