Saturday, July 23, 2011

ஆடியில் திருமணம் நடக்காதது ஏன்?

ஆடியில் தெய்வங்களுக்கு திருமணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சுவாமி - அம்மன் திருமணம் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படும். தெய்வங்கள் எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்டவை. ஆனால், மனிதனுக்கு ஆடியிலும், மார்கழியிலும் திருமணம் செய்ய தடை விதித்தனர். இதற்கு ஆன்மிக காரணங்கள் ஏதுமில்லை. அறிவியல் ரீதியாக இந்த மாதங்களில் மனிதனை நோய்கள் தாக்கும் என கருதப்பட்டது. ஆடியில் காற்றால் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படும். இது ஆண்களை கடுமையாகத் தாக்கும். பெண்களைப் பொறுத்தவரை ஆடியில் கர்ப்பமாகும் பெண் சித்திரையில் குழந்தை பெறுவாள். அப்போது கடும் கோடை அந்த வெப்பத்துடன் தனக்கு தரப்படும் வெப்பமான பிரசவ மருந்துகளையும் சாப்பிடுவது உடலை மிகவும் வருத்தும். இதனால் தான் ஆடியில் திருமணம் நடத்துவதில்லை. மார்கழியில் அதிக குளிரால் ஜலதோஷம், ஆஸ்துமா முதலியன வரும். அதன் காரணமாக மார்கழியையும் தவிர்த்தனர்.

No comments:

Post a Comment