எல்லா தேவர்களும் ஹோமம் செய்து அளிக்கும் பொருள்களை, அந்தந்த தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கும் வேலை தனக்கு வேண்டும் என்று அக்னி பகவான் ஒரு யாகம் செய்தார். யாகப்பயனாய் அந்த வேலையும் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து செய்த வேலையால் அலுப்பு தட்டியது. வேறு யாராவது இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி தேவர்களை வேண்டினார். தேவர்கள் யாரும் முன்வரவில்லை. வேலையை விட்டு ஓடினார். தேவர்கள் அக்னிதேவனைத் துரத்தினர். உடனே ஒரு அஸ்வமாய் (குதிரையாய்) மாறி அரசமரப் பொந்தினுள் புகுந்து கொண்டார். தேவர்கள் அரச மரத்து குச்சிகளை எடுத்து யாகத்தீயை வளர்த்தனர். அதுமுதல் அரசமரத்திற்கு குதிரை மரம் என்று பொருளில் அஸ்வத் மரம் என்ற பெயர் உண்டானது, அதன் குச்சிகளே சமித்து என்று யாகம், சிரார்த்தம், ஹோமம் போன்ற எல்லாவற்றிலும் பயன்படுத்த தொடங்கினார்கள். கீதை சொன்ன கண்ணனும் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். மரங்களின் அரசனாக அரசமரம் திகழ்கிறது.
No comments:
Post a Comment