Saturday, July 23, 2011

பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி?

பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.
கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களை நமஸ்காரம், செய்யம் கூடாது. கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது. வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது. சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில் சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள். உறவினர் இறந்தற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம் செய்யக்கூடாது. பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

No comments:

Post a Comment