Monday, July 25, 2011

அட்சய திரிதியையன்று செய்யும் சுபநிகழ்ச்சிகள்

அட்சய திரிதியை ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள். அன்று நாம் செய்யும் தானதர்மம் நூறு மடங்கு பலன் தரும். தயிர் சாதம், குடை, காலணி ஆகியவை தானம் செய்யலாம். செய்ய வேண்டிய சுப நிகழ்ச்சிகள்: புனித நீராடல், வீடு, மனை, கிணறு சீர்திருத்தம் செய்தல், சாஸ்திரம் மற்றும் புதிய கல்வி பயில்தல், பதவி உயர்வு பெற்றவர்கள் புதிய இடத்தில் பொறுப்பேற்றல், பாங்குகளில் டெபாசிட் செய்தல், புத்தகம் வெளியிடுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், புதிய தொழில் துவங்குதல், நகைகள் வாங்குதல், பெற்றோர், பெரியோர், மகான்களிடம் ஆசி பெறுதல், நெல், கரும்பு, மஞ்சள், கடலை பயிரிடுதல், தானதர்மம் செய்தல், உண்மையான நண்பர்களை சந்தித்து மகிழ்தல்.

No comments:

Post a Comment