Monday, July 25, 2011

சித்தர் பவுர்ணமி தெரியுமா?

சித்திரை மாத பவுர்ணமி நாளில் சந்திரன் முழு வலிமை பெற்று தன் முழுக்கிரணத்தையும் பூமிக்கு அளிக்கின்றான். சந்திரனிலிருந்து வரும் அந்த ஒளியினால் பூமியிலிருந்து ஒருவகை உப்பு பூரித்துக்கிளம்பும். இது மருந்துகளும் வீரியத்தைத் தரும் சக்தி பெற்றிருப்பதால் மருத்துவத்துறைகளிலும் ரசாயனத்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நரை, திரை முப்பற்ற நலமிக்க உடலைத் தரும் வலிமை வாய்ந்த இந்த உப்பு சித்திரை மாதத்து பவுர்ணமியில் கிடைப்பதை முதன் முதலில் சித்தர்களே கண்டுபிடித்ததால், சித்திரை மாத பவுர்ணமியை சித்தர் பவுர்ணமி என்றும் அழைத்தனர்.

No comments:

Post a Comment