Sunday, November 26, 2017

சிவாலயங்களில் ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மரபே பூஜை செய்யவேண்டும்.

சிவாலயங்களில் ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் மரபே பூஜை செய்யவேண்டும். அவர்களுக்கே அதிகாரம் உள்ளது என்று ஆகமங்களும், திருமுறைகளும் கூறுகின்றன.
   சைவசமய நூல்கள் கூறுவதோடு அல்லாமல் வீரசைவ நூல்களும் இதனை வலியுறுத்துகின்றன.
  14 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரசைவ அருளாளர் ஸ்ரீ ஆதிசிவப்பிரகாச சுவாமிகள்.இவர்கள் வீரசைவ மரபை, தத்துவங்களை விளக்கும் பல நூல்களை அருளியுள்ளார்கள்.அவற்றில் தலையாய நூல் //அத்துவித வெண்பா // என்பது.இது புகழ்பெற்ற வீரசைவ அருள்நூலாகும்.
 இந்நூலில்,
"ஆன பரார்த்தமொன்றொன் றான்மார்த்த மாமென்னத்,
தானினிய சைவநூறானுரைக்கும் -மான வினை
தாமிரண்டும் பூசிப்பர் தங்குஞ் சிவத்துவசரானவர்,
 கள் என்றே அறி " (பாடல் 96)
  அதாவது பரார்த்தம், ஆன்மார்த்தம் என்று இருவித பூஜை கள்.இதில் ஆன்மார்த்தம் தீக்ஷை  பெற்றோர் அனைவரும்  செய்யவேண்டியது, .பரார்த்தம், ஆன்மார்த்தம் என்ற இரண்டும் செய்யும் அதிகாரம் சிவத்துவிஜர் என்ற ஆதிசைவர்களுக்கு உரிமையானது.
"சொல்லுஞ் சிவத்துவசர்  சொற்றவிரண் டர்ச்சனைக,
ளல்லலறச் செய்த லறமாகு -மல்லாதா
ராம்வருண நாலினுக்கு மான்மார்த்த. பூசை செய்ய,
யாம்பரிவா லேயுரைத்த தாம் " (பாடல் 97)
 அதாவது "சிவன் முகத்தில் உதித்த சிவத்துவிஜரே் ஆன்மார்த்தபூசை, பாரார்த்தம் என்ற கோயில் பூஜை  ஆகிய இரு பூஜைகளும் செய்வது அறமாகும்.
 மற்ற நால்வருணமாகிய பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், ஆகியவர்கள் ஆன்மார்த்தம் மட்டும் செய்வதே அறம்.
"ஓதுகின்ற நால்வருணத் துற்றவர்தாஞ் சுத்தரென,
வோதும் பரார்த்தத்தைப் பூசிக்க -னீதிக்கு
பஞ்சமதாம் பூமிமிகும் பார்வேந்தர்க் கிளனாவா,
மஞ்சப் புவி கலகமாம், "-(பாடல் 98).
அதாவது வேதாகமங்களால் சொல்லப்பட்டவண்ணம், பிராமணர் உள்ளிட்ட நால்வர்ணத்தாரும் ஆகமப்பிரகாரந் தீட்சாசுத்தர்களாகாய், சுத்தசைவர்களாய் இருக்கினும், முன்சொல்லப்பட்ட, பரார்த்தம் என்ற ஆலய பூஜை செய்வார்களாயின்,
 நீதிகுன்றும் -
         தர்மம், அறம் தோற்க்கும்.அழியும்.
 பஞ்சம தாம் பூமிமிகும் -  
        மழையின்மையால் பஞ்சம்      ஏற்ப்படும்.அல்லது அதிக மழையால் பூமி அழியும் .
பார்வேந்தர்க்கு இன்னாவா-
        அத்தேசத்தை  ஆளும் அரசர்க்கு வாராத துன்பங்கள் எல்லாம் வரூம். மரணம் ஏற்படும்.
 மஞ்சப் புவி கலகமாம் -
      அத்தேசத்தில் சகல உயிர்களும் பயத்தோடு வாழும். புதுப் புது கலகம் ஏற்படும்.
 எனவே நமது சமயநூல்கள் அனைத்தும் ஆதிசைவர்க்கே ஆலயபூஜை அதிகாரம் என்று கூறுகின்றது.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.

No comments:

Post a Comment