Tuesday, July 26, 2011

தேவாரம் - பெயர் விளக்கம்

சிவபெருமானை வேண்டி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் எனப்படுகிறது. தேவன், ஆரம் என்னும் வார்த்தைகளின் தொகுப்பே தேவாரம் ஆகும். தேவனாகிய இறைவனுக்கு மாலை போல சூட்டப்பட்ட பாடல் என்பது இதன் பொருளாகும். தேவாரம் பாடிய மூவரும் சிவபெருமான் அருள்புரியும் திருத்தலங்களுக்கு சென்று இப்பாடல்களைப் பாடினர். இவர்கள் சென்ற தலங்கள் மட்டுமின்றி, அங்கிருந்தே வேறு தலங்களில் அருள்புரியும் சிவனைப்பற்றியும் பாடியுள்ளனர். இவ்வாறாக பாடப்பெற்ற தலங்கள் தேவார வைப்புத்தலங்கள் எனப்படும். 276 (முன்பு 274 மட்டுமே இருந்தது. சமீபத்தில் இரண்டு தலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன) தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், 255 தேவார வைப்புத்தலங்களும் உள்ளன

No comments:

Post a Comment