Saturday, July 30, 2011

புதன் வழிபாடு

புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை போன்றது புதன். இது வெட்ட வெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது.
புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால் புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்ப நிலையின் நெடுக்கம் 183 சி முதல் 427 சி வரை உள்ளது என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.அவர் மேலும் கூறியதாவது:
புதன் தசை நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் என்ன?
ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரர்கள் என்று கூறுவர். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சிறப்பாக வலுவாக இருந்தால் அவர்களுக்கு புதன் தசை நடக்கும் போது உலகமே போற்றக்கூடிய வளர்ச்சி கிடைக்கும். உலகப் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே இருந்துள்ளனர்.
அவர்களிடம் ஞாபக சக்தி அதிக அளவில் காணப்படும் ஜாதகத்தில் புதன் நன்றாக அமையப் பெற்ற ஜாதகர், எந்தத் துறையில் இருந்தாலும், புதன் தசை நடக்கும் போது அந்த துறையில் பல அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றம் அடைவார். அவர் ஆசிரியராக இருந்தால் பயிற்றுவிக்கும் விதத்தில் உள்ள தனித்தன்மை காரணமாக மாணவர்கள் மத்தியில் பெருமை செல்வாக்கை பெறுவார்.
கணினித் துறையில் கடைநிலை ஊழியராக இருந்தாலும் புதன் தசை நடக்கும் போது அவரால் டீம் லிடர், புராஜக்ட் தலைவராக உயர முடியும். மூளையின் செயல்திறனை புதன் தசை விரைவுபடுத்தும் மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட புதன் ஆதிக்கம் பெற்றவர்கள் மனதிலேயே போட்டு விடை கூறுவர்.
ஒருவர் ஜாதகத்தில் புதன் நன்றாக அமைந்து, புதன் தசை நடந்தால் அவருக்கு சோர்வு என்பதே தெரியாது. குறைந்தளவு உணவு உட்கொண்டாலும் சோர்வின்றி உற்சாகமாக பணியாற்றுவர். கூட்டு முயற்சிகளை ஆதரிக்கும் மன்ப்பான்மை அப்போது ஏற்படும் .மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் புதன் தசை நடக்கும் சமயத்தில் அபார வளர்ச்சி காண்பர் என்கிறார் விஜய்சுவாமிஜி.
பேச்சாற்றல் தருபவர்:
கிரக பலனைத் தருவான் யாரோடும் சேராதிருந்தால் சுபபலனைத் தருவான் புதன். கிரகங்களில் அலி இவன் வித்தைகளில் ஜோதிடம் இவனுக்கு விசேசமானது. ஒரு ஜாதகர் வாக்குவன்மை பிரசங்க ஆற்றல் பெறுவதற்கு புதன் நல்ல அம்சத்தில் இருக்க வேண்டும்.
தாய் மாமன் உதவிகளை பெறுவதற்கும் வியாபாரத்தில் திறமை புரோக்கர் ஏஜென்சி தபால்துறை வங்கித்துறை போன்றவற்றில் சிறந்த தலைமை பதவி வகிப்பதற்கு புதனே காரணம். விளையாட்டு ஸ்தலங்களை விரும்பி அங்கே வசிப்பதற்கும் தோட்டங்களில் நாட்டம் உண்டாகி தோட்டங்களை வளர்ப்பதற்கும் புதனே காரணமாகும்.
நரம்பு கோளாறும் புதனும்:
உடலில் நரம்பு புதன். நரம்பு அமைப்பு முறையில் ஆதாரம் இவன். புதன் சரியில்லை என்றால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டவனாக இருப்பான். குறிப்பாக தலைவலியில் மைக்ரான் என்ற சொல்லக்கூடிய நோயும் கழுத்து வலியில் இன்று கழுத்துக்கு சில போகாலர் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கும் புதன் சரியில்லாததே காரணம்.
கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்து வரை சென்று குடும்பங்கள் பிரிகின்றன. இதற்கு முக்கிய காரணம் புதன் பகவான் சரியில்லாததே காரணம். ஒரு பொருளை வைத்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடல் எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் செய்வது சபை அறியாமல் பேசுவது சுவையான உணவு கிடைக்காமல் போவது போன்றவற்றிற்கு புதன்பகவான் சரியில்லாததே காரணம்.
பச்சை நிற ஆடை:
நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும்.புதனின் ஆற்றல் பெற ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிய வேண்டும். ரத்தினங்களில் மரகத கல் அணிய வேண்டும். பித்தளை பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். உணவு வகைகளில் உவர்ப்பு சுவைகளை உண்ண வேண்டும்.
மாதுளை பேரிச்சை, திராட்சை, முந்திரி கேப்பை கூழ் செய்து சாப்பிட வேண்டும். பாசிப்பயறு வகைகளை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம்.வாயு கிரகத்தை வழிபாடு செய்வதாலும் நாயுருவி சமித்துகளால் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும் பச்சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள்பெறலாம்

No comments:

Post a Comment