Friday, July 8, 2011

மாத விடாய் காலத்தில் பூ வைக்கலாமா?

வெள்ளிக்கிழமைகளில் மற்றும் விழாக்காலங்களில் பூ வியாபாரிகள் பூவை கூவிக் கூவிக் விற்றுக் கொண்டே வீதிகளில் செல்வார்கள்.கதவைத் திறந்து நாம் பார்க்கும் பொழுது, பூ வேண்டுமா என்று கேட்பார்கள். நாம் பூவை வேண்டாம் என்று சொல்லக்கூடாது.
நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று தான் செல்ல வேண்டும். மேலும், மாத விலக்கு காலங்களில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, மல்லிகைப்பூ அதிக வாசனையைக் கொடுக்கும். மோக உணர்ச்சிகயையும், போக உணர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே தான், சாந்தி முகூர்த்த அறையில் கட்டிலில் மல்லிகைப்பூக்களை தூவியும், தொங்கவிட்டும் வைத்திருப்பர். எனவே, அது போன்ற பூக்களை மாத விலக்கின் போது வைத்துக் கொள்ளக்கூடாது என்பது கிராமப்புற பெண்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment