Friday, July 22, 2011

துளசி- திருநாமங்களின் பொருள்....

பிருந்தா - ஓரிடத்தில் (துளசிவனத்தில்) நெருங்கி வளர்பவள்.
பிருந்தாவனீ - பிருந்தாவனந்தோறும் இருப்பவள்.
விச்வபூஜிதா - அனைத்து பிரபஞ்சங்களிலும் பூஜிக்கப்படுபவள்.
விச்வபாவனீ - அளவற்ற பிரபஞ்சத்தை பரிசுத்தம் செய்பவள்.
புஷ்பஸாரா - தேவர்களுக்கு, மற்ற புஷ்பங்களை விட சந்தோஷத்தை உண்டாக்குபவள்.
நந்தனீ - அடைந்த மாத்திரத்தில் ஆனந்தத்தை உண்டாக்குபவள்.
துளசி - எவ்வுலகிலும் தனக்கு சமமான ஸ்த்ரீகள் இல்லாதவள்.
கிருஷ்ணஜீவனீ - கிருஷ்ணரின் ஜீவனாக இருப்பவள்

No comments:

Post a Comment